கண் பாதுகாப்பு, கான்டாக்ட் லென்ஸ்கள், நோய்நாடி நோய்முதல் நாடி!, மருத்துவத் தொடர், மருத்துவம், ரஞ்சனி நாராயணன்

வண்ணத் தொடுவில்லைகளை அணியும்போது இவற்றை கவனியுங்கள்!

நோய்நாடி நோய்முதல் நாடி – 29

ரஞ்சனி நாராயணன்

ரஞ்சனி
ரஞ்சனி

ஐஸ்வர்யா ராய் தன் அழகால் நம்மை கவர்ந்தார் என்றாலும் அவரது கண்களின் வித்தியாசமான நிறம் எல்லோரையும் கவர்ந்தது என்று சொல்லலாம். 90 களில் ஒரு குளிர்பான விளம்பரத்தில் ஆமீர்கானுடன் இவர் தோன்றியபோது இவரது கண்களின் நிறமே மற்றவர்களிடமிருந்து இவரைப் தனித்துக் காட்டியது. எத்தனை பேரால் இவரைப் போல உலக அழகியாக முடியும்? ஆனால் இவரது கண்களைப் போல நம் கண்களையும் மாற்றிக் கொள்ளலாம் – வண்ணத் தொடுவில்லைகள் அணிவதன் மூலம் (color contact lens).

இந்த வண்ணத் தொடுவில்லைகள் உங்கள் கண்களின் வண்ணத்தை மட்டுமல்ல, உங்கள் உருவத்தையும் மாற்ற வல்லவை. இவைகளை அணிந்துகொல்லுவதன் மூலம் சாதுவானவர்களை தைரியமானவர்களாக, அல்லது வில்லன், வில்லிகளாக  மாற்றலாம். ஏற்கனவே வில்லன் வில்லி என்றால் சாதுவாகக் காட்டமுடியுமா, தெரியவில்லை. புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு வண்ணத் தொடுவில்லைகளை அணிந்துகொண்டு போய் உங்கள் நண்பர்களை அசத்தலாம்.   சாதாரண தொடுவில்லைகளை விட இவை அதிக விலையுள்ளவை. ஆனாலும் இந்த தொடுவில்லைகளை அணிந்து தங்கள் கண்களின் வண்ணத்தை மாற்றிக் கொள்வதை நிறைய பேர் விரும்புகிறார்கள். மேலைநாடுகளில் அவர்களது தோலின் நிறம் வெளுப்பாக இருப்பதால் அவர்களது கண்களும் பச்சை வண்ணத்தில் இருக்கும்.

இந்தியர்களாகிய நமக்கு இயற்கையாகவே கருப்பு அல்லது அடர்த்தியான பிரவுன் வண்ணத்தில் கண்கள் அமைந்திருக்கின்றன. இதனால் சற்று அடர்த்தியான வண்ணத் தொடுவில்லைகளை அணிவது பொருத்தமாக இருக்கும். Hazel, amethyst, பிரவுன், க்ரே (சாம்பல் நிறம்) ஆகிய வண்ணங்களில் இந்தத் தொடுவில்லைகள் கிடைக்கின்றன. ஆனால் ஐ. ராய் போல நான் தனித்துத் தெரியவேண்டும் என்று நினைப்பவர்கள் நீலம், பச்சை, வயலட் போன்ற நிறங்களில் கிடைக்கும் தொடுவில்லைகளை அணிந்து மகிழலாம்.

வண்ணத் தொடுவில்லைகளை அணியும்போது கவனிக்க வேண்டியவை:

 • கண் மருத்துவரின் பரிந்துரைபடியே வண்ணத் தொடுவில்லைகளையும் அணிய வேண்டும்.
 • மற்றவர்கள் பயன்படுத்தும், பயன்படுத்திய தொடுவில்லைகளை அணியவேண்டாம். உங்கள் தொடுவில்லைகளை உங்கள் நண்பராக இருந்தாலும் கொடுக்காதீர்கள். இந்த விஷயத்தில் give and take வேண்டாம்!
 • இப்படி செய்யாதிருப்பதன் மூலம் கெடுதல் விளைவிக்கக்கூடிய பாக்டீரியாக்களின் தொற்றிலிருந்து உங்கள் கண்களைக் காக்கலாம்.   சிலசமயங்களில் பிறரது தொடுவில்லைகளை அணிவதால் கண்பார்வையை இழக்கக் கூடிய அளவிற்கு தொற்று நோய் ஏற்படலாம். அதனால் இன்னொருவருடையதை அணிய வேண்டாம். உங்கள் தொடுவில்லைகளையும் பிறருக்குக் கொடுக்காதீர்கள்.
 • ஒவ்வொருமுறை தொடுவில்லைகளை கழற்றும்போதும், மறுபடி அணியும்போதும் கவனமாகக் கையாளுவது அவசியம்.
 • கண்ணிலிருந்து கழற்றிய பின்னும், மறுபடி அணியும் முன்பும் சுத்தம் செய்தல் அவசியம்.
 • பத்திரமாக அவைகளின் பெட்டியில் இவைகளைப் போட்டு வைப்பதும் அவசியம்.
 • ஒரு கண் மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட தொடுவில்லைகளை மட்டுமே அணியுங்கள்.
 • மருத்துவரின் ஆலோசனைப்படி எப்போது உங்கள் வண்ணத் தொடுவில்லைகளை மாற்ற வேண்டுமோ, மாற்றிவிடுங்கள்.
 • கண்களில் எரிச்சல், நீர் வடிதல் இருந்தால் அணிய வேண்டாம்.
 • தொடுவில்லைகளை அணிந்த பின் கண்களில் ஏதாவது உபத்திரவம் இருந்தால் உடனே கண் மருத்துவரை அணுகவும்.
 • தொடுவில்லைகள் அணிவதால் வரும் தொற்றுநோய் பற்றி சரியாகப் புரிந்து கொள்ளுங்கள்.
 • உங்கள் கண்களின் வடிவத்திற்கேற்ப வடிவமைக்கப்பட்ட தொடுவில்லைகளை மட்டுமே அணியுங்கள்.   நேரடியாக கண்ணாடி கடைகளில் விற்கும் தொடுவில்லைகளை வாங்கி அணியாதீர்கள்.

Sanchita Shetty Latest Photoshoot (7)

இறைவனின் படைப்பில் மனிதன் ஒரு அற்புதம். இதைப் புரிந்துகொண்டு நம் உறுப்புக்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுவோம். எத்தனைதான் மாற்று இதயம், மாற்று சிறுநீரகம் என்று வந்தாலும் இறைவன் நமக்குக் கொடுத்திருக்கும் அசல் உறுப்புகளை போல வராது. அதனால் நம்மை நாம் பாதுகாத்துக் கொள்வோம்.

இன்று (2014) புத்தாண்டு பிறக்கிறது. புத்தாண்டு தீர்மானம் என்ன என்று எல்லோரும் கேட்பார்கள். நமக்கு கடவுள் கொடுத்திருக்கும் இந்த உடலை ஆரோக்கியமாக வைத்திருப்போம் என்பதே ஒவ்வொரு வருடப் புத்தாண்டுத் தீர்மானமாக இருக்கட்டும்.

நான்குபெண்கள் தளத்தின் சார்பிலும், எனது சார்பிலும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

அடுத்த வாரம் பார்க்கலாம்.

“வண்ணத் தொடுவில்லைகளை அணியும்போது இவற்றை கவனியுங்கள்!” இல் 12 கருத்துகள் உள்ளன

  1. வாங்க தனபாலன்!
   வருகைக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களுக்கும் நன்றி. உங்களுக்கும் எங்களது புத்தாண்டு வாழ்த்துக்கள்

 1. பயனுள்ள நல்ல பதிவு!

  கண் விடயத்தில் மிக மிக அவதானம் அவசியம்!

  நல்ல அறிவுரைகளும் சேர்த்தே தந்தீர்கள்! சிறப்பு!

  இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் சகோதரி!

 2. வண்ணத்தொடுவில்லை. அர்த்தம் பார்த்த பிறகு புரிந்தது.. அழகு பண்ணிக் கொள்ளவும் எத்தனை வசதிகள். ஆனாலும் உஷாராக இருக்க வேண்டும். நன்றாக இருக்கிறது. அன்புடன்

   1. நமக்கு கடவுள் கொடுத்திருக்கும் இந்த உடலை ஆரோக்கியமாக வைத்திருப்போம் என்பதே ஒவ்வொரு வருடப் புத்தாண்டுத் தீர்மானமாக இருக்கட்டும்.

    ;)))))

    தங்களுக்கும் தங்களின் குடும்பத்தார் அனைவருக்கும் 2014 இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்…

 3. இறைவனின் படைப்பில் மனிதன் ஒரு அற்புதம். இதைப் புரிந்துகொண்டு நம் உறுப்புக்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுவோம். எத்தனைதான் மாற்று இதயம், மாற்று சிறுநீரகம் என்று வந்தாலும் இறைவன் நமக்குக் கொடுத்திருக்கும் அசல் உறுப்புகளை போல வராது. அதனால் நம்மை நாம் பாதுகாத்துக் கொள்வோம்.

  ஆரோக்கியமே விலைமதிப்பற்ற செல்வம்..!

 4. ரஞ்சனி,
  கொஞ்ச நாட்களாகவே உங்கள் பதிவுகள் என் டேஷ் போர்டில் தெரிவதற்கு தாமதமாகினரன். அதிலும் இந்தப் பதிவு இன்று தான் பார்த்தேன். புத்தாண்டு வாழ்த்துகள் சொன்னதை வைத்து கருத்துக்களைப் பார்த்தால் ஜனவரி 2 என்றிருக்கிறது. நான் ஏதாவது செட்டிங்க்ஸில் செய்ய வேண்டுமா என்று தெரியவில்லை. ஒன்றுமே புரியவில்லை. பல தடவைகள் முக நூலில் படித்து கருத்திட்டு விடுவேன். நிதானமாய் இரண்டு நாட்கள் கழித்து என் டேஷ் போர்டில் தெரியும். செட்டிங்க்ஸ் போய் திருத்தம் ஏதாவது செய்யப் பார்க்கிறேன்.

  சரி, விஷயத்திற்கு வருகிறேன்.

  உங்கள் தொடுவில்லைப் பதிவு அருமையாக இருக்கிறது. இக்கால யுவன், யுவதி இருவரும் இந்தக் கலர் ரிஸ்க் எடுக்காமல் இருப்பதே நலம். ஆனால் சொன்னால் கேட்பார்களா ? நீங்கள் சொல்வது அவர்கள் கத்தில் விழுந்தால் நலம். வாழ்த்துக்கள் ரஞ்சனி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.