குழந்தை பராமரிப்பு, குழந்தை வளர்ப்பு, குழந்தைகளுக்கான உணவு, குழந்தைக்கு தாய்ப்பால் போதவில்லை என்று எப்படி அறிவது?, தாய்ப்பால், பச்சிளம் குழந்தை, பணிபுரியும் பெண்கள்

அபார்மெண்ட் குழந்தைகளை அதிகளவில் தாக்கும் வலிப்பு நோய்!

019

சமீபத்தில் சென்னை குழந்தைகளிடம் நடத்தப்பட்ட  சத்துக்குறைபாடு பற்றிய ஆய்வறிக்கை ஒன்று வெளியானது. இதில் பாதிக்கும் அதிகமான குழந்தைகள் விட்டமின் டி குறைபாட்டுடன் இருப்பது தெரிந்தது. விட்டமின் டி, உடல் வளர்ச்சிக்கு தேவையான முக்கியமான விட்டமின்.

குழந்தைகளுக்கு ‘விட்டமின் டி’ சத்து இல்லாமல், உடலில் கால்சியத்தின் அளவு குறையும்போது, வலிப்பு வர வாய்ப்பு உள்ளது. ‘விட்டமின் டி’-யை நாம் சூரிய ஒளியைத் தவிர வேறு எந்தப் பொருளில் இருந்தும் பெற முடியாது. சூரிய வெளிச்சம் நம் மீது படும் போது, அதன் உதவியுடன் நமது உடல் ‘விட்டமின் டி’-யை உற்பத்தி செய்துகொள்கிறது. அதற்கு, இளங்காலை வெயில் தேவை. ஆனால், இப்போது அதிகரித்துவரும் அபார்ட்மென்ட் சிஸ்டத்தில், எல்லோர் வீடுகளிலும் ஜன்னல்கள், கதவுகளை பெரும்பாலும் அடைத்தே வைத்திருக்கிறார்கள். சூரிய வெளிச்சத்தை உள்ளே விடுவதே இல்லை. பல வீடுகளில் படுக்கை அறைகள் குளிர்சாதன வசதி செய்யப்பட்டு விடுவதால், சுத்தமாக சூரிய ஒளி தடை செய்யப்பட்டுவிடுகிறது. அதனால், மூடிய அறைகளுக்குள்ளேயே இருக்கிற குழந்தைகளின் உடலில் ‘விட்டமின் டி’ குறைந்து, கால்சியம் பற்றாக்குறை ஏற்படுகிறது.

தாய்ப்பால் குடிக்கிற சிசுக்களுக்குக்கூட ‘விட்டமின் டி’ குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. வேலைக்குச் செல்கிற பல அம்மாக்களும் பகல் முழுக்க ஏ.சி. அறையிலேயே இருக்கிறார்கள். கார்களில் சூரிய ஒளியை வடிகட்டும் ‘டின்ட்டட்’ கிளாஸ் போட்டுக் கொள்கிறார்கள். இப்படி சூரிய வெளிச்சமே தோலில் படாமல் வாழும் பெண்களுக்கு கிடைக்காத ‘விட்டமின் டி’, அவர்கள் தரும் தாய்ப்பாலிலும் இருப்பதில்லை.

பச்சிளம் குழந்தைகளுக்கும் வெயில் அவசியம். 7 மணியிலிருந்து 8 மணிக்குள் அடிக்கும் இதமான காலை வெயிலில், குழந்தையை வைத்துக் கொண்டு உட்கார்ந்திருக்கலாம். அந்த வெயில், ‘விட்டமின் டி’ உற்பத்தியாக உதவும். இதனால், குழந்தையும் ஆரோக்கியமாக வளரும்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.