அசைவ சமையல், கிராமத்து சமையல், கோழிக்கறி உணவுகள், சமையல்

இட்லிக்கு தொட்டுக் கொள்ள நாட்டுக்கோழிக் குழம்பு!

கிராமத்து சமையல்

ரா. விஜயலட்சுமி

DSC_6221
பண்டிகை நேரங்கள்லதான் கிராமங்கள்ல இட்லி, தோசை மாதிரியான டிபன் ஐட்டங்களைச் செய்வாங்க. கூடவே கோழிக்கறி குழம்பு கட்டாயமா இருக்கும். பண்டிகை நாள்ல காலை நேரத்துல கிராமத்து தெருவுல நடந்துபோனா ஒவ்வொரு வீட்டிலே இருந்தும் வர்ற கறிக் குழம்பு வாசனை ஆளைத் தூக்கும். சுடச்சுட இட்லியோட, சுவையான நாட்டுக் கோழிக்குழம்பு சேர்த்து சாப்பிட சுவைக்கு நிகரே இல்லே போங்க.அந்த கோழிக் குழம்போட சீக்ரெட் ரெசிபியைத்தான் இன்னக்கி சொல்லித்தரப்போறேன். நாட்டுக்கோழிக் குழம்பு எப்படி செய்றதுங்கிறதை யூடியூப்ல சொல்லித்தந்திருக்கேன். அங்கேயும் பார்த்து கத்துக்கலாம். சரி… செய்முறைக்குப்போவோமா?

DSCN0519

தேவையான பொருட்கள்
கோழி – 400 கிராம்
தக்காளி – 2
பொ¢ய வெங்காயம் – 2
தேங்காய் – 2 நீளமான துண்டுகள்
காய்ந்த மிளகாய் – 4
கொத்தமல்லி – 1 டேபிள் ஸ்பூன்
இஞ்சி – ஒரு சிறு துண்டு
பூண்டு – 8 பல்
மிளகு, சீரகம் – தலா 2 டீஸ்பூன்
பட்டை – 2
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

எப்படி செய்வது?
கோழிக்கறியை சின்னச் சின்ன துண்டுகளா கட் பண்ணி, அலசி வெச்சிக்கோங்க. ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, 2 தக்காளி, 1 வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, சீரகம், பட்டை, கொத்தமல்லி சேர்த்து லேசான தீயில் 2 நிமிடங்கள் வதக்குங்க. வறுத்த இந்த கலவையோட தேங்காய் சேர்த்து மைய அரைச்சுக்கோங்க.

DSCN0524
இப்போ, மீதமிருக்க ஒரு வெங்காயத்தைப் பொடியா வெட்டிக்கோங்க. ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு மீதமிருக்க எண்ணெயை விட்டு, வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாகிற வரைக்கும் வதங்குங்க. பிறகு, இதுல அலசி வெச்சிருக்கிற கறித்துண்டுகளைப் போட்டு லேசா வதக்குங்க. அப்புறம் இதுல அரைச்சு வெச்சிருக்கிற மசாலா கலவையைப் போட்டு மஞ்சள் தூள், உப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்குங்க. வதக்கினதுக்கு அப்புறம் 1 தம்ளர் தண்ணீர் விட்டு கறியை நல்லா வேக வையுங்க. கறி வெந்ததும் குழம்பு சாப்பிடத் தயாராகிவிடும். குழம்பை அடுப்பை விட்டு இறக்கும்போது ஒரு கைப்பிடி கறிவேப்பிலை கொத்தைப் போட்டு இறக்குங்க கமகமன்னு இருக்கும்.

DSCN0538

இட்லி, தோசைக்குத் தொட்டுக்கொள்ள இந்த நாட்டுக்கோழி குழம்பு சரியான ஜோடி!

Advertisements

“இட்லிக்கு தொட்டுக் கொள்ள நாட்டுக்கோழிக் குழம்பு!” இல் 2 கருத்துகள் உள்ளன

  1. அப்படியே ஒரு 5 கிலோ நாட்டுக்கோழிய குழம்பு வைச்சு நல்ல விதமா மறுமொழி எழுதரவங்க வீட்டுக்கு பார்சல் பண்ணா நல்லாருக்கும்..கொவப்படாதீங்க…டிப்ஸ்க்கு நன்றி…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.