கண் பாதுகாப்பு, கண் பார்வைக் குறைவு, கான்டாக்ட் லென்ஸ்கள், நோய்நாடி நோய்முதல் நாடி!, மருத்துவத் தொடர், மருத்துவம்

கான்டாக்ட் லென்ஸ் அணிவது எப்படி?

நோய்நாடி நோய்முதல் நாடி – 28

ரஞ்சனி நாராயணன்

 

ரஞ்சனி
ரஞ்சனி

 

கான்டாக்ட் லென்ஸ்கள் கண்ணினுள் கண்ணைத் தொட்டுக் கொண்டிருக்கும்படி பொருத்துப்படுபவை. அதனாலேயே இவற்றுக்கு கான்டாக்ட் (தொடுவில்லைகள்) லென்ஸ்கள் என்ற பெயர் வந்தது. எல்லோருக்கும் பொருந்தும்படியாக இவை இருப்பதில்லை. ஒவ்வொரு தனிநபருக்கும் தகுந்தாற்போல தயாரிக்கப்பட வேண்டும். கண்பார்வைக் கோளாறு எதுவுமில்லை, சும்மா அழகுக்கு அணிய விரும்பினாலும் கூட ஒரு கண்மருத்துவரால் பரிந்துரை செய்யப்படும் லென்ஸ்களை அணிவதே நல்லது.

உங்கள் கண்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் பரிசோதிக்கப்பட்ட பிறகு, எந்தவிதமான  தொடுவில்லைகள் உங்களுக்கு பொருந்தும் என்று பார்த்த பிறகே மருத்துவர் உங்களுக்கு இதற்கான பரிந்துரை சீட்டு (prescription) எழுதிக் கொடுப்பார். உங்கள் கண்களின் ஒளிவிலகல் (refractive power) சக்தி பரிசோதிக்கப்பட்டு, எந்தக் கண்ணுக்கு எந்த மாதிரியான திருத்தம் தேவை என்று நிர்ணயிக்கப்படும். உங்களின் கண்களின் அளவு, வளைவு ஆகியவை அளக்கப்படுகின்றன. தொடுவில்லையின் பின்புற அளவு மற்றும் விட்டம் ஆகியவை மில்லிமீட்டரில் அளக்கப்படுகிறது. உங்களுக்குப் பொருந்தும் தொடுவில்லைகளை அணிவது மிகவும் முக்கியம். தொடுவில்லைகளின் நிறம், சிறப்பு காரணங்கள் இருந்தால் மட்டுமே பரிந்துரை சீட்டில் குறிக்கப்படும்.

தொடுவில்லைகளை எப்படி அணிவது?

 • தொடுவில்லைகளை அணியும்போது அதாவது உங்கள் கண்களுக்குள் வைக்கும்போது குழிவான மேல் பக்கம் கண்ணிற்கு வெளியே இருக்குமாறு அணியவேண்டும்.
 • இடது வலது கண்களுக்கென இருக்கும் தொடுவில்லைகள் மாறாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.
 • தொடுவில்லைகளை சரியான முறையில் கையாளுங்கள்.
 • கையை நன்றாக கழுவி உலர்ந்து துண்டினால் துடைத்துக் கொள்ளுங்கள். டிஷ்யூ வேண்டாம்.
 • ஆட்காட்டி விரலின் நுனியில் தொடுவில்லையை வைத்துக் கொள்ளுங்கள்.
 • தினமும் ஒரே கண்ணின் வில்லையை முதலில் அணிவது என்று பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். முதலில் வலது கண், பிறகு இடது கண் என்று அணிந்துகொள்ளுங்கள்.
 • கை விரலின் மேல் ஒரு சொட்டு தொடுவில்லை திரவம் விட்டுக் கொள்ளுங்கள்.
 • சுத்தமாக இருக்கிறதா என்று சோதனை செய்யுங்கள். தூசி படிந்திருந்தால் உடனே சுத்தம் செய்யுங்கள். மென்மையான வில்லைகள் என்றால் ஓரங்கள் விரியாமல், கிழியாமல் சரியாக இருக்கின்றனவா என்று பாருங்கள்.
 • கண்ணின் மேல்புறம் ஒரு கையை வைத்து கண் இமையை மேல்நோக்கி இழுத்துக்  கொள்ளுங்கள்.
 • தொடுவில்லையை வைத்துக் கொண்டிருக்கும் இன்னொரு கையால் கண்ணின் கீழ்ப்புறத்தை கீழே எழுத்துக் கொள்ளுங்கள்.
 • கண்ணருகே தொடுவில்லையைக் கொண்டு சென்று, கண்ணை சிமிட்டாமல் கண்ணுக்குள் வைத்துக் கொள்ளுங்கள்.

 

தொடுவில்லைகளை கண்ணிலிருந்து வெளியே எடுப்பது எப்படி?

 • கைகளை நன்கு அலம்பிக் கொண்டு துண்டினால் துடைக்கவும்.
 • கண்ணிற்குள் வைக்கும்போது செய்தது போலவே ஒரு கையினால் கண்ணின் மேல் புறத்தை மேல்நோக்கி இழுத்துப் பிடித்துக் கொள்ளுங்கள்.
 • இன்னொரு கையால் கண்ணின் கீழ்ப்புறத்தை கீழே இழுத்துக் கொண்டு மெதுவாக தொடுவில்லையை கீழ் நோக்கித் தள்ளவும். பிறகு அப்படியே எடுத்துவிடவும்.
 • பழகிவிட்டால் போடுவது, வெளியே எடுப்பது எல்லாமே சுலபமாகிவிடும்.
 • கைகளில் நகங்களை அவ்வப்போது வெட்டிவிடுவது, அல்லது அதிக நீளம் இல்லாமல் பார்த்துக்கொள்வது  நல்லது. மென்மையான தொடுவில்லைகள் நகம் பட்டு கிழிந்துவிடும் வாய்ப்பு அதிகம்.

இத்தனை முன்னேற்பாடுகளுக்குப் பிறகும் சில சமயம் இந்தத் தொடுவில்லைகள் அணிபவருக்கு தொல்லை கொடுக்கும். தொடுவில்லைகள் பெரிதாக இருந்தால் கண்ணின் மேல் சரியாக உட்காராது. கண்களை சிமிட்டும்போது நகரக்கூடும். உடனடியாக மருத்துவரை அணுகவும். வேறு பரிந்துரை சீட்டு உங்களுக்குத் தேவைப்படலாம்

முதலில் சிலநாட்களுக்கு கண்ணுக்குள் உறுத்தல் இருக்கலாம். புதிய பொருள் ஒன்று கண்ணில் இருக்கிறது என்கிற நினைவே இது. சிலநாட்களில் பழகி விடும். தொடுவில்லைகளை போட்டுக்கொள்ளுபோதும், கண்ணிலிருந்து எடுக்கும்போது கைகளை சுத்தம் செய்வது அவசியம். தொடுவில்லைகளை தவறாமல் சுத்தம் செய்வது அதைவிட முக்கியம். இரவு படுக்கப்போகும் முன் கட்டாயம் கழற்றிவிடவும்.

மூக்குக்கண்ணாடி போல தொடுவில்லைகளை கழற்றி தலையணை அடியில் வைத்துக் கொள்ள முடியாது. அவற்றிற்கேன்றே இருக்கும் சின்ன டப்பாவில் திரவத்திலேயே தான் இருக்கவேண்டும்.

அந்தந்த தொடுவில்லைகளுக்கென்றே இருக்கும் திரவத்தில் மட்டுமே அவைகளை சுத்தம் செய்யவேண்டும். சிலருக்கு இந்த திரவத்தினால் ஒவ்வாமை உண்டாகும். சுற்றுச்சூழல் மாசினால் தொடுவில்லைகளின் மேல் தூசி படிந்து கண்ணுக்குள் எரிச்சலை உண்டுபண்ணலாம். கண் சிவப்பாகவோ, அல்லது எரிச்சல் ஏற்பட்டாலோ உடனடியாக மருத்துவரை அணுகவும்.

(தொடரும்)

“கான்டாக்ட் லென்ஸ் அணிவது எப்படி?” இல் 9 கருத்துகள் உள்ளன

 1. கான்டாக்ட்லென்ஸ் அதுக்கு வேறு நேரம் ஒதுக்க வேண்டும். நல்லதும் இருக்கு. ஜாக்கிரதையாகக் கையாளவேண்டும். நல்ல பதிவு

  1. வாருங்கள் காமாக்ஷிமா!
   உண்மைதான். நிதானமாகக் கையாளவில்லை என்றால் பணம் பழுத்துவிடுமே!
   வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

  1. வாருங்கள் ஆதி!
   நீங்கள் சொல்வது சரி. இத்தனை அவஸ்தை பட்டுக் கொண்டு கான்டாக்ட் லென்ஸ்கள் வேண்டுமா என்றே தோன்றுகிறது.
   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

 2. தொடு வில்லைகள் போடுவதும் எடுப்பதும் சிறிது கஷ்டமான காரியம் என்றே நினைக்கிறேன். என் தங்கை பெண் திட்டு வில்லைகள் தான் போட்டுக் கொள்கிறாள். . சில சங்கடங்கள் இருக்கவே செய்கிறது. இத்தனை கஷ்டப்படுவதற்கு நீ கண்ணாடியே போட்டு கொண்டாள் என்ன? என்று நானே அவளிடம் சொல்லியிருக்கிறேன். ஒரு டாக்டர் போல் மிக அழகாய் சொல்லியிருக்கிறீர்கள் ரஞ்சனி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.