நோய்நாடி நோய் முதல் நாடி-3

ஒரு நாள் அதிகாலையில் ஒரு தொலைபேசி. “மாமிக்கு ரொம்ப மூச்சு விட முடியல. ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கு. மாமியை வெண்டிலேட்டர்ல போட்டுருக்கா”
அடித்துப் பதறிக் கொண்டு நானும் என் கணவரும் ஓடினோம் ‘மாமி’ யைப் பார்க்க. சென்னையில் பல வருடங்களாக இருப்பவர். மார்கழி மாதக் குளிரில் பெங்களூரு வந்திருக்கிறார். மார்பில் சளி கோர்த்துக்கொண்டு இரவு மூச்சு விடமுடியாமல் தவித்திருக்கிறார். மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்து மூச்சு சுலபமாக விட ஆக்சிஜன் மாஸ்க், சளியைப் பிரித்தெடுக்க டியூப் என்று சாங்கோபாங்கமாக சிகிச்சை நடைபெற்றுக் கொண்டிருந்தது. மாமி எங்களைப் புரிந்து கொண்டு புன்னகைக்க முயன்றார். அப்போது தான் எங்களுக்கு மூச்சே வந்தது!
நான் ஏன் இதை இங்கு சொல்கிறேன் என்றால், ஒருவருக்கு உடல்நலம் சரியில்லை என்ற செய்தியை தயவு செய்து நிதானமாக புரியும்படி சொல்லுங்கள். உங்களுக்கு அவர் முக்கியப்பட்டவராக இல்லாமலிருக்கலாம். ஆனால் அவரைச் சேர்ந்தவர்களுக்கு? மிகவும் ஆபத்தான நிலையில் இருந்தாலும் தயவு செய்து பயமுறுத்தாமல் சொல்லுங்கள்.
இன்னொன்றும் சொல்ல விரும்புகிறேன்:
இந்த மாமியை நாங்கள் இருவரும் பார்க்கப் போனபோது அவர் அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்தார். மருத்துவமனை நாங்கள் இருக்கும் இடத்திலிருந்து வெகு தூரம். நாங்கள் போய்ச்சேரும் போது பார்வையாளர் நேரம் முடிந்துவிட்டது. ஆனால் மாமாவுக்கோ எங்களை எப்படியாவது உள்ளே அழைத்துக் கொண்டு போய் அவரை பார்க்கச் செய்ய வேண்டும் என்று. நேராக அங்கிருந்த காவலாளரிடம் போனார். அவரோ ஹிந்தி பேசுபவர். எங்கள் யாருக்கும் அத்தனை நன்றாக ஹிந்தி பேச வராது. மாமா அவரிடம் போய்,’கன்னட வருமா?’ என்றார். அவரும் வரும் என்றார். உடனே மாமா என்னைப் பார்த்து, ‘வாம்மா, வாம்மா, அவரிடம் கன்னடத்தில் பேசு. ரொம்ப தூரத்திலிருந்து வரோம்னு சொல்லு….’ ஆனால் காவலாளர் முடியவே முடியாது என்று மறுத்துவிட்டார். அவர் அப்படி மறுத்தது மிகவும் நியாயமானதுதான். நாங்கள் இருவரும் மாலை வரை அங்கேயே இருந்து மாமியைப் பார்த்துவிட்டு வந்தோம்.
அவசர சிகிச்சை பிரிவில் ஒரு நோயாளி இருக்கிறார் என்றால், நாம் அவரை நினைத்தபோது பார்க்க வேண்டும் என்று அடம் பிடிக்கக் கூடாது. போனவார ‘ஆரோக்கிய பாரதம்’ நிகழ்ச்சியில் மருத்துவர் சொன்னார்: ‘ஏற்கனவே நோயாளிக்கு நோய்த்தொற்று இருக்கும்போது வெளி ஆட்கள் வருவதால் அவர்களிடமிருந்து வேறு விதமான தொற்றுகள் வர வாய்ப்பு கூடுகிறது. பார்வையாளர்கள் நேரத்தில் மட்டும், அதுவும் ஒருவர் அல்லது இருவர் மட்டுமே அவசர சிகிச்சைப் பிரிவுக்கு வரலாம். எல்லோரும் கும்பலாகப் போவதால் மற்ற நோயாளிகளுக்குத் தொந்திரவு ஏற்படலாம்.’ நினைவில் வைத்துக் கொள்ளுவோமா?
சரி இப்போது போன வாரம் விட்ட இடத்திலிருந்து தலைவலியைப் பார்க்கலாம்.

ஒற்றைத்தலைவலியை எப்படிக் கண்டறிவது?
கீழ் காணும் அறிகுறிகளின் பின் வரும் தலைவலியை ஒற்றைத் தலைவலி எனலாம்.
- ஒளிவட்டம்:சிலருக்கு கண்களில் ஒரு ஒளிவட்டம் தோன்றும். விளக்குகள் கண்சிமிட்டுவது போல, புள்ளி புள்ளியாக அல்லது கோடுகளாகத் தெரியும். இது தலைவலி வருவதற்கு முன் தோன்றக் கூடும்.
- மன அழுத்தம், எரிச்சல், மனக்கிளர்ச்சி, மனநிலை மாற்றம். காரணமில்லாத எரிச்சல், திடீரென்று கோபம், உடனே மகிழ்ச்சி என்று மனநிலையில் மாறுதல். பரம்பரையாகவும் இது போல மன அழுத்தம் காரணமாக ஒற்றைத்தலைவலி வரக் கூடும்.
- போதுமான தூக்கமின்மை – ஓய்வின்மை – இரவு தூங்கினாலும் காலையில் எழுந்திருக்கும் போது அசதி, இரவு தூக்கம் வராமல் தவிப்பது. தூக்கமின்மையால் இந்தத் தலைவலி வரும்; இந்தத் தலைவலி வருவதால் தூக்கம் கெடும்.
- சைனஸ் – உடன் வரும் ஒற்றைத்தலைவலியின் அறிகுறி மூக்கடைப்பு, நீர் சுரக்கும் கண்கள்.
- இந்தத் தலைவலி வருவதற்கு முன் சிலருக்கு சாக்லேட் சாப்பிட வேண்டும் என்ற அதீத ஆவல் உண்டாகுமாம். சில உணவுகள் – சீஸ், புளித்த உணவுகள், மது, பியர், உணவு கெடாமல் இருக்க சேர்க்கப்படும் சில பொருட்கள், இவைகள் கூட இந்தத் தலைவலிக்குக் காரணம்.
- கழுத்துவலி, கழுத்தில் இறுக்கமான ஒரு உணர்வு – இதைத் தொடர்ந்து தலைவலி. சிலருக்கு கழுத்திற்குப் பின்புறம் இந்த தலைவலி வரும். 38% பேர் இந்தக் கழுத்துவலி எப்போதுமே தலைவலிக்கு முன் வருவதாகக் கூறுகிறார்கள். 31% பேர் அடிக்கடி கழுத்துவலியும் சேர்ந்து வருவதாக கூறுகிறார்கள்.
- சிலருக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு, சிலருக்கு அடிக்கடி கொட்டாவி வருவது, சிலருக்கு கை மரத்துப் போன உணர்ச்சி, உடம்பின் ஒரு பக்கத்தில் மட்டும் சுருக் சுருக் என்ற வலி இவற்றின் பின் இந்தத் தலைவலி வரும்.
- 73% பேர்களுக்கு வயிற்றுப் பிரட்டலும், 29% பேர்களுக்கு வாந்தியும் வரக் கூடும்.
- சத்தம், இரைச்சல், மிதமிஞ்சிய வெளிச்சம், அதீத வாசனை இவற்றினாலும் இந்த வலி தூண்டப்படும்.
இந்த ஒற்றைத்தலைவலிக்கு ஆளாகுபவர்களுக்கு சில இதமான வார்த்தைகள்:
- உங்களுக்கே தெரியும், என்ன செய்தால் இந்த வலி வருகிறது என்று. அவைகளை தவிர்த்துவிடுங்கள்.
- ஒரு வலி நிவாரணியை முழுங்கிவிட்டு வேலையைப் பார்ப்போம் என்று நினைக்காதீர்கள். தலைவலி அதிகமாகும். வெளிச்சம் வேண்டாமென்றால் ஒரு அறைக்குள் போய் கண்களை ஒரு துணியால் மூடிக் கொண்டு படுத்துக் கொண்டு விடுங்கள்.
- வருமுன் காப்பதே நல்லது.
- அதிக நேரம் தொலைக்காட்சி பார்ப்பது, நல்ல தூக்கம் வரும்போது அதை ஒத்திப் போடுவது, அதிக வெளிச்சத்தில் நீண்ட நேரம் இருப்பது, இரைச்சலான இடத்தில் வெகு நேரம் இருப்பது, இரைச்சலான இசையை கேட்பது போன்றவற்றைத் தவிர்த்து விடுங்கள்.
- நல்ல தூக்கம் உங்களுக்கு இந்தத் தலைவலியிலிருந்து மருந்தில்லாத நிவாரணம் தரும்.
- அதிக வெயிலில் போகும்போது குடை, குளிர் கண்ணாடி அணிவது ரொம்பவும் அவசியம்.
- உணவுகளிலும் அதிகக் காரம், அதிக மசாலா இருப்பவற்றை ஒதுக்கி விடுங்கள்.
இதைபோன்ற எளிமையான வழிகள் மூலம் இந்த தலைவலியை சமாளிக்கப் பழகுங்கள். தலைவலிக்கு நீங்கள் அடிமையாகாமல் அதை உங்கள் கைபிடிக்குள் வைத்துக் கொள்ளுங்கள்.
அடுத்த வாரம் பார்க்கலாம்.
பயனுள்ள குறிப்புக்கள் அம்மா… விளக்கங்களுக்கு நன்றி…
வாங்க தனபாலன்!
பயனுள்ளாதாக இந்தக் குறிப்புகள் அமைந்தன என்பது சந்தோஷத்தைக் கொடுக்கிறது.
வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!
நல்ல விழிப்புணர்வு பதிவு ரஞ்சனி.
தலைவலி என்று மாத்திரைகளை விழுங்காமல் தலைவலி ஏன் வருகிறது என்று ஆராய்ந்து அதற்கேற்ப மருந்து உட்க்கொள்வது நல்லது தான்.
வாங்க கோமதி!
சில நோய்களை கொஞ்சம் பொறுமையாகக் கையாண்டால் நமக்கு நல்லது, இல்லையா?
வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!
அம்மா!! ஒரு வாக்கியம் சொன்னாலும் நச்சுன்னு சொன்னீங்க..
“உங்களுக்கே தெரியும் , என்ன செய்தால் இந்த வலி வருகிறது என்று , அவைகளை தவிர்த்து விடுங்கள்.”
அதான் வலி நிவாரணி மாத்திரை இருக்கே, ஒன்னு போட்ட போச்சு, என்ற எண்ணம் யாருக்குமே வர கூடாது!!
வாங்க மஹா!
வலி நிவாரணியினால் மிகப் பெரிய ஆபத்து வரும் என்பதை எல்லோரும் உணர வேண்டும். அதற்குத்தான் இந்த விழிப்புணர்வுக் கட்டுரை.
வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி.
ஆமாம். மனஸை கொஞ்சம் நிம்மதியாக வைக்க ஏதாவது ஸந்தோஷ நினைவுகளை எண்ணுங்கள். ஒன்றையுமே யோசனை செய்யாமல் கண்ணை மூடிக்கொண்டு சற்றுநேரம் ஓய்வெடுங்கள்.
விரதம், பூஜை,புனஸ்காரம் என்று அளவுக்கதிகமாக வயிற்றைக் காயப் போடாதீர்கள். பசிகூட கூட தலைவலியை உண்டாக்கும்.
இதையும் சேர்த்துக்கொள். எடுத்த காரியம் ஸரிவர முடியவேண்டுமே என்ற டென்ஷன் கூட.. நிதானித்து யோசனை
செய்து ப்ளான் போட்டு வேலை செய்யுங்கள்.
உன் யோசனைகளெல்லாம் அருமையான து. உபயோகமான விஷயங்கள்..படித்தாலே தலைவலிகளெல்லாம் ஓடிப் போய்விடும்.
தலைவலிக்கு சுக்கு அரைத்து லேசாக பத்துபோட்டகாலம் கூட எனக்குத் தெரியும்.
மெடிகல் கம்பெனிக்காரர்கள் வியாபாரம் போய்விடப்போகிரதென்று சண்டைக்கு வராமலிருந்தால் ஸரி. ரஞ்ஜனி. அன்புடன்
வாருங்கள் காமாக்ஷிமா!
மனதில் யோசனைகள் ஓடிக் கொண்டே இருந்தால் தலைவலி வரத்தான் செய்யும்.
நீங்கள் சொன்ன சுக்கு வைத்தியத்தை திரு சூரி அவர்களும் சொல்லியிருக்கிறார்கள். ஒரே ஒரு வித்தியாசம் நீங்கள் பத்து போடச் சொன்னீர்கள். அவர் உள்ளுக்கு மருந்தாகவே சாப்பிடலாம் என்கிறார்.
கீழே அவரது குறிப்பு இருக்கிறது படித்துப் பாருங்கள்.
வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!
அருமையான விளக்கங்கள் படித்த்வுடன் தனைவலி இருந்தால் கூட போய்விடும் அளவிற்கு எழுதியிருக்கிறீர்கள் பாராட்டுக்கள்
வாருங்கள் விஜயா!
வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி!
உபயோகமான தகவல்கள்.
வாங்க ஸாதிகா!
வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!
உபயோகமான தகவல்கள்,
ராதிகாவை கொஞ்சம் சீரியஸ் -ஆகப் போட்டு – அதிக நேரம் தொலைக்காட்சி பார்ப்பதை தவிர்த்து விடுங்கள் என்று போட்டிருக்கிறீர்கள்.
கோவிச்சுக்கப் போறாங்க!
sury Siva12:15 AM1
இந்த பின்னூட்டம் திரு சூரி சிவா அவர்களால் (சுப்பு தாத்தா) கூகிள் + இல் எழுதப் பட்டது. இதிலுள்ள குறிப்பைப் பயன்படுத்துபவர்கள் முயற்சி செய்யலாம். சுக்கு உடலுக்கு நல்லது. தலைவலியைப் போக்கவில்லை என்றாலும் சுக்கு உடம்புக்கு கெடுதல் செய்யாது.
migraine is a highly disturbing ailment. One may suffer at any time an.y day
All medications such as pain killers may reduce. Ergotamine is one such drug which one can take when one has a feel of migraine. kk
But let me tell u. This sukku podi, does wonderful immediate cure. Believe me.
My colleague, a middle aged woman, in our institution used to suffer and whenever she had this, took only sukku podi and got cured within minutes.
Believe me.
Sukku podi does not have side effects.
Add a little vellam with sukku when u grind it.
it is good for good digestion and relieving gas also.
subbu thatha.
ஒற்றைத் தலைவலியோடு இருபது வருட்ங்களுக்கு மேலாக வாழ்ந்து வருகிறேன்.. (பெண்டாட்டியைச் சொல்லலெங்க.. வத்தி கித்தி வக்காதெங்க). என்னை ஆண்ட ஒற்றையை சென்ற ஐந்து ஆண்டுகளாக நான் ஆண்டு வருகிறேன். முடிந்தவர்கள் இதைக் கடைப்பிடிக்கலாம்:
– வருமுன் காப்பதென்பதென்பது இயலாத காரியம் 🙂 கண்ணைச் சுத்தி ஒளிவட்டம் அமீபா தெரிஞ்சுச்சுன்னா ஒற்றை ஆஜர். ஆகயா. ஒச்சிந்தி. வந்தாச்சு. அதனால அமீபா வட்டமிடத் தொடங்கினதுமே ஒரு டபுள் எஸ்பிரசோ (அல்லது சர்க்கரை கலவாத உள்ளூர் கருங்காப்பி) அடிச்சுரணும்
– தொடர்ந்து பதினாறு அவுன்ஸ் பச்சைத் தண்ணி குடிக்கவேண்டும்
– ரெண்டு மூணு ஐஸ்கட்டியை வைத்து நெற்றியின் பக்கவாட்டில் ஒத்தடம் கொடுக்கவேண்டும்; நான் மிகக் குளிர்ந்த நீரில் முகத்தை அலம்புவேன் பத்து பதினைந்து நிமிடம்.
– வேகமான நடை அல்லது மிதமான ஜாகிங் – ஐந்து கிலோமீடராவது போகவேண்டும்
நாளடைவில் ஒற்றை ஒழியாது என்றாலும், உங்கள் கைப்பொம்மையாகும். அனுபவத்தில் அறிந்தது.
அதைவிட்டு இருட்டறை, மாத்திரை, அம்ருதாஞ்சன் என்று தொடங்கினால் நாம் அதற்கு அடிமையாவோம். போகப் போக இன்னும் மோசமாகும்.
வாங்க துரை!
வத்தி வைக்க மாட்டேன். கவலை வேண்டாம். (Mutual Understanding!)
உங்கள் குறிப்பு நிறைய பேர்களுக்கு உதவும்.
விளக்கமாக எழுதியதற்கு நன்றி!
இதைத்தான் நான் வரும்முன் காப்பது என்று சொன்னேன்.
வணக்கம்
அம்மா
அனைவருக்கும் பயனுள்ள பதிவு அருமையாக எழுதியுள்ளிர்கள் வாழ்த்துக்கள் அம்மா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்
வாருங்கள் ரூபன்!
வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி!
ஒற்றைத் தலைவலி ஒரு பக்கமா வரும்னு சொல்லுவாங்க. நீங்க சொல்வதுபோல் வருமுன் காத்துக்கொள்வதே நல்லது. சிறப்பான கட்டுரைக்கு நன்றிங்க.
வாங்க சித்ரா!
ஒற்றைத் தலைவலி நீங்க சொல்வதுபோல ஒரு பக்கம் தான் வரும். என் பெண் இந்தத் தலைவலியினால் மிகவும் அவஸ்தைப் படுகிறாள். வருமுன் காப்பதுதான் சிறந்தது என்று அவளுக்கும் சொல்லுகிறேன்.
வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி.