கண் பாதுகாப்பு, கண் பார்வைக் குறைவு, நோய்நாடி நோய்முதல் நாடி!, மருத்துவத் தொடர், மருத்துவம்

கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்துகிறீர்களா? இதை கட்டாயம் படியுங்கள்!

நோய்நாடி நோய்முதல் நாடி – 27

ரஞ்சனி நாராயணன்

ரஞ்சனி
ரஞ்சனி

 

கான்டாக்ட்  லென்ஸ்கள் எப்படி உபயோகத்துக்கு வந்தன என்பது பற்றி கடந்த பதிவுகளில் பார்த்தோம். கான்டாக்ட் லென்ஸ்களை பயன்படுத்தும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் பற்றி இந்த வாரம் பார்க்கலாம்.

நீங்கள் பயன்படுத்துவது மென்மையான (soft) லென்ஸ்களா, அல்லது கெட்டியான(hard) லென்ஸ்களா என்பதைப் பொறுத்து சுத்தம் செய்வதும் அமைகிறது. மென்மையான லென்ஸ்கள் வெகு விரைவில் காற்றிலும், சுற்றுப்புறத்திலும் இருக்கும் மாசுகளை இழுத்துக்கொள்ளும். இவை மட்டுமல்ல; நம் கண்ணீரில் இருக்கும் புரதச்சத்து கூட இந்த லென்ஸ்களின் மேல் படியக் கூடும். தினமும் இவைகளை சுத்தம் செய்வதன் மூலம் இந்த வகைப் படிமங்களை நீக்கலாம். உங்கள் கண்களிலிருந்து இந்த லென்ஸ்களை வெளியில் எடுக்கும் ஒவ்வொருமுறையும் திரும்ப அணிவதற்கு முன் கட்டாயம் சுத்தம் செய்ய வேண்டும். இதற்கென்றே கிடைக்கும் சிறப்பு திரவங்களின் மூலம் சுத்தம் செய்யலாம்.

சில அடிப்படையான சுத்தம் செய்யும் முறைகளைப் பார்க்கலாம்:

 • உங்கள் கைகளை முதலில் சுத்தம் செய்துகொள்ளுங்கள். அசுத்தமான கைகளுடன் லென்ஸ்களை தொட்டால் உங்கள் கைகளில் இருக்கும் அழுக்கு அவைகளில் படியும்.
 • ஒரு கண்ணில் இருக்கும் லென்ஸை வெளியில் எடுத்து இன்னொரு உள்ளங்கையில் வைத்துக் கொள்ளுங்கள்.
  சுத்தம் செய்ய உதவும் திரவத்தில் இரண்டு மூன்று சொட்டு லென்ஸின் வெளிபரப்பில் விடவும்.
 • ஆட்காட்டி விரலால் இந்த திரவத்தை லென்ஸ் முழுவதும் பரவுமாறு மென்மையாக ஒரு நிமிடம் தடவவும்.
  மறுபடியும் சுத்தம் செய்யும் திரவத்தாலேயே லென்ஸை கழுவி அதன் பெட்டியில் வைக்கவும்.
 • தண்ணீரால் ஒரு பொழுதும் மென்மையான லென்ஸ்களை கழுவாதீர்கள்.
 • லென்ஸ் வைக்கும் பெட்டியிலும் சுத்தம் செய்யும் திரவத்தை நிரப்பவும். அதற்குள் லென்ஸ் -ஐ வைக்கவும்.
 • ஒவ்வொரு முறையும் புதிதாக திரவத்தை நிரப்புங்கள்.
 • இன்னொரு லென்ஸையும் இதே போல சுத்த செய்யுங்கள்.

சில மென்மையான லென்ஸ்கள் கண்ணாடிக் கடைகளில் வேறுவிதத்தில் (heat cleaning) சுத்தம் செய்யப்பட வேண்டியவையாக இருக்கும். உங்கள் மருத்துவரிடம் இது பற்றிக் கேளுங்கள்.
கெட்டியான லென்ஸ்களும் இதே முறையில் சுத்தம் செய்யப்படுகின்றன. இந்த லென்ஸ்களை தண்ணீரால் கழுவலாம். கெட்டியான லென்ஸ்களுக்கென்ற சுத்தம் செய்யும் திரவமும் இருக்கிறது. அதைக்கொண்டு கழுவப்பட வேண்டும். ஒரு விஷயம் இங்கு நினைவில் கொள்ளவேண்டும். கெட்டியான லென்ஸ்களிலிருந்து சரியான முறையில் சுத்தம் செய்யப் பயன்படுத்தும் திரவம் நீக்கப்படவில்லையென்றால் கண்களில் எரிச்சல் ஏற்படும்.

Actress Disha Pandey

லென்ஸ்கள் பயன்படுத்தும்போது கவனிக்க வேண்டிய சில முக்கியமான குறிப்புகள்:

 • முதலில் எந்த பக்க லென்ஸ் -ஐ சுத்தம் செய்தீர்களோ, அதையே வழக்கமாகக் கொள்ளுங்கள். உதாரணமாக இடது பக்க லென்ஸ் -ஐ முதலில் கழுவினீர்கள் என்றால் அதையே தினமும் பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். இதனால் லென்ஸ்கள் மாறாமல் இருக்கும்.
 • லென்ஸ்களை போட்டுக் கொண்டு தூங்காதீர்கள்.
 • லென்ஸ் வைக்கும் பெட்டிகளை வாரம் ஒருமுறை கொதிக்க வைத்து (sterilize) கிருமிகள் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
 • மூன்று மதத்திற்கு ஒரு முறை இந்தப் பெட்டிகளை மாற்றுங்கள்.
 • கைகழுவ சாதாரண சோப் உபயோகப்படுத்துங்கள்.
 • லென்ஸ் பெட்டியில் திரவத்தை நிரப்பிய பின் அதில் லென்ஸ்களை வையுங்கள். இதனால் லென்ஸ் மேல் கீறல் விழாமல் காக்கலாம்.
 • லென்ஸ்கள் எப்போதும் ஈரப்பதத்துடன் இருக்கட்டும்.
 • இமைகளை அடர்த்தியாகக் காட்டும்  மஸ்காரா இந்த லென்ஸ்களில் படிந்துவிடும். அதனால் லென்ஸ்களை அணியும்போது மஸ்காரா பயன்படுத்த வேண்டாம்.
 • அதேபோல லென்ஸ்கள் அணியும்போது ஆயில்-ப்ரீ மாய்ச்சரைசர் பயன்படுத்துங்கள்.
 • நீந்தும்போது லென்ஸ்களை கழற்றிவிடவும். நீச்சல் குளத்திலுள்ள நீரில் இருக்கும் இரசாயனங்கள் மென்மையான லென்ஸ்களின் உள்ளே புகுந்துவிடும். கெட்டியான லென்ஸ்கள் இந்த இரசாயனங்களினால் கண்ணிற்கு வெளியே வந்துவிடும்.
 • தூசுபடலத்தை விளைவிக்கும் ஸ்ப்ரே – க்களையும் தவிர்த்துவிடுங்கள்.

நவநாகரீகத்தின் சின்னமாக இன்று பலரும் கான்டாக்ட் லென்ஸ்களை பயன்படுத்துகிறார்கள். இந்த கான்டாக்ட் லென்ஸ்களின் தொழில்நுட்பமும் பலமடங்கு உயர்ந்திருக்கிறது. அணிபவர்களுக்கு எல்லா வகையிலும் அனுகூலமாக இருக்கும்படியாகவே வடிவமைக்கப்படுகின்றன. ஆனாலும் சிலருக்கு இவை பொருந்துவதில்லை. மறுபடியும் கண்ணாடிகளை அணியத் துவங்குகிறார்கள்.

கான்டாக்ட் லென்ஸ்கள் எப்படி வடிவமைக்கப்படுகின்றன? ஏன் சிலருக்கு பொருந்துவதில்லை?
அடுத்த வாரம்…

புதன்கிழமை தோறும் வெளியாகும் இந்த கட்டுரைத் தொடர் விழிப்புணர்வுக்காக எழுதப்படுகிறது. தனிபரின் உடல் தன்மைக்கேற்ப நோயின் தன்மையும் மாறுபடும் என்பதால் தகுந்த மருத்துவரின் ஆலோசனை எப்போதும் தேவை.

மாடல் : Actress Disha Pandey

“கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்துகிறீர்களா? இதை கட்டாயம் படியுங்கள்!” இல் 7 கருத்துகள் உள்ளன

 1. காண்டாக்ட் லென்சுகள் பற்றி சிறப்பாக விளக்கியுள்ளீர்கள்… என்னுடைய தில்லி தோழி ஒருவர் இந்த காண்டாக்ட் லென்சை வைத்துக் கொண்டு படாதபாடு படுவார்… சமயத்தில் எங்கோ விழுந்து விடும்.. அவ்வப்போது அதை க்ளீன் செய்ய வேண்டும்..சிலநாட்கள் உறுத்துகிறது என்பார்..

  இதையெல்லாம் பார்க்கும் போது, ஏன் கண்ணாடியை இவர் அணிந்து கொள்ளக் கூடாது என்று தோன்றும்…. ஆனால் நாகரீகம் தான் காரணம்…

  1. வாருங்கள் ஆதி!
   நீங்கள் சொல்வது மிகவும் உண்மை. என் மாட்டுப்பெண்ணும் உங்கள் தோழி மாதிரிதான். இப்போது திரும்பவும் கண்ணாடிக்கே மாறிவிட்டாள். கணணி முன் உட்காரும்போது மட்டும் பயன்படுத்துவதால் கண்ணாடி அத்தனை தேவைப்படுவதில்லை என்று சொல்லுகிறாள்.

   வருகைக்கும் உங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டதற்கும் நன்றி!

 2. நல்ல அருமையானதொரு பதிவு அம்மா! நம் உடம்பில் உள்ள அத்தனை பாகங்களிலும் மிக முக்கியமானது கண்! அதை பத்திரமாக பாதுகாக்க வேண்டியது நம் கடமை. கண் கண்ணாடி போட பிடிக்காமல் அழகுக்காக கான்டாக்ட் லென்ஸ் போடுபவர்களே அதிகம். அவர்கள் எல்லாம் கட்டாயம் படிக்க வேண்டியதொரு பதிவு! அழகுக்கு அழகு சேர்ப்பது மட்டுமின்றி கண்ணுக்கும் எந்த பங்கமும் இன்றி லென்ஸ் உபயோகிக்க அனைவரும் பழகி கொள்ளுவது நலம் பயக்கும்!!

 3. அருமையான கட்டுரை. நிறைய பேர் அழகுக்காக கலர் லென்செல்லாம் உபயோகித்து கொண்டிருந்தார்கள். இப்பொழுது அந்த பசக்கம் மாறி விட்டது.
  லென்ஸ் சுத்தம் செய்வது பற்றி இவ்வளவு விரிவாக சொல்லியிருக்கிறீர்கள்.
  அவர்களுக்கெல்லாம் மிகவும் உபயோகமாக இருக்கும் இந்தப் பதிவு.
  பாராட்டுக்கள் ரஞ்சனி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.