இயற்கை வழி மருத்துவம், மருத்துவம்

காதிகிராஃப்டில் இயற்கை வழி சிகிச்சை மையம்!

மாற்று மருத்துவம் குறித்து இன்று மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. பக்கவிளைவுகள் தரும் ஆங்கில மருத்துவ முறையைத் தவிர்த்து நம் மண்சார்ந்த மருத்துவமுறை பக்கம் திரும்ப ஆரம்பித்திருக்கிறார்கள். இதை அரசு உணர்ந்திருப்பது வரவேற்கத்தக்க விஷயம். அந்தவகையில் இயற்கை வழி சிகிச்சை மையத்தை ஆரம்பித்துள்ளது தமிழ்நாடு கதர் கிராமத்தொழில் வாரியம். சென்னை பாரிமுனையில் உள்ள குறளகத்தில் இந்த இயற்கை சிகிச்சை மையம் இயங்கி வருகிறது.

1
’’காந்தியடிகள் ஆங்கில மருத்துவத்தைவிட இயற்கையின் அடிப்படையிலே நமக்கு நாமே வைத்தியராக நம்முடைய நோய்களை குணமாக்க முடியும் என்பதைக் கடைப்பிடித்தார்.
அந்த அடிப்படையில் இந்த மையத்தில் ஒவ்வொரு நோய்களுக்கும் பலவீனத்திற்கும் ஏற்ப உணவுமுறை ஆலோசனை,நீராவி குளியல்,முதுகு தண்டுவட குளியல்,மூலிகை மண்சிகிச்சை, எண்ணெய் மசாஜ், யோகா, அக்குபிரஷர் போன்ற சிகிச்சைகள் அளிக்கிறோம். அத்துடன் உடல்பருமன், மூட்டுவலி, முதுகுவலி நீரழிவு, வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், ஆஸ்துமா, ரத்தக்கொதிப்பு, மற்றும் மாதவிடாய் கோளாறுகள் போன்ற நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதோடு மன அழுத்தம், தூக்கமின்மை, மனச்சோர்வு ஆகியவற்றால் பாதிக்கப்படுவோருக்கு தேவையான மசாஜ், நீராவி குளியல், முதுகு தண்டுவடக்குளியல், மற்றும் தோல் ஆரோக்கியமாக – பளபளப்பாக இருக்க நீராவி குளியல், முகத்தில் மசாஜ் மற்றும் மண்சிகிச்சை அளிக்கப்படுகிறது. பாதங்களுக்கும் பாதுகாப்பான சிகிச்சை முறைப்படி அளிக்கப்படுகிறது.” என்கிறார்  இந்த சிகிச்சை மையத்தின் பொறுப்பாளர் இயற்கை மருத்துவர் எஸ்றா.
’’தற்போது காதி கிராஃப்ட் துறையும் தன்னுடைய நிர்வாகத்தின்கீழ் இயற்கை சிகிச்சை மையத்தினை ஆரம்பித்துள்ளது. காதிகிராஃப்டின் தலைமை செயல் அலுவலர், துணை இயக்குநர் மற்றும் அரசு அதிகாரிகள் ஆகியோரின் மேற்பார்வையில் இந்த சிகிச்சை மையம் நடைபெற்று வருகிறது முறையாக அரசு மருத்துவ கல்லூரியில் இயற்கை மருத்துவம் மற்றும் யோகா பட்டம் பெற்ற மருத்துவர் ஒருவரும் அவருக்கு உதவியாக ஆண்சிகிச்சையாளர் மற்றும் பெண் சிகிச்சையாளரும் பணிபுரிந்து வருகின்றனர்.” என்கிறார் அவர்.
ஞாயிற்றுகிழமை தவிர மற்றும அனைத்து நாட்களிலும் காலை 10 மணிமுதல் மாலை 6 மணி வரை நடைபெறும் இந்த சிகிச்சை மையத்தில் குறைந்த கட்டணத்தில் சிகிச்சைகள் வழங்கப்படிகின்றன.

Advertisements

“காதிகிராஃப்டில் இயற்கை வழி சிகிச்சை மையம்!” இல் 4 கருத்துகள் உள்ளன

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.