அசைவ சமையல், சமையல், செய்து பாருங்கள்

சன்டே ஸ்பெஷல் – மூளைக்கறி பெப்பர் ஃபிரை விடியோ பதிவு

ஆட்டின் மூளைக்கறி வறுவல்
(இரண்டு பேருக்கு)
தேவையானவை
ஆட்டின் மூளை – ஒன்று
பெரிய வெங்காயம் – ஒன்று
பூண்டு – 6 பல்
மிளகு தூள் – 2 டீஸ்பூன்
கல்உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
பட்டை, கிராம்பு – தலா 2
எண்ணெய் – தேவையான அளவு
கருவேப்பிலை- ஒரு கொத்து
கொத்தமல்லித்தழை – ஒரு கைப்பிடி

DSCN1167
எப்படி செய்வது?
ஆட்டின் மூளையை தண்ணீரில் அலசி,(அழுத்தி கழுவ வேண்டாம், கரைந்துவிடும்) சிறு சிறு துண்டங்களாக வெட்டுங்கள். வெங்காயத்தைப் பொடியாக நறுக்குங்கள். பூண்டை நீளவாக்கில் வெட்டுங்கள்.
ஒரு தவாவில் எண்ணெய் விட்டு, பட்டை,கிராம்பு போட்டு தாளித்து பூண்டு, வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாக வதக்குங்கள். வதக்கியதில் வெட்டிவைத்திருக்கும் மூளைக்கறியை பொட்டு,மிதமான தீயில் கிளறுங்கள். அதில் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து மீண்டும் கிளறுங்கள்.

DSCN1172

இப்போது மிளகுத்தூள் சேர்த்து நன்றாகக் கலந்து, உள்ளங்கை அளவு தண்ணீர் தெளித்து கொதிக்கவிடுங்கள். வதக்கும்போதே கறி வேக ஆரம்பித்துவிடும். தண்ணீர் சேர்ப்பதால் முழுதாக வேகும். தண்ணீர் ஒட்ட வறுங்கள். இறுதியில் கருவேப்பிலை, நறுக்கிய கொத்தமல்லித்தழை சேர்த்து கிளறி இறக்குங்கள்.

DSCN1174

இந்த முறையில் செய்துபாருங்கள், சுவையில் மயங்கிப்போவீர்கள்.

Advertisements

“சன்டே ஸ்பெஷல் – மூளைக்கறி பெப்பர் ஃபிரை விடியோ பதிவு” இல் ஒரு கருத்து உள்ளது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.