கண் பார்வைக் குறைவு, நோய்நாடி நோய்முதல் நாடி!, மருத்துவ செலவு, மருத்துவத் தொடர், மருத்துவம்

தலைவலிக்கு என்னதான் தீர்வு?

நோய்நாடி நோய்முதல் நாடி -4

ரஞ்சனி
ரஞ்சனி

தலைவலிக்கும் பிற உறுப்புகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. முதலில் நாம் பார்க்கப்போவது கண்ணுக்கும் தலைவலிக்கும் உள்ள தொடர்பு.

 • கண்ணுக்கு அதிகப்படியான வேலை கொடுப்பது;
 • குறைந்த வெளிச்சத்தில் படிப்பது; அதிக வெளிச்சமும் கண்ணுக்கு நல்லதல்ல;
 • அதிக நேரம் கணணி முன் உட்கார்ந்து கண்கொட்டாமல் வேலை செய்வது.
 • பயணத்தின் போது படிப்பது, படுத்துக் கொண்டே படிப்பது;
 • கண் பார்வைக் குறைவுடன் படிப்பது; கண் பார்வைக் குறைவு என்றால் உடனடியாக கண் மருத்துவரைப் பார்த்து கண்களை பரிசோதித்து குறையை நிவர்த்தி செய்து கொள்ளவும்.

இந்தச் செயல்கள் எல்லாமே கண்ணுக்கு அதிக அழுத்தத்தைக் கொடுத்து தலைவலியை வா வா என்று அழைக்கும்.

தீர்வுகள்:

 • கனிணி முன் வேலை செய்பவர்கள் அடிக்கடி திரையை விட்டு விலகி தூரத்திலுள்ள பொருளைப் பாருங்கள்.
 • கண்களை சிமிட்டுங்கள். ஐந்து நிமிடம் கண்களை மூடி கண்களுக்கு ஓய்வு கொடுங்கள்.
 • கண்ணாடி அணிந்திருப்பவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி கண்ணாடியை மாற்றுங்கள். காண்டாக்ட் லென்ஸ் அணிந்திருந்தால் அதையும் குறிப்பிட்ட கால அளவில் சரி பாருங்கள்.
 • கண்கள் சேர்ந்துவிட்டால் ஒரு வெள்ளைத் துணியை நனைத்து கண்களின் மேல் போடுங்கள். வெள்ளரிக்காயை வட்ட வடிவமாக நறுக்கி கண்களின் மேல் வைக்கலாம்.
 • போதிய வெளிச்சம் உள்ள அறையில் அமர்ந்து தொலைக்காட்சி பாருங்கள். அதேபோல கனிணி முன் அமரும்போதும் தேவையான வெளிச்சம் இருக்க வேண்டும்.
 • கண்ணாடி அணிபவர்கள் கனிணியில் வேலை செய்யும்போது கண்டிப்பாக கண்ணாடி அணிந்து வேலை செய்யுங்கள்.
 • கண் பயிற்சி செய்யுங்கள். முகத்தை அசைக்காமல் கருவிழியை மட்டும் மேல், கீழ், இடம், வலம் என்று சுழற்றுங்கள்.
 • நிறைய காரட், முட்டை கோஸ் சாப்பிடுங்கள். இவற்றிலுள்ள A வைட்டமின் கண்களுக்கு நல்லது.

இப்படிச் செய்வதால் கண்களும் காக்கப்படும்; தலைவலியும் வராது.

பற்களும் தலைவலியும்:

தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனைமரத்தில் நெறி கட்டுமா?’ என்று ஒரு பழமொழி உண்டு. உடம்பில் எந்தப் பகுதியில் தொற்று ஏற்பட்டாலும் முதல் அறிகுறி தலைவலிதான். பற்களில் குறை இருப்பவர்கள் அவ்வப்போது மருத்துவ சிகிச்சை செய்து கொள்வது அவசியம்.

காதுகளும் தலைவலியும்:

 • அதிக சத்தம், இடைவிடாது காதுகளில் பாட்டு கேட்டுக் கொண்டே இருப்பது இவை தலைவலியை தூண்டிவிடும்.
 • சத்தம் மிகுந்த சூழலில் வேலை செய்பவர்கள் காது அடைப்பான் மாட்டிக் கொள்ளலாம்.
 • எப்போதுமே சிலரது காதுகளில் அலைபேசியின் Earplug செருகி இருக்கும். கண்களுக்கு ஓய்வு போல காதுகளுக்கும் ஓய்வு தேவை. சிறிது நேரம் பாட்டு கேட்டுவிட்டு எடுத்துவிடுங்கள். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷம். நினைவிருக்கட்டும்.
 • குளிர் காலங்களில் காதுகளை மூடி பாதுகாக்க வேண்டும். அதிகக் குளிர் காற்று தலைவலியை உண்டாக்கும்.
 • குளிக்கும்போது சில தினமுமே ஷவர் பயன்படுத்துவார்கள். காதுகளில் நீர் சேர்ந்து மெழுகு உருவாகும். இது அடைத்துக் கொண்டாலும் தலைவலி வரும். அவ்வப்போது காது மருத்துவரிடம் போய் காதுகளை சுத்தம் செய்துகொண்டு வாருங்கள்.

உணவும் தலைவலியும்:

 • அடிக்கடி ஏதாவது காரணம் சொல்லி வயிற்றை காயப் போடுபவர்களைக் கண்டால் தலைவலிக்கு ரொம்ப பிடிக்கும். இவர்களை விடாமல் பிடித்துக் கொள்ளும்.
 • சாப்பிட்டு நேரத்தை ஒத்திப் போடாமல் சரியான நேரத்தில் சாப்பிடுங்கள். நிதானமாக நேரம் எடுத்துக் கொண்டு ரசித்து சாப்பிடுங்கள். வாசலில் ஒரு கால், கையில் தட்டு என்று எப்போதும் ஒரு அவசரத்தில் இருப்பவர்கள் அதிகம் தலைவலிக்கு ஆளாகிறார்கள்.
 • சிலருக்கு குளிர்சாதனப் பெட்டியிலிருந்து நேரடியாக சாப்பிட்டால் தலைவலி வரும்.சோம்பல் படாமல் சுட வைத்து சாப்பிட்டு தலைவலி வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
 • இரவு சுடச்சுட உணவு உண்ணுங்கள். 8 மணிக்குள் இரவு சாப்பாட்டை முடித்துக் கொள்ளுங்கள்.
 • அஜீரணம், மலச்சிக்கல் இவற்றாலும் தலைவலி வரலாம். இவை வராமல் பார்த்துக் கொண்டால் தலைவலியை தவிர்க்கலாம்.
 • நிறைய பச்சைக் காய்கறிகள், பழங்கள் சாப்பிடுங்கள்.

DSC_0155

தலைக்குக் குளித்தலும் தலைவலியும்:

 • அதேபோல அடிக்கடி தலைக்கு குளிப்பவர்களையும் விடாது தலைவலி.
 • தலைக்கு குளித்துவிட்டு சரியாக தலையை துவட்டாமல் அப்படியே நேராகப் போய் குளிரூட்டப் பட்ட அறையில் உட்காருபவர்களையும் விடாது தலைவலி.
 • தலைக்குக் குளித்துவிட்டு பகலில் தூங்கினால் சிலருக்கு தலைவலி வரும்.

தலைவலியும் தண்ணீரும்:

 • உடம்பில் நீர் சத்து குறைந்தாலும் தலைவலி வரும். அவ்வப்போது நீர் குடித்துக் கொண்டே இருங்கள்.
 • தினமும் 2 லிட்டர் தண்ணீர் பருகுங்கள்.

காற்றில் இருக்கும் அசுத்தத்தினால் தலைவலி வரலாம். முடிந்த அளவிற்கு உங்கள் சுற்றுப்புறத்தை – வீடு, அலுவலகம் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.

தலைவலியும் தூக்கமும்:

சீக்கிரம் படுத்து சீக்கிரம் எழுந்திருப்பது நல்லது. அதிகத் தூக்கம், போதிய தூக்கமின்மை இரண்டுமே தலைவலியை தூண்டும்.

அடுத்தவாரம் தொடரலாம்.

தொடர்புடைய பதிவுகள்:

ஒற்றைத்தலைவலியை எப்படிக் கண்டறிவது?

“தலைவலிக்கு என்னதான் தீர்வு?” இல் 24 கருத்துகள் உள்ளன

 1. ஒரு தலைவலி ஜுரம் ஒண்ணு வந்தது கிடையாது என்று சிலர் பெருமையாகப் பேசுவார்கள். நல்ல ஆரோக்கியத்தைக் குறிக்கும் வார்த்தை அது.. உடல் நல்ல ஆரோக்கியத்துடனிருந்தால் எதற்கும் இடம் கிடைக்காது.
  நல்ல காற்றோட்டமும் அவசியமாகிறது.
  நிறைய அனுஸரிக்க வேண்டிய விஷயங்கள் இருக்கிறது. விரிவாகவும், அழகாகவும் எல்லாவற்றையும் குறிப்பிட்டு எழுதியிருக்கிராய். ஓ இவ்வளவு விஷயங்களா என்று தோன்றும்.
  அவசியமாந பதிவு. ஸந்தோஷம். அன்புடன்

 2. தலிவலிக்கும் நம் உடலின் பல பாகங்களுக்கும் ஒரு ரோடே போவதை உங்கள் பதிவு அழகாய் எடுத்துக் காட்டுகிறது.
  அருமையான தகவல்கள் ஸொல்லியிருக்கி௮ரேர்கல் ரஞ்சனி

 3. ஸ்பான்டிலிடீஸ் இருந்தாலும் தலைவலி வரும். அந்தத் தலைவலி பின்னந்தலையோடு சேர்த்துத் தோள்பட்டைக்குப் பரவிக் கைவிரல்கள் வரையும் இருக்கும். கைக்குப் பயிற்சி கொடுக்க வேண்டும். சரியான தலையணை வைச்சுப் படுக்கணும். ராத்திரி தலையணையின் நிலை, அளவு போன்றவை சரியில்லை என்றாலும் பாதி ராத்திரியில் தலைவலி வந்து எழுப்பி விட்டுடும். அனுபவம். :))))

  1. வாருங்கள் கீதா!
   ஸ்பாண்டிலிடீஸ் தலைவலி பற்றி எழுதியதற்கு நன்றி.

   சரியான தலையணை, வழக்கமான இடம் இவை மாறினாலும் சிலருக்குத் தலைவலி வரும்!

   வருகைக்கும், உங்கள் அனுபவத்தை சுவையாக பகிர்ந்து கொண்டதற்கும் நன்றி!

 4. ஒற்றைத் தலைவலிக்குச் சுடச் சுட ஜிலேபி சாப்பிட்டால் சரியாகும் என்கிறார்கள். எவ்வளவு தூரம் சரியானது என்பது தெரியவில்லை. சர்க்கரை நோயாளிகளுக்கு ஒற்றைத் தலைவலி வந்தால் என்ன செய்யறது? :)))))

   1. நீங்கள் சொல்வதுபோல சர்க்கரை வியாதி இருப்பவர்கள் என்ன செய்வார்கள்? பாவம்!

 5. உங்களோட பதிவையும் திறந்து கொண்டால் தான் இதில் பின்னூட்டம் இட முடிகிறது! உங்கள் பதிவை மூடிவிட்டால் இதுவும் வருவதில்லை, ஏன்????????????

 6. அடிக்கடி தலைவலியால் அவதிப்படுகிறவர்களுக்கு உதவும் அருமையான பதிவு.விளக்கமாக,விரிவாக பகிர்ந்தமைக்கு நன்றிங்க.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.