சமையல், செய்து பாருங்கள், சேமிப்பு, தொட்டிச் செடி வளர்ப்பு, தொட்டிச் செடிகள், தோட்டம் போடலாம் வாங்க!, வீட்டில் வளர்க்கும் செடிகள், வீட்டுத் தோட்டம்

வீட்டுத்தோட்டம் – மிளகாய்ச் செடி வளர்ப்பு

வீட்டுத்தோட்டம் – மிளகாய்ச் செடி வளர்ப்பு

மிளகாய் தேவை இல்லாத சமையலே இல்லை எனலாம். சமையலுக்கு ஒன்றிரண்டு மிளகாய்கள் தான் தேவையாக இருக்கும். அந்தத் தேவையை நாமே நம் வீட்டில் மிளகாய்ச் செடி வளர்ப்பதன் மூலம் தீர்த்துக் கொள்ள முடியும். இனி தோட்ட வேலையை கவனிப்போமா?

DSCN0843

என்னென்ன தேவை?

தொட்டிகளில் வளர்க்க: மண் தொட்டி (அ) சிமெண்ட் தொட்டி, இயற்கை உரமும் மண்ணும் கலந்த கலவை, மிளகாய் விதைகள்

நிலத்தில் வைக்கும் முன் நிலத்தை கொத்தி சீர் செய்ய வேண்டும். பிறகு இயற்கை உரத்தை தூவி விடுங்கள்.

DSCN1310

நடவை முறை: உரங்கள் இட்டு வைத்திருக்கும் தொட்டி(நடுத்தரமான அளவு தொட்டி) மண்ணைக் கிளறி, 35-40 விதைகளைத் தூவுங்கள். விதைகள்  5 நாட்களில் முளைத்து, வளர ஆரம்பிக்கும்.  45 நாட்களில் மிளகாய் நாற்றுகள் தயாராகி விடும். அந்த நாற்றுக்களைப் பிடிங்கி உரமிட்ட தொட்டிகளில் ஒரு தொட்டியில் இரண்டு செடிகள் வீதம் நடவேண்டும். சரியான நிழலும் சூரிய ஒளியும் தண்ணீரும் கிடைக்கும் பட்சத்தில் நட்ட 30 நாட்களுக்குள் பூக்கள் வர ஆரம்பிக்கும். அடுத்த 15 நாட்களில் மிளகாய் காய்க்க ஆரம்பிக்கும்.

DSCN0119

பராமரிப்பு: மிளகாய் செடிகள் நோய் தாக்குதலுக்கு உள்ளாகும்போது 1 லிட்டர் தண்ணீரில் 30 மில்லி லிட்டர் வேப்பெண்ணெய், சிறிதளவு சவுக்காரக்கட்டி கலந்து இலைகள் மீது தெளித்துவிடுங்கள். இதுதவிர காலை, மாலையில் நீர் ஊற்றி வருவது அவசியம்.

DSCN0954

எவ்வளவு அறுவடை செய்யலாம்? தொட்டியில் நட்ட நாற்று வளர்ந்து 60 நாட்களில் மிளகாய் காய்க்க ஆரம்பிக்கும். 3தொட்டிகளில் நட்ட செடி மூலம் 145 நாட்களுக்கு மிளகாய் பறிக்கலாம்.

“வீட்டுத்தோட்டம் – மிளகாய்ச் செடி வளர்ப்பு” இல் ஒரு கருத்து உள்ளது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.