சினிமா

தங்கர் பச்சானின் ‘களவாடிய பொழுதுகள்’ : பிரத்யேக படங்கள்

என்றைக்கும் தன் வீரியத்தை இழந்துவிடாமல் ஒவ்வொரு இதயத்தையும் ஆட்டி வைத்து, சுக்கு நூறாக்கிப்போட்டுவிடும் ஆற்றல் காதலுக்கு மட்டுமே உண்டு. காலங்கள் எவ்வளவுதான் கடந்தாலும் என்றும் தன் குணத்தை மாற்றிக்கொள்ளாமல் இருப்பது காதல் மட்டுமே! எத்தனை பேரரசுகளை தவிடுபொடியாக்கியிருக்கிறது! அவ்வளவு வலிமையான காதல் சாதாரண மனிர்தகளை மட்டும் விட்டு வைத்து விடுமா? தினம், தினம் இதில் சிக்கித் தவிக்கும் இதயங்கள்தான் எத்தனை! மனிதர்களாய் பிறந்த ஒவ்வொருவருமே அதனைக்கடந்துதான் வரவேண்டியிருக்கிறது.
சில நொடிகளில் வேர்விட்டு வளர்ந்துவிடுகிற காதல், எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் நெஞ்சைவிட்டுப்போகமட்டும் மறுக்கிறது! துரத்திக்கொண்டேயிருக்கிறது! பாடாய்ப்படுத்துகிறது! காற்றைப்போல உணர்ந்துக்கொள்ள மட்டுமே முடிகிற காதல், ஆண்டாண்டு காலமாக படைப்புக்கலைஞர்களால் தன்னைப் புதுப்பித்துக்கொண்டே வருகிறது. எந்த மொழியுமற்ற காதல் ஒரு சாதாரண மனிதனையே பாடாய்ப் படுத்துகிறபோது ஒரு கலைஞனை விடாமல் பிடித்துக் கொண்டால் என்னவெல்லாம் நிகழும்!
அதில் சிக்குண்ட கலைஞர்களால் கணக்கற்ற  எத்தனை ஓவியங்கள், சிற்பங்கள், இசைக்கோர்வைகள், பாடல்கள், சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், திரைப்படங்கள் என படைக்கப்பட்டுக் கொண்டே யிருக்கின்றன. எந்த மண்ணில், எந்த நாட்டில், எந்த மொழியில் என உலகத்தில் எந்த மூலைக்குப்போனாலும், அங்கெல்லாம் வாழ்ந்து முடிந்த மனிதர்களால் விட்டுச்சென்ற காதலின் அடையாளங்கள் இருந்து கொண்டேதான் இருக்கும்.
காதலின் வலிமையை, வலியை, தாக்கத்தை, துயரத்தை, மகிழ்ச்சியை எழுதிக்கொண்டேயிருக்கலாம். என்றைக்கும் எத்தனை லட்சம் ஆண்டுகள் கடந்தாலும் அதன் பக்கங்கள் எழுதித் தீராது. அதே போலத்தான் உலகின் எந்த மொழியில், எந்த நாட்டில் காதலை மய்யப்படுத்திய திரைப்படங்கள் உருவானாலும் அதன் தனித்துவத்தை இழக்காமல் ஒன்றுக்கொன்று மாறுபட்டதாய் இருக்கின்றன.
பணமிருந்தால் மட்டும் எல்லாவற்றையும் செய்துவிடமுடியாது. விலைக்கு  வாங்கக்கூடியவைகளை மட்டுமே செய்துவிடமுடியும். சிறந்த படைப்புகள் இதற்கு எப்போதுமே விதிவிலக்கு. அவைகள் விலைக்கு வாங்கப்படுவதில்லை. தோன்றுகின்றன! . ஒரே ஒரு காதல் காட்சிகூட இல்லாத, காதலிக்கிறேன் என ஒரு சொல்கூட  சொல்லாத ’அழகி’ திரைமூலமான ”கல்வெட்டு” சிறுகதை எனக்குள் தோன்றியதுதான். திட்டமிட்டு உருவாக்கப்பட்டதில்லை. இந்த பதினொரு ஆண்டுகளில் ஒன்பது படங்களை இயக்கியபின் இப்போதுதான் மீண்டும் ”அழகி” போன்ற காதல் உணர்வை மய்யப்படுத்திய ”களவாடிய பொழுதுகள்” எனும் படைப்பை உருவாக்கியிருக்கிறேன். ”அழகி” போன்றே இந்தப்படமும் நான்  எழுதிய சருகுகள் எனும் குறுநாவலிலிருந்து விரிவாக்கப்பட்டதுதான்.

Kalavadiya Pozhuthugal Movie Stills  (1)

Kalavadiya Pozhuthugal Movie Stills  (2)

Kalavadiya Pozhuthugal Movie Stills  (3)

Kalavadiya Pozhuthugal Movie Stills  (4)

Kalavadiya Pozhuthugal Movie Stills  (5)

Kalavadiya Pozhuthugal Movie Stills  (6)

Kalavadiya Pozhuthugal Movie Stills  (7)

Kalavadiya Pozhuthugal Movie Stills  (9)

Kalavadiya Pozhuthugal Movie Stills  (8)
காதலில் விழுந்து எழுந்து மீண்டுவிட முடியாமல் சிக்குண்ட இதயம் போலத்தான் இதைத்தொடங்கிய நாளிலிருந்து இன்றுவரை ஒவ்வொரு பொழுதும் வேதனையோடும், வலியோடும், துயரங்களோடும் வெளியில் சொல்லமுடியாமல் துடியாய் துடித்துக்கொண்டிருக்கிறேன். ஒரு கலைஞனிடமிருந்து நீண்ட வலிகளுக்குப் பின்தான் சிறந்த படைப்புகள் உருவாக்கமுடியும் என்றால் அந்தப்படைப்புகள் இனி எனக்கு வேண்டாம் எனத்தான் சொல்வேன். உண்மை உணர்வை, உன்னதப்படைப்பாக்க இவ்வளவு தண்டனைகளையும் பெற்றால்தான் அது கிடைக்கும் என்றால், அதற்கான மனவலிமையை நான் இழந்துவிட்டதாகவேத் தோன்றுகிறது.
என்னுடைய ஜெயந்தியும், பொற்செழியனும், செளந்திரராஜனும் இன்னும் சில நாட்களில் ஒவ்வொரு இதயத்திடமும் பேசப்போகிறார்கள். அப்போதுதான் நானும் உங்களிடம் பேசுவேன். இருப்பதிலேயே கடினம் ம் இதயத்துக்கு நெருக்கமான உண்மையைப்பேசும் படைப்புகளை உருவாக்குதுதான் என்பது தேர்ந்த கலைஞர்களுக்கு மட்டுமேத் தெரியும்.
காதலிக்கப்போகிறவர்கள், காதலித்துக்கொண்டிருப்பவர்கள், காதலை மறக்கமுடியாமல் சுமந்து திரிபவர்கள் என எல்லோரையுமே இந்த களவாடிய பொழுதுகள் களமாடும்.
தொடர்ந்து இயக்குநர்களையே நடிகர்களாக, கதை மாந்தர்களாக இயக்கி வரும் எனக்கு இந்தப் படைப்பில் மிகத்தேர்ந்த கலைஞர்களுடன் பணிபுரியும் வாய்ப்புக் கிடைத்தது. ஒப்பற்றக் கலைஞர்களான பிரபுதேவா, பிரகாஷ்ராஜ், பூமிகா, வைரமுத்து, பரத்வாஜ், லெனின் போன்றவர்களுடன் பணியாற்றியதை எனது வாழ்வின் பேறாக நினைக்கிறேன். வெளியீட்டு பணிகளுக்காக படத்தைப் பார்க்க நேரும் போதெல்லாம் அவை காட்சிகளாகத் தெரியவில்லை. நேரடியாக ஒரு வாழ்க்கையை பார்க்கிறேன். எனது உரையாடல்களுக்குப் பதிலாக கையாளப்பட்டிருக்கிற அண்ணன் வைரமுத்து அவர்களின் பாடல் வரிகள் இந்தப்படைப்பிற்கு சிகரமாகத் திகழ்கின்றன. உதிரிப்பூக்களில் தொடங்கி ”அழகி” திரைப்படத்துடன், எனது திரைப்பட வாழ்க்கைப் பயணத்தை முடித்துக்கொள்கிறேன் என அறிவித்துவிட்ட லெனின் அண்ணன் அவர்களை இதில் பணிபுரிய வைத்திருக்கிறது இந்தப்படைப்பு
இறுதியாக ஒன்றைச்சொல்லாமல் என்னால் முடிக்க முடியாது. பிரபுதேவா எனும் பெருங்கலைஞனை இவ்வளவு காலந்தாழ்த்தி எனது படைப்பில் கையாண்டது குறித்து நான் வருத்தப்படுகிறேன்: வெட்கப்படுகிறேன். தமிழர்களுக்கு தமிழ் சினிமாவுக்குக் கிடைக்காத எட்டாக்கனியாக இன்று அவர் இருக்கிறார். இந்த நிலையில் நான் அவரை இங்கு கொண்டுவந்திருக்கிறேன் என்பதைவிட இந்தப்படைப்புதான் அவரை கொண்டு வந்திருக்கிறது.. இந்தப்பொற்செழியனை எப்படி மறக்கப்போகிறேன் எனத்தெரியவில்லை.
என்னை ஆதரித்து வாய்ப்பளித்து நான் கேட்ட இந்தபெருங் கலைஞர்களையெல்லாம் தந்துதவிய தயாரிப்பாளர்கள் திரு. கருணாமூர்த்தி அவர்களுக்கும், திரு. அருண்பாண்டியன் அவர்களுக்கும் நான் என்றும் கடன் பட்டிருக்கிறேன்.
இத்துடன் இப்படைப்பில் எங்களோடு இணைந்து பணியாற்றி,  இன்றைய இளம் இதயங்களில் களவாடிய பொழுதுகள் என்ற இக்காதல் ஓவியத்தை இசையால் சுமக்க வைக்கும் இசையமைப்பாளர் பரத்வாஜ், நடிப்பில் காதலைச்சுமப்பவர்களை சுமந்துக்கொண்டு திரியும் கறுப்பு ராஜா , சத்யன், படத்தொகுப்பில்  மிகப்பெரிய பாய்ச்சலாய்.. இளம் தலைமுறையின் இதயம் கவரப்போகும் படத்தொகுப்பாளர் எனது அண்ணன் லெனின். அச்சு அசலான காதலை, தூய்மையான உணர்வை படச்சுருளுக்குள்  தேக்கி வைக்க, தனது கலையின் மூலம்… கைகொடுத்த கி.கதிர். , என்னை எப்போதும் கலைஞனாகவே ஏற்றுக்கொண்டு, எனக்கு ஊக்கமும், உந்துதலும், ஆறுதலும், அரவணைப்பும் தந்துக்கொண்டிருக்கும்  எழுத்து மற்றும் காட்சி ஊடக நண்பர்கள் எல்லோருக்கும்  இந்த களவாடிய பொழுதுகளின்…வாயிலாக.. உங்கள்  சகோதரன் தங்கர் பச்சானின் இதயம் கனிந்த நன்றிகள்…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.