புள்ளி கோலம் கற்கலாம்!
கோலங்களில் புள்ளிகளை அடிப்படையாக வைத்து போடப்படும் புள்ளி கோலம் ரொம்பவே சிக்கலான ஒன்று. இதைப் போடுவதற்கு நுட்பமான அறிவு தேவை. கணக்கும் நுண்ணிய கவனிப்பும் இதற்கு உள்ளே பொதிந்திருக்கும் அறிவியல் விஷயங்கள். இன்னோரு பயன், மனதை ஒருமைப்படுத்துவது. கல்விக்கூடங்கள் இல்லாத அந்தக் காலத்தில் வீட்டுக்குள்ளே அடைபட்டுக் கிடந்த பெண்களுக்கு கணக்கு கற்றுக் கொடுத்தவை இந்தக் கோலங்கள்தான். இன்று மனதை ஒருநிலைப்படுத்தவும் கணிதம் பயிலவும் ஏராளமான வழிகள் உண்டு! ஆனால் அந்தக் கால பெண்கள் உருவாக்கிய கணக்கை அடிப்படையாகக் கொண்ட இந்த புள்ளிக் கோலங்கள், நவீன டிசைனர்களை விஞ்சுகின்றன. கோலங்களாக உள்ள இவற்றை வீட்டு அலங்காரத்தில் வெவ்வேறு இடங்களில் பயன்படுத்த முடியும். அவற்றை பிறகு பார்க்கலாம். முதலில் புள்ளிக் கோலம் கற்போம்.
இந்த பதிவில் 3 புள்ளி, நேர்ப்புள்ளி 2 வரிசையில் முடியும் சரிகமபதநி கோலம். கோலத்தை உற்றுப் பாருங்கள். ஒரே வகையான புள்ளிகளில் வெவ்வேறு கோலங்கள் உருவாக்கப் பட்டிருக்கிறது.