ஹெவியான விருந்து சாப்பாட்டையும் சுலபமா செரிக்க வைக்கக்கூடியது வெற்றிலை. இதுமட்டுமில்ல, வெற்றிலைக்கு இன்னும் ஏராளமான மருத்துவ குணங்கள் உண்டு.
- டென்ஷன் காரணமாக தாங்க முடியாத தலைவலி வந்தால் ஆறு வெற்றிலையை அரைத்து, அந்த விழுதை நெற்றியில் பற்றுப் போட்டு, அரைமணி நேரம் ஓய்வெடுங்கள். தலைவலி காணாமல் போகும்.
- பிரசவித்த பெண்கள் சிலருக்கு மார்பகத்தில் பால் கட்டி வலியும் வீக்கமும் ஏற்படும். அதற்கு, வெறும் வாணலியில் வெற்றிலையை போட்டு லேசாக வதக்கி, பொறுக்கும் சூட்டில் மார்பகங்களில் கட்டினால் வலியும் வீக்கமும் குறையும்.
- சரியாக பசியெடுக்காமல் சாப்பிட மறுக்கிற குழந்தைகளுக்கு 3 வெற்றிலையோட சாறில் கொஞ்சம் மிளகுத்தூள் போட்டு கஷாயம் காய்ச்சி குடிக்க வையுங்கள். நன்றாக பசியெடுத்து, சாப்பிடுவார்கள்.
- ஒரு டேபிள் ஸ்பூன் வெத்தலைச் சாறும் ஒரு டேபிள் ஸ்பூன் தேனும் கலந்து தினம் ரெண்டு வேளை அருந்தி வந்தால், உடல் பலவீனமும் நரம்புத் தளர்ச்சியும் தானாகவே நீங்கிடும்.
இத்தனை குணம் வாய்ந்த வெற்றிலையை வீட்டிலேயே வளர்க்கலாம். மணிபிளாண்ட் எப்படி அதிக பராமரிப்பு இல்லாமல் நன்றாக வளருமோ அதேபோல்தான் வெற்றிலையும். ஒரு சாக்குப் பையில் மண்நிரப்பி சுவற்றின் ஓரமாக வைத்து விட்டால் போதும் சுவற்றைப் பிடித்துக் கொண்டு மளமளவென வளர்ந்துவிடும். வெற்றிலை நாற்று எல்லா நர்சரிகளிலும் கிடைக்கிறது.