உறுப்பு தானம், கண் பாதுகாப்பு, கண் பார்வைக் குறைவு, நோய்நாடி நோய்முதல் நாடி!, மருத்துவத் தொடர், மருத்துவம்

உயிருடன் இருக்கும்போதே கண் தானம் செய்த பெண்!

நோய்நாடி நோய்முதல் நாடி – 26

ரஞ்சனி நாராயணன்

ரஞ்சனி
ரஞ்சனி

இந்த வாரம் இரண்டு செய்திகளைப் பார்க்கலாம்.

முதல் செய்தி: உயிருடன் இருக்கும்போதே கண் தானம் செய்த பெண்மணி பற்றியது.

ராஜஸ்தான் மவுண்ட் அபுவில் உள்ள டெல்வாரா என்ற இடத்தில் இருக்கும் ஒரு கோவிலுக்கு அம்மாவும் (சந்தோஷ் ராஜ்புத்) பிள்ளையுமாக (கிஷோர்) போகும் வழியில் அவர்களை ஒரு கரடி தாக்கி, அந்தப் பெண்மணியின் ஒரு கண்ணை பிய்த்து எறிந்தது. அந்தப் பெண்மணி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த தாக்குதலின் போது கீழே விழுந்த தன்னுடைய கைபேசியை தேடி கிஷோர் அடுத்த நாள் அந்தப் பகுதிக்கு போயிருக்கிறார். அங்கிருந்த புதரில் தனது அம்மாவின் கண் இருப்பதைப் பார்த்துவிட்டு அதை மருத்துவ மனைக்கு எடுத்துக்கொண்டு சென்றிருக்கிறார். அந்தக் கண் ‘உயிருடன்’ பழுதாகாமல் இருப்பதாக மருத்துவர்கள் கூறினார்கள். இது எப்படி சாத்தியம்? மவுண்ட் அபுவில் அப்போது குளிர்காலம்.  அத்துடன், இரவு முழுவதும் பெய்த மழை இரண்டும் கண்ணை துளிக்கூட கெடாமல் பாதுகாத்துவிட்டன. மழையினால் கண்ணின் ஈரத்தன்மை பாதுகாக்கப்பட்டிருக்கிறது. மவுண்ட் அபுவில் சுற்றுச்சூழல் மாசு மிகமிகக் குறைந்த அளவில் உள்ளதால் கண் அப்படியே இருந்திருக்கிறது.

சந்தோஷ் குடும்பத்தினர் அந்தக் கண்ணை ஒரு கண் வங்கிக்கு தானம் கொடுக்க முடிவு செய்தனர். என்னவொரு வியப்பான செய்தி, இல்லையா? உயிருடன் இருக்கும்போதே தன் கண்ணை தானமாகக் கொடுத்திருக்கிறார் சந்தோஷ் ராஜ்புத்!

இன்னொரு செய்தி:

மருத்தினை வெளிவிடும் கான்டாக்ட் லென்ஸ்கள் க்ளகொமா கண் கோளாறுக்கு புதிதாக கண்ணில் பொருத்திக் கொள்ளும் கான்டாக்ட் லென்சுகள் கண்டுபிடிக்கப் பட்டிருக்கின்றன. இந்த லென்ஸ்களை பொருத்திக் கொண்டால் இவை கண்ணிற்கு வேண்டிய மருந்தினை கண்ணிற்குள் வெளிவிடும். இதனால் தினமும் சொட்டு மருந்து போட்டுக் கொள்ளும் அவசியம் இல்லை. இந்த கான்டாக்ட் லென்ஸ்கள் போதுமான கண்  மருந்தை நீண்ட காலத்திற்கு ஒரு நிலையான அளவில் கண்ணிற்குள் வெளிவிட்டுக் கொண்டிருக்கும்.

புதிதாக உருவாக்கப்பட்ட இந்த லென்ஸ்களில் தெளிவான நடு துவாரம் இருக்கும். சுற்றிலும் இருக்கும் மருந்துடன் கூடிய பாலிமர் ஃபிலிம், மருந்து வெளிவருவதைக் கட்டுப்படுத்தும். பரிசோதனைச்சாலையில் பலவிதங்களிலும் பரிசோதிக்கப்பட்ட இந்த லென்ஸ்கள் கூடிய சீக்கிரம் வெளிச்சந்தைக்கு வரும் என்று எதிர்பார்க்கலாம். க்ளகொமா போன்ற கோளாறுகளுக்கு  மருத்துவர் சொன்ன அளவில் தினமும் சொட்டு மருந்து போட்டுக் கொள்வது மிக மிக முக்கியம். ஒரு வேளை கூடத் தவறக்கூடாது. சொட்டு மருந்து விட்டுக் கொள்வது என்பது – அதுவும் தினசரி குறிப்பிட்ட நேரத்திற்கு தவறாமல் – சற்று கடினமே. ஒருமுறை க்ளகொமா என்று வந்துவிட்டால் மறுபடி கண் பழைய நிலைக்கு வராது. உலகில் வயதானபின் ஏற்படும் கண் பார்வை இழப்பிற்கு மிகப்பெரிய முக்கிய காரணமாக இருப்பது இந்த நோய்தான். சொட்டு மருந்து விடுவதானால் பார்வை இழப்பை ஒத்திப்போடலாம். சரிசெய்ய முடியாது. மேற்கூறிய லென்ஸ்கள் வந்துவிட்டால், சொட்டு மருந்து பற்றிய கவலை தேவையில்லை. தொழில்நுட்பம் எத்தனையோ முன்னேறியிருக்கிறது. அதே அளவிற்கு வியாதிகளும் பெருகி இருக்கின்றன என்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டும்.

neha patel (67)

கண்ணாடி சிறந்ததா? கான்டாக்ட் லென்ஸ் சிறந்ததா?

அவரவர்களின் வசதியைப் பொறுத்தது. இளம் வயதினர் கான்டாக்ட் லென்ஸ் அதிகம் விரும்புவார்கள். கண்ணாடி போட்டிருப்பதே தெரியாதே! கான்டாக்ட் லென்ஸ்கள் இயற்கையான பார்வையை கொடுக்கின்றன என்றும் சொல்லலாம். எல்லாபக்கங்களிலும் ஒரே மாதிரியான பார்வை கிடைக்கிறது.   இயற்கையான பார்வையை கொடுப்பதுடன், நம் முகமும் இயற்கையாக இருக்கிறது. நீண்ட நாட்களாக கண்ணாடி அணிபவர்களுக்கு காதின் அருகிலும், கண்ணுக்குக் கீழும் அடையாளங்கள் தெரியும். இந்தக் குறை இதில் வராது. இவற்றிற்கு பிரேம் தேவையில்லை. கண்ணாடியில் வரும் கூசொளி (glare), பிரதிபலிப்பு இவை இருக்காது. கண்ணாடிகள் போல கான்டாக்ட் லென்ஸ்களின் மேல் பனிமூட்டம் படியாது. நீங்கள் கண்ணாடி அணிந்திருப்பது நீங்கள் சொன்னால் ஒழிய வெளியே தெரியாது. உங்களுக்கு எந்தவகை கான்டாக்ட் லென்ஸ்கள் தேவை என்பதை உங்கள் மருத்துவரிடம் கலந்து ஆலோசிக்கலாம்.

குறிப்பிட்ட பார்வைக் கோளாறுகளுக்கு மட்டுமே கான்டாக்ட் லென்ஸ்கள் என்ற நிலை இப்போது மாறிவிட்டது. கிட்ட, தூர பார்வை, வெள்ளெழுத்து, மசமசப்பு பார்வை என்று பல பார்வை கோளாறுகளுக்கு மட்டுமல்லாமல், இப்போது பை-போகல் லென்ஸ்களும் வந்துவிட்டன.

கான்டாக்ட் லென்ஸ்களை அவைகளை பயன்படுத்தும் முறையினால் கீழ் கண்டவாறு பிரிக்கலாம்.

ஒரே ஒருநாள் அணிபவை: இந்த லென்ஸ் ஜோடிகள் தனித்தனி பெட்டிகளில் கிடைக்கின்றன. இன்று பயன்படுத்தியதை அடுத்தநாள் பயன்படுத்த முடியாது.

இரண்டு வாரங்கள் அணிபவை. இந்த லென்ஸ்கள் பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை மாற்றப்பட வேண்டும். தினமும் இரவில் இவற்றை கழற்றி சுத்தம் செய்வது அவசியம். மாதத்திற்கு ஒரு முறை இந்த லென்ஸ்கள் மாதத்திற்க்கு ஒரு முறை மாற்றப்பட வேடியவை. இவைகளையும் தினமும் இரவில் சுத்தம் செய்வது அவசியம்.

வழக்கமாக அணியும் லென்ஸ்கள்: இவைகளும் 3 மாதத்திற்கு ஒருமுறை அல்லது மருத்துவரின் ஆலோசனைப்படி குறிப்பிட்ட நாட்களுக்குள் மாற்றப்பட வேண்டும். மற்ற லென்ஸ்கள் போலவே தினமும் சுத்தப்படுத்தப் படவேண்டும். இப்போதெல்லாம் அடிக்கடி மாற்றிக்கொள்ளும் லென்ஸ்கள் தான் மருத்துவரால் சிபாரிசு செய்யப்படுகின்றன.

அடுத்த வாரம்…

புதன்கிழமை தோறும் வெளியாகும் இந்த கட்டுரைத் தொடர் விழிப்புணர்வுக்காக எழுதப்படுகிறது. தனிபரின் உடல் தன்மைக்கேற்ப நோயின் தன்மையும் மாறுபடும் என்பதால் தகுந்த மருத்துவரின் ஆலோசனை எப்போதும் தேவை.

“உயிருடன் இருக்கும்போதே கண் தானம் செய்த பெண்!” இல் 10 கருத்துகள் உள்ளன

  1. சந்தோஷ் ராஜ்புத் அவர்களின் தானம் வியக்க வைக்கிறது ஒளியிழந்த இன்னொருவருக்கு ஒளி கொடுத்து தன் வாழ்வின் ஒளியையும் கூட்டிக்கொடுவிட்டார் இதயம் நிறைந்த பாராட்டுக்கள் இந்தச் செய்தியை எங்களூடன் பகிர்ந்து கொண்ட ரஞ்சனிக்கும் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.