சமையல், நீங்களும் செய்யலாம், பாரம்பரிய ரெசிபி, மைசூர் ரசம்

மழைக்கு இதமான மைசூர் ரசம்!

ருசி

காமாட்சி
காமாட்சி

வேண்டியவை :
துவரம் பருப்பு -அரைகப்
புளி – ஒரு எலுமிச்சம் பழ அளவு
தக்காளிப்பழம் –பழுத்ததாக மூன்று
வறுக்க சாமான்கள்
தனியா – மூன்று டேபிள் ஸ்பூன்
மிளகு – ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய்  – மூன்று
கடலைப் பருப்பு – இரண்டு டீஸ்பூன்
சீரகம் – இரண்டு டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் – இரண்டு டேபிள் ஸ்பூன்
ருசிக்கு உப்பு
நெய் இரண்டு ஸ்பூன்
தாளிக்க – கடுகு, பெருங்காயம்
வாசனைக்கு – கொத்தமல்லி, கறிவேப்பிலை

செய்முறை:
பருப்பைக் களைந்து துளி மஞ்சள் பொடி , தண்ணீர் சேர்த்து ப்ரஷர் குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும். தக்காளியை சற்று வேகவைத்து ஊறவைத்த புளியுடன் 3 கப் தண்ணீரை சிறிது சிறிதாகச் சேர்த்து சாறெடுக்கவும்.தேங்காய்த் துறுவலைத் தனியாக துளி நெய்யில் வறுக்கவும்.தனியா மிளகு பருப்பு மிளகாயையும் சிறிது நெய்யில் சிவக்க வறுத்துக் கொண்டு, தேங்காய் சீரகம் சேர்த்து, ஆறியவுடன் மிக்ஸியில் கரகரப்பாக ரவைபோல பொடித்துக் கொள்ளவும். ரசம் வைக்கும் பாத்திரத்தில் உப்பு, புளிச்சாறு,பொடித்தபொடி இவைகளைச் சேர்த்து நிதான தீயில் கொதிக்க விடவும்.
கலவை சற்று சுண்டியவுடன் வேக வைத்த பருப்பை மூன்று கப்பாகத் தண்ணீர் விட்டுக் கரைத்துச்சேர்க்கவும். நுறைத்துப் பொங்கும் போது இறக்கி நெய்யில் கடுகு, பெருங்காயம் தாளித்து கொத்தமல்லி, கறிவேப்பிலையைச் சேர்க்கவும். கொதிக்கும் போது துளி வெல்லம் சேர்க்கலாம். காரம் அதிகமாக்க ஒரு பச்சை மிளகாயையும் கொதிக்கும்போது சேர்க்கலாம். குறைவாக்க மிளகு, மிளகாயைக் குறைக்கலாம். சற்று கலங்கலாக கலக்கிச் சேர்த்துச் சாப்பிடும் ரசமிது. ருசிக்கேற்ப பருப்பு தண்ணீரைக் கூட்டிக் குறைக்கவும்.

P1020571

Advertisements

“மழைக்கு இதமான மைசூர் ரசம்!” இல் 6 கருத்துகள் உள்ளன

    1. ரஸம் சாதத்திற்கே காரஸாரமா பஜ்ஜி ருசியாக இருக்கும். பண்ணிவிட்டால்ப் போகிறது. அதிலும் மைஸூர் ரஸம். குறிப்புக்கு நன்றி. அன்புடன்

    1. இங்கே மழைக்குப் பஞ்சமில்லை. பருவமழை வெளுத்து வாங்குகிறது. அங்கும் வந்து விடும்.நன்றி அன்புடன்

  1. அம்மா வணக்கம்! நலமாம்மா…

    உங்க கண்கள் இப்போ நல்லபடியா பார்வைக்கு பிரச்சனையில்லாமல் இருக்குதாம்மா?
    இருந்தாலும் அதிகமாக கண்ணுக்கு வேலை இப்போதைக்கு தராதீங்க…

    அப்புறம் இந்த ரசம் நல்லா இருக்கே. தேங்காப் பூவு இப்படி சேர்ப்பது இப்போதான் அறிகிறேன்மா. ம். செய்து பார்க்கின்றேன்.

    குறிப்பிற்கு மிக்க நன்றிமா!

    1. இளமதி நன்றிம்மா. விசாரிப்புக்களுக்கு. நலமாக இருக்கிறேனம்மா. முதலில் கமென்டுகளுக்குப் பதில் நன்றி சொல்லி விட்டுஆரம்பிக்வேண்டுமம்மா.
      ரஸம் செய்து பார்த்து ருசிக்கவும்.பரிவுடனான பின்னூட்டம். அன்புடன்
      .வேவேண்டுமம்மாவேண்டுமம்மா

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.