அனுபவம், உறவுகளை மேம்படுத்துவோம், உறவை மேம்படுத்துதல், திருமண வாழ்க்கை சிறக்க

திருமணவாழ்க்கையை வெற்றிகரமாக மாற்றுவது எப்படி?

உறவுகள் மேம்பட

கல்யாணமான முதல் ஒரு வருடம் ரொம்ப முக்கியமான காலகட்டம். அந்த சமயத்தில் உணர்ச்சிவசப்படாமல், புத்திசாலித்தனமாக நடந்து கொண்டாலே, இனிமையான இல்லறத்துக்கு பலமான அஸ்திவாரம் போட்டு விட்டதாக அர்த்தம்! அதன்பிறகு, எப்படிப்பட்ட பிரச்னையையும் சுலபமாக ஊதித் தள்ளிவிட முடியும். திருமணவாழ்க்கையில் பிரச்னை என்பது முக்கியமான நான்கு விஷயங்களால்தான் வருகிறது. உணர்வுகள், பொருளாதாரம், சமூகம், செக்ஸ் இவைதான் அந்த நான்கு.

1. உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள், புரிய வையுங்கள்!

உடம்புக்கு முடியாமல் தான் படுத்திருக்கும்போது, ‘என்னாச்சும்மா? டல்லா இருக்கே…’ என்று கணவன் அக்கறையாக விசாரிக்க வேண்டும் என்றுதான் ஒவ்வொரு மனைவியும் எதிர்பார்ப்பாள். அதைப் பற்றி கணவன் ஒரு வார்த்தையும் கேட்கவில்லை என்றால் வருத்தப்படுவாள். அடுத்து அந்த வருத்தம், ‘இதே எங்க வீடாயிருந்தா, எங்க அப்பா, அம்மா துடிச்சுப் போயிருப்பாங்க. என் அக்கா வீட்டுக்காரர்லாம், அக்காவுக்கு ஒண்ணுன்னா, அப்படியே பதறிடுவாரே’ என்கிற ஒப்பீடாக மாறும். அதேபோல் நண்பனின் மனைவி அவனை ஒரு நாளைக்கு 10 முறை போன் செய்து விசாரிக்கிறாள்’ என்று கணவரும் ஒப்பிடலாம். இவையெல்லாம் விவாதமாக ஆரம்பிக்கும். விவாவத்தை நீளவிட்டால் அது பிரச்னை வெடிக்கும். விவாத அளவிலேயே ஒருவரையொருவர் புரிந்துகொண்டால் பிரச்னையே வராது.

2. பொருளாதாரம் சார்ந்த பிரச்னை

‘தனிக்குடித்தனமா, கூட்டுக் குடும்பமா’ என்பது முதல், ‘மனைவி வேலைக்குப் போகலாமா, வேண்டாமா’ என்பது வரை இதில்தான் வரும். சம்பந்தப்பட்ட இரண்டு குடும்பங்களும் திருமணத்துக்கு முன்பே இவை பற்றித் தெளிவாகப் பேசிக் கொள்வதின் மூலம் இந்தப் பிரச்னைகளை முன்கூட்டியே தடுத்து விடலாம். இன்றைய காலகட்டத்தில் இருவரும் பணிக்குப் போவது அவசியமாகிவிட்டது. இதை புரிந்துகொண்டு சம்பந்தப்பட்டவர்களின் எதிர்காலத்துக்கு நல்லது.

DSCF0089

3.சமூகம்

மாமியார், நாத்தனார் பிரச்னையும் இதற்குள்தான் அடக்கம். ‘எச்சரிக்கையா இல்லேன்னா, உன் தலையிலயே எல்லா வேலையையும் கட்டிருவாங்க’ என்று சில சமயம் பெண்ணுடைய பெற்றோரே புத்திமதி சொல்வதுண்டு. இப்படி பெண்ணை தவறாக வழிநடத்தாமல், ‘அது உன் வீடும்மா. உன்னால முடிஞ்ச அளவுக்கு வேலைகளைப் பாரு. சீக்கிரமா எல்லார் மனசுலயும் இடம் பிடி’ என்று சொல்லி அனுப்பவேண்டும். பாஸிடிவ்வான செயல்முறை எப்போதுமே நல்ல பலனையே தரும். அதுபோலவே ஆணைப் பெற்றவர்களும் அதிகாரத் தோரணையோடு நடந்துகொள்வதும் கூடாது.

4.செக்ஸ் ரீதியான பிரச்னை

திருமணம் ஆகும் பலருக்கு தாம்பத்யம் பற்றிய தெளிவு இருப்பதில்லை. இந்தத் தயக்கத்தை சரி செய்யாமல் கல்யாணம் செய்தால், ள் பிரச்னை வர அதிக வாய்ப்புக்கள் உண்டு. கல்யாணத்துக்கு முன்பு செக்ஸ் பற்றிய பயமோ, தயக்கமோ இருந்தால், டாக்டர் அல்லது கவுன்சிலர் மூலம் அதை அகற்ற வேண்டியது மிக மிக அவசியம்.

“திருமணவாழ்க்கையை வெற்றிகரமாக மாற்றுவது எப்படி?” இல் 4 கருத்துகள் உள்ளன

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.