உறவுகளை மேம்படுத்துவோம், உறவை மேம்படுத்துதல்

ஆதர்ச தம்பதி ஆகணுமா? சண்டை போடுங்கள்!

உறவு மேலாண்மை

நாம் எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம், ஆதர்ச தம்பதி சண்டையே
போடமாட்டார்கள் என்று. சண்டை போடுவது தம்பதிகளிடையே நெருக்கத்தை ஏற்படுத்தும் என்கிறார்கள் உளவியல் மருத்துவர்கள். அப்படி அவர்கள் பரிந்துரைக்கும் சண்டை போடுவதற்கான 10 விதிகள் இதோ…

IMG_3793
1. சண்டை போட்டு முடித்த பிறகு, யார் முதலில் சமரசம் செய்வது என்கிற தயக்கம் இருக்கும். உங்கள் துணைதான் முதலில் ஆரம்பிக்க வேண்டும் என்று காத்திருக்காதீர்கள். நீங்களாக முன்வந்து சமரசத்தை தொடங்கி வையுங்கள். இதனால் சண்டையின் உக்கிரம் தவிர்க்கப் படுவதோடு, சண்டை தீர்த்து வைக்கப்படாமல் போனாலும் பெரிய மனவருத்தங்களை மிச்சம் வைக்காது. உங்கள் இருவரின் கோபம் தீர்ந்துபோனவுடன், நீங்கள் உங்கள் துணையிடம் ஏன் இந்த சண்டையை ஆரம்பித்தேன் என்று சொல்லுங்கள். அதற்காக அவரிடம் மன்னிப்பு கேளுங்கள்.

2. அவசரப்பட்டு சமரசம் செய்து கொள்ள வேண்டாம்.

3. இருவருடைய கோபமும் தணிந்த பிறகு, சண்டையை அலசுங்கள்.

4. சண்டையைப் பற்றி அலசும்போது சண்டை போடுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திய சம்பவங்களைப் பற்றி பேசி நேரத்தை வீணடிக்காதீர்கள்.

5. கோபத்தில் சொல்லும் வார்த்தைகள், உண்மையாகத்தான் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை.
IMG_3820

6. மனஅழுத்தம் காரணமாக சண்டை போட்டீர்கள் என்றால், அதை அனலைஸ் செய்வதில் எந்த பயனும் இல்லை. ஆனால் எல்லா சண்டைகளுமே மனஅழுத்தம் காரணமாக வருபவை என்று முடிவு செய்து கொள்ளவும் கூடாது.

7.  உங்களுடைய சண்டை மேலே சொன்ன எந்த பிரிவிலும் வரவில்லை என்றால், நீங்களாக ஒரு பிரிவை ஏற்படுத்துங்கள்.

8.  சண்டையைப் பற்றி அலசும்போது நீங்களாக ஒரு முடிவுக்கு வராதீர்கள்.

9.  திறந்த மனதுடன் இருங்கள். உடனடியாக எந்த தீர்வையும் காண முடியாவிட்டாலும் எதிர்வரும் நாட்களில் நல்ல தீர்வை எட்ட இது வழிவகுக்கும்.

10. இருவருக்கும் ஒத்துவரும் சமரசத்துக்கு முயற்சியுங்கள்.

“ஆதர்ச தம்பதி ஆகணுமா? சண்டை போடுங்கள்!” இல் 4 கருத்துகள் உள்ளன

  1. சண்டை போடுபவர்கள் எதற்காக சண்டை போட்டோம் என்று யோசிக்காமலே ஸமாதானமாகப் போய்விடுவதும் உண்டு. யாராவது பார்த்தால் அவர்களுக்கு ஞாபகம் இருக்கும். சண்டை போட்டவர்களுக்கு எதற்காக சண்டை போட்டோம் என்று ஞாபகமே வராது.
    எதையும் தீவிரமாக நினைக்காமல் அவ்வப்போது காரணங்களோடு சின்னச் சின்ன சண்டைகள் போடாவிட்டால்
    தூக்கம் வராதோ என்னவோ?
    இப்படியும் சிலர் உண்டு. கணவன், மனைவி சண்டைகளுக்குக் காரணம் வேண்டாம். எல்லாம் நீங்கள்எழுதினதெல்லாம் மிகவும் ஸரி. உபயோகமாக இருக்கும் கட்டுரை உங்களுடையது. அன்புடன்

    இருக்கும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.