அறிவியல், கவனிக்கப்படாத பெண்கள், சகுந்தலா தேவி

‘‘என் மூளை கணிப்பொறியைவிட சிறப்பானது’’ – சகுந்தலா தேவி

கவனிக்கப்படாத பெண்கள் – புதிய தொடர்

சகுந்தலா தேவி

shakuntala

கணித வித்தகர் சகுந்தலா தேவி, ‘மனித கணிப்பொறி’ என்று நம்மால் கொண்டாடப்பட்டவர். இறுதிவரை தன்னை கணிப்பொறியுடன் ஒப்பிடுவதை அவர் விரும்பவே இல்லை என்பதுதான் முரண்பட்ட உண்மை. மனிதமூளை கணிப்பொறியைவிட திறமையானது என்பதை அவர் உறுதியாக நம்பினார்.

சர்க்கஸில் சீட்டுக் கட்டுகளை வைத்து பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்திக் கொண்டிருந்தவரின் மகளாக சகுந்தலா நவம்பர் 4, 1929ல் பெங்களூருவில் பிறந்தார். 3 வயதிலேயே சீட்டுக்கட்டு வித்தைகளைக் கற்றுக்கொடுத்தார் அவருடைய அப்பா. சகுந்தலாவின் கற்கும் திறமையைப் பார்த்து தன்னுடைய சர்க்கஸ் வேலையை விட்டுவிட்டு, தன் மகளை ஊர்ஊராக அழைத்துச் சென்று வித்தைகளைச் செய்ய வைத்தார். பெண்கள் வீட்டை விட்டு வெளியே போவதே மிகப்பெரிய குற்றமாக பார்க்கப்பட்ட 1930களில், பொதுமக்கள் மத்தியில், பல்கலைக்கழக அறிஞர் நடுவே நிறுத்தி தன் மகளின் குழந்தை மேதைமையை வெளி உலகத்துக்கு கொண்டு வந்தவர்.
தன் மகளின் திறமை உலகத்துக்கே தெரிய வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்த சகுந்தலாவின் அப்பா, இந்தியாவின் வெவ்வேறு நகரங்களில் கணக்கியல் வித்தைகளை மேடையேற்றி அப்பா, மகள் கூட்டணி தன்னுடைய அடுத்த இலக்கை நோக்கி பயணித்தது. தன்னுடைய 15 வயது முதல் 30 வயது வரை கிட்டத்தட்ட 15 வருடங்கள் லண்டனில் வசித்த சகுந்தலா, அங்கிருந்து அமெரிக்கா உள்பட பல உலக நாடுகளுக்கு பயணப்பட்டு தன் கணித அறிவை உலகத்துக்கு அறிவித்தார். சிக்கலான வர்க்க மூலங்களுக்கு விடை சொல்லி கணிதவியல் அறிஞர்களை வியப்பில் ஆழ்த்தினார்.
1973, செப்டம்பர் 27ல் பிபிசி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தோன்றி, கணிதத்தை அடிப்படையாகக் கொண்ட கேள்விகளுக்கு பதில் அளித்து பிரிட்டன் மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார் சகுந்தலா. 1977ல் கணித மேதைகள் மத்தியில் முதல் அங்கீகாரம் கிடைத்தது. அமெரிக்காவின் டெக்ஸாஸ் நகரில் உள்ள சதர்ன் மெதோடிஸ்ட் யுனிவர்சிட்டி இன் டல்லஸில் நடந்த சிறப்பு நிகழ்ச்சி ஒன்றில்,  201 எண்ணின் 23 வது வர்க்கமூலத்துக்கான விடையை 50 நொடிகளில் சொன்னார். கணிப்பொறி அந்த கணக்கீட்டை முடிக்க 62 நொடிகளை எடுத்துக்கொண்டது. ஜுன் 18, 1980ல் லண்டன் இம்பீரியல் கல்லூரிக்கு சிறப்பு விருந்தினராக சென்று சிக்கலான பல கணித கேள்விகளுக்கு பதிலளித்து பார்வையாளர்களை வியப்படைச் செய்தார். லண்டன் இம்பீரியல் கல்லூரியில் இரண்டு 13 இலக்க எண்களை பெருக்கி 28 நொடிகளில் விடையளித்தது 1982ல் கின்னஸ் சாதனையாக அங்கீகரிக்கப்பட்டது. 1988ல் வாஷிங்டன் டி.சி.யில் ‘ராமானுஜம் கணிதமேதை விருது’ கொடுத்து கௌரவிக்கப்பட்டார்.
1960களின் முற்பகுதியில் இந்தியா திரும்பிய சகுந்தலா, கொல்கத்தாவைச் சேர்ந்த பரிட்டோஷ் பானர்ஜியை, பெண் குழந்தை(அனுபமா)க்கு தாயானார். சகுந்தலாவுக்கு கணிதத்தின் மீது எந்த அளவுக்கு காதல் இருந்ததோ அதேஅளவு இந்து மதத்தின் மீதும் இருந்தது. தனது திருமண முறிவுக்குப் பிறகு தான் பிறந்த நகரமான பெங்களூருவுக்கு திரும்பியதும் தனது கணித அறிவை, இந்திய புராண, இதிகாசங்களில் தேட ஆரம்பித்தார். இந்து கடவுளர்கள் பற்றி நூல்கள் எழுதினார். ஜோதிடத்தை ஆராய்ந்தார். பிரபலங்களுக்கும் தன்னைத் தேடிவந்த பொது மக்களுக்கும் ஜோதிடம் பார்த்தார்.
மதத்தின் மீதான இவருடைய ஆர்வத்துக்கு, தனிப்பட்ட தன் வாழ்க்கையில் ஏற்பட்ட எதிர்பாராத சம்பவங்களும் ஒரு காரணமாக இருக்கலாம். இவர் மணந்துகொண்ட பரிஷ்டோஷ் பானர்ஜி ஒருபால் விருப்பமுள்ளவர். இதை தன் திருமண வாழ்க்கையை 20 ஆண்டுகள் கழித்தபின் கண்டுபிடித்தார். அதில் சகுந்தலா அதிர்ச்சி கொள்ளவில்லை, 1970களிலேயே ஒருபால் தன்மை குறித்து ஆய்வு செய்து புத்தகம் எழுதினார். கணவருடன் மணமுறிவு செய்துகொண்ட சகுந்தலாவுக்கு, இந்து கடவுளர்கள் கிருஷ்ணனும் கணேசாவும் கைகொடுத்தனர்.
புனைவில் தொடங்கி ஜோதிடம், இந்தியாவில் சாதீயம், இந்திய சமூகவியல் நிலை என பல பிரிவுகளில் புத்தகம் எழுதினார். தன்னுடைய 50 வயதுகளுக்குப் பிறகு கணித அறிவை எளிமையாக புரிய வைக்கும் புத்தகங்கள் எழுதினார். ‘மனித கணிப்பொறி’ என்று புகழ்ந்து தள்ளிய இந்திய சமூகம் அவரிடமிருந்து பெற்றிருந்திருக்க வேண்டிய இந்த அறிவைத்தான். இறுதிவரை இந்த கணித மேதையின் அறிவு இந்திய சமூகத்துக்கு பயன்படாமலேயே போய்விட்டது. சகுந்தலா, ஏப்ரல் 21 2013 அன்று தனது 83ம் வயதில் இயற்கை எய்தினார்.

நந்தினி சண்முகசுந்தரம்

“‘‘என் மூளை கணிப்பொறியைவிட சிறப்பானது’’ – சகுந்தலா தேவி” இல் ஒரு கருத்து உள்ளது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.