இயற்கை, காட்டுயிர், குழந்தை வளர்ப்பு, குழந்தைகளுக்கு சொல்லித்தர, சுற்றுச்சூழல், பறவைகள்

நம்மைச் சுற்றியிருக்கும் பறவைகள் – குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்க

நம்மைச் சுற்றியிருக்கும் பறவைகள் – குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்க

பூநாரைகள்

ஆங்கிலப் பெயர்: flamingo (ஃபிளமிங்கோ)

உடலமைப்பு : இதன் கால்கள் நீண்டு குச்சிபோல் இருக்கும். உடல் கொக்குனுடையதைப் போல் இருக்கும். இதன் அலகு நீண்டு வளைந்திருக்கும்.

நிறம் : கால்கள் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும், பக்கவாட்டில் உள்ள இறக்கையில் வெளிர்சிவப்புநிறமும், கருமையும் தூவி விட்டார்போல் இருக்கும். உடல் வெண்மையாக இருக்கும். அலகு வெளிர் சிவப்பு நிறத்தில் இருக்கும்.

வகைகள்: கிரேட்டர், லெஸ்ஸர் என்ற இருவகைகள் உண்டு. பெரும்பாலும் நாம் காண்பது கிரேட்டர் வகை பூநாரைகளைத்தான்.

FLAMINGOS @ ANNAMALACHERY

வாழிடம் : கடலும் ஆறும் சேரும் கழிமுகப்பகுதி, கடலோரப்பகுதிகளில் வாழும்

உணவு : நீருக்குள் தலையைவிட்டு புழு, பூச்சி, பாசி, இறால், சதுப்புநிலத் தாவரங்களின் விதைகளை சலித்தெடுத்து உண்ணும். கழிமுகப்பகுதிகளில் நீருடன் மண்கலந்து கொழுகொழப்பாக இருக்கும் பகுதிகளிலேயே அதிகளவு உணவு கிடைப்பதால், அதை உண்பதற்கெற்றபடி பூநாரைகளின் நீண்டு வளைந்திருக்கும் அலகு அமைந்திருக்கிறது. இதில் தனக்குத்தேவையான உணவை மட்டும் சேற்றிலிருந்து சலித்தெடுத்து பூநாரைகள் உண்கின்றன.

GREATER FLAMINGO

எங்கே பார்க்கலாம்?  சென்னை அருகே உள்ள பழவேற்காடு, அண்ணாமலைச்சேரி பகுதிகளில் இவற்றை சீசன் இல்லாத நேரங்களிலும் பார்க்கலாம். சிலநேரங்களில் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திலும் இவற்றை பார்க்க முடிகிறது. இதுதவிர, கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள கழிவெளி என்ற இடத்திலும் இவற்றைக் காணலாம். இங்கெல்லாம் பார்க்க முடியாதவர்கள் அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்காவிலும், கிண்டி சிறுவர் பூங்காவிலும் இவற்றைப் பார்க்கலாம்.

படங்கள் நன்றி  : இயற்கை அறக்கட்டளை, சென்னை

Advertisements

“நம்மைச் சுற்றியிருக்கும் பறவைகள் – குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்க” இல் 4 கருத்துகள் உள்ளன

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.