ஒற்றைத் தலைவலி, தலைவலி ஏன் வருகிறது?, நோய்நாடி நோய்முதல் நாடி!, மருத்துவத் தொடர், மருத்துவம்

தலைவலி ஏன் வருகிறது?

நோய்நாடி நோய் முதல் நாடி – 2

ரஞ்சனி
ரஞ்சனி

எனது முன்னுரையில் ‘தனி மனிதனின் ஆரோக்கியம் அவன் வாழும் சமுதாயத்திற்கு அவன் தன்னை சார்ந்த சமூகத்திற்குச் செய்யும் உதவி’ என்று சொல்லியிருந்தேன்.

ஒருமுறை ஆரோக்கிய பாரதம் (பொதிகை தொலைக்காட்சி தினமும் மாலை 7.30 மணியிலிருந்து 8 மணி வரை) நிகழ்ச்சியில் மருத்துவர் ஒருவர் காச நோய் பற்றிப் பேசும்போது சொன்னார்:

காச நோய்க்கான மருந்துகளை தவறாமல் மருத்துவர் குறிப்பிடும் நாள் வரை எடுத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் அந்த நோயை மறுபடி அண்டவிடாமல் செய்ய முடியும். ஆனால் உண்மையில் நோயாளிகள் அப்படிச் செய்வதில்லை. முதல் மூன்று மாதங்கள் மருந்து சாப்பிட்டுவிட்டு ‘எனக்கு சரியாகிவிட்டது; இனிமேல் மருந்துகள் தேவையில்லை என்று நோயாளிகள் அவர்களாகவே ஒரு முடிவுக்கு வந்துவிடுகிறார்கள். ஆனால் நோய்க் கிருமிகள் உள்ளேயே இருக்கின்றன. நோயாளிகள் இருமும் போதும், எச்சிலை தெருவில் உமிழும் போதும் இந்த நோய்க் கிருமிகள் மற்றவர்களுக்குப் பரவுகின்றன. அதுமட்டுமில்ல; மருந்துகளை தொடர்ந்து எடுக்காமல் மறுபடி நோய் அறிகுறி வரும்போது மட்டும் சாப்பிடுவதால் அவர்களது உடம்பில் மருந்துகளை ஏற்றுக் கொள்ளும் தன்மை குறைகிறது. இதனால் மருந்து உட்கொண்டும் பயனில்லாமல் போகிறது.’

எப்போது ஒரு மனிதன் தன் ஆரோக்கியத்தை சரிவர பார்த்துக் கொள்ளுகிறானோ, அப்போது அந்த சமூகமே ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ ஆரம்பிக்கிறது. ஆரோக்கியம் என்பது தனி மனிதனிலிருந்து அவன் குடும்பம், அவனை சுற்றியிருப்பவர்கள், அவனது உறவினர்கள் என்று தொடர்கிறது. இப்படித்தான் ஒரு ஆரோக்கியமான சமுதாயம் உருவாகிறது. இதிலிருந்து நாம் ஒவ்வொருவரும் நம்மை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டியது மிகமிக அவசியம்.

இந்த வாரத்திலிருந்து நம் உடம்பின் ஒவ்வொரு உறுப்பாகப் பார்த்துக் கொண்டு போகலாம்.

எண் சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம். அதனால் தலையிலிருந்து ஆரம்பிக்கலாம்.

தலை என்றவுடன் நினைவுக்கு வருவது தலைவலி தான், இல்லையா?

சின்ன வயதில் பள்ளிக்கு மட்டம் அடிக்கச் சொல்லப்படும் காரணங்களில் முதன்மையானது. ஒருமுறை நான் வயிற்றுவலி என்று சொல்ல, சோறு தண்ணீர் இல்லாமல் பட்டினி கிடக்க வேண்டி வந்தது. ஆனால் தலைவலி என்றால் சாப்பாடு கிடைக்கும். அதனால் இது எனக்குப் பிடித்த வலி!

Actress Angana Roy

தலைவலி வருவதற்குக் குறிப்பிட்ட காரணங்கள் என்று கிடையாது. ஒருமுறை வாழும் கலைப் பயிற்சியின் போது, பயிற்சியாளர் சொன்னார்: யாரெல்லாம் வாழ்க்கையில் தங்கள் செயல்களுக்கு பொறுப்பு ஏற்பதில்லையோ, அவர்களுக்கு தலைவலி வரும் என்று! அட! தலைவலி வர  இப்படிக்கூட ஒரு காரணம் இருக்கிறதா என்று வியப்பாக இருந்தது.

தலைவலியும் ஜுரமும் தனக்கு வந்தால் தெரியும் என்ற பழமொழியையும் நினைவில் வைத்துக் கொண்டு கட்டுரைக்குப் போகலாம்.

தலைவலி ஏன் வருகிறது?

தலைவலி என்பது  உடம்பினுள் இருக்கும் ஒரு நோயினுடைய அறிகுறி என்று சொல்லலாம். தலை மற்றும் கழுத்துப் பகுதிகளில் ஏற்படும் சில வேறுபாடுகளினால் தலைவலி ஏற்படுகிறது. நமது மூலையிலுள்ள திசுக்களுக்கு வலியை உணரும் தன்மை கிடையாது. ஆனால் மூளையை சுற்றியிருக்கும் வலி உணரக்கூடிய அமைப்புகளில் ஏற்படும் தொந்திரவுகளினால் தலைவலி ஏற்படுகிறது. தலை மற்றும் கழுத்துப் பகுதிகளில் 9 இடங்களில் இந்த வலி அறியும் அமைப்புகள் இருக்கின்றன.

தலைவலிக்கான சிகிச்சைமுறை அதன் மூல காரணத்தை ஒட்டி அமையும். பொதுவாக வலி நிவாரணிகள் பயன்தரும்.

சர்வ தேச தலைவலி அமைப்பு இந்தத் தலைவலிகளை இரண்டு பிரிவுகளாக பிரித்திருக்கிறது. முதன்மை மற்றும் இரண்டாம்தர தலைவலிகள். இந்தப் பிரிவுகள் உலக சுகாதார அமைப்பினால் அங்கீகரிக்கப்பட்டவை.

மைக்ரேன் எனப்படும் கடுமையான ஒற்றைத்தலைவலி, மன அழுத்தத்தினால் வரும் தலைவலி, கொத்து தலைவலி, மற்றும் முப்பெரும் நரம்புகளில் தன்னிச்சையாக வரும் தலைவலி, தலையிடி என்னும் தலைவலி, இருமலினால் வரும் தலைவலி, உடல் அசதியால் வரும் தலைவலி இவையெல்லாம் முதன்மை பிரிவில் வருபவை.

ஒரு நோயின் காரணமாக வரும் தலைவலிகளை இரண்டாம் வகை என்கிறார்கள்.

சுமார் 200 வகையான தலைவலிகள் உள்ளன. இவைகளில் சில எந்த வகையான தொந்திரவும் கொடுப்பதில்லை. ஆனால் சில உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியவை.

 • முதன்மை தலைவலிகள் என்பனவற்றிற்கு அப்பட்டமான அறிகுறிகள் உண்டு. உதாரணத்திற்கு ஒற்றைத்தலைவலி என்பது தலையின் ஒரு பக்கத்தில் மட்டும் தலையை யாரோ உலக்கை வைத்து இடிப்பது போல வலிக்கும். வெளிச்சம், சத்தம், வாசனை இவைகள் இந்தத் தலைவலியின் எதிரி. வாந்தி வரும் அறிகுறி இருக்கும். எந்த வேலையும் செய்ய முடியாமல் போகும். பசி இருக்காது. வயிறு பாதிக்கப்படும். அடிவயிறு வலிக்கும். 3 மணிநேரத்திலிருந்து 3 நாள் வரை நீடிக்கும்.
 • முப்பெரும் நரம்புகள் பாதிக்கப் பட்டு வரும் தலைவலி முகம் முழுக்க வலியுடன் தோன்றும்.
 • விட்டுவிட்டு வரும் கடுமையான வலியை கொத்து தலைவலி (Cluster headache) என்கிறோம். இதனால் பாதிக்கப் படுபவர்கள் ஒரு இடத்தில் நிற்க முடியாமல், படுக்க முடியாமல்  தவித்துப் போவார்கள்.
 • தலை அல்லது கழுத்தில் ஏற்படும் தொந்திரவினால் வரும் சில தலைவலிகளால் அதிகத் தொல்லை இல்லை.
 • சில மருந்துகளை – குறிப்பாக வலி நிவாரணிகளை அதிகமாக எடுப்பதால் – தலைவலி குறைவதற்குப் பதில் அதிகமாகலாம்.

பல நாட்களாகத் தொடரும் தலைவலிக்கு வேறு பல பரிசோதனைகளின் மூலம் காரணம் கண்டறிகிறார்கள்.

மன அழுத்தத்தால் வரும் தலைவலி தினசரி தலைவலி என்றழைக்கப்படும். சிறிய அளவில் ஆரம்பித்து மிதமான வலியாக மாறும். இது பெரியவர்களுக்கும், பதின்வயதுக்காரர்களுக்கும் வரும்.

தொடர்ந்து அடுத்த வாரம் பார்க்கலாம்.

“தலைவலி ஏன் வருகிறது?” இல் 11 கருத்துகள் உள்ளன

 1. /// ஒரு மனிதன் தன் ஆரோக்கியத்தை சரிவர பார்த்துக் கொள்ளுகிறானோ, அப்போது அந்த சமூகமே ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ ஆரம்பிக்கிறது… ///

  அருமையான கருத்துடன் ஆரம்பித்து, முதலில் முக்கியமான தலைவலி பற்றிய… ஒவ்வொரு பிரிவாக… விளக்கங்களுக்கு நன்றி அம்மா… தொடருங்கள்…

 2. தலைவலி பற்றி பார்த்தவுடன், என் தோழி ஒருவர் சிரமப்பட்டது நியாபகம் வருகிறது! எதனால் இந்த தலைவலி என்றே தெரியாமல், குழம்பி,தவித்து, குடும்பத்தினர் அனைவரும் துன்புற்று தவித்தனர்! கடைசியில், அவர் தலையில், fridge இல் வைக்கப்பட்ட தயிரை, அதே குளிர்ச்சியோடு தேய்த்து குளித்தது தான் என் தோழியின் தீராத தலைவலிக்கு காரணம் என்று கண்டுபிடித்தனர் !!

 3. நான் ப்ரக்னென்ட் ஆன பிறகு இது வந்த‌தில்லை.அப்படியே இன்றுவரை தொடர்கிறது.அதைபற்றி மறந்தே போயாச்சு.உங்க பதிவால்தான் இன்று இது நினைவுக்கு வருகிறது.ஒருகட்டத்தில் எங்கம்மாவுக்கு ஒற்றைத் தலைவலி இருந்து பிறகு சரியாகிப்போச்சு.

  “தலைவலியும்,பல்வலியும் அவரவர்க்கு வந்தால்தான் தெரியும்”___என்று எங்கள் ஊர் பக்கம் கொஞ்சம் மாற்றி சொல்வோம்.இதுல ஒன்னு வந்துச்சுன்னா இன்னொன்னும் கூடவே சேர்ந்து வந்திடும் என்பதற்காக.

  தலைவலியால் ஒரு நன்மையும் உண்டுன்னு இன்றுதான் தெரிந்து கொண்டேன். இது முன்னமே தெரிஞ்சிருந்தா நிறைய மட்டம் போட்டிருக்கலாம்.தலைவலியை நிறுத்த முயற்சிப்பதற்கு பதில் வருவதற்கான காரணம் தெரிந்துகொண்டால் ஓரளவுக்கு அதிலிருந்து தப்பிக்கலாம்.மேலும் தொடருங்கள்.

 4. தலைவலியா? இது நினைத்தகாரியம் முடியாவிட்டாலும், மிகவும் உணர்ச்சி வசப்படுவதாலும், கோபத்தினாலும், மநஸ்தாபத்தினாலும் கூட உண்டாகும். அளவுக்கு மீறி சிந்தனை, எல்லாவற்றையும்விட
  ப்ளட் ப்ரஷர் அதிகமாவதைக்கூட இந்தத் தலைவலி காட்டிக் கொடுக்கும்., மருந்துகள் சிலஸமயம், தலைவலியை, திருகுவலி
  ஆக்குவதும் உண்டு. பொய் சாக்கு சொல்வதற்கு தலைவலி உதவுவதுபோல வேறு எதுவும் உதவாது.
  இது எந்த நாளுக்கும் பொருந்தும். இப்பல்லாம் தலைவலின்னாலும்
  ஸ்கேன் அளவிற்கு பரிசோதனைகள் இருக்கு.. இப்படி பயப்படுபவர்களும் இருக்கிரார்கள்.
  உன்னுடைய பதிவு அபாரமா இருக்கு. நானும் நாலுவரி எழுதியிருக்கேன்.
  தலைக்கென்று வலியா? வலிக்கென்று? தலையா. இன்னும் எழுது.படிப்போம். அன்புடன்

 5. படித்தால் தலைவலி வராமல் இருக்கும்படி நன்றாக எசுதியுள்ளீர்கள் ரஞ்சனி என் தங்கையும் அத்தங்காவும் பல வருடங்களாக மைக்ரென் என்ற தலைவலியுடன் போராடிக்கொண்டுருக்கிறார்கள் அந்த நாளில் அவர்களின் வேதனையைப் பார்க்க இயலாது எத்தனையோ டாக்டர்கள் பணம் ச்ம்பாதித்ததுதான் ஆயிற்றே தவிர இவர்கள் தலைவலி இன்று வரை தீரவில்லை.

 6. நீங்கள் சொல்வது போல் தலைவலி ஒரு அறிகுறி தான். கடவுள் கொடுத்த வரம் தான் இந்த வலி .தலைவலி என்று இல்லை எந்த வலியுமே வருவதால் நாம் உஷார் ஆகி விடுகிறோம்.
  உங்கள் தலைவலி நன்றாகவே இருக்கிறது.
  வாழ்த்துக்கள்.
  தொடருங்கள்……

 7. சில வருடங்களுக்குமுன் வரை நான் கடுமையான ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப் பட்டிருந்தேன். ஏதேதோ சோதனைகள். கண் முதல் ஸ்கேன் வரை! இப்போது தேவலாம். ஆனால் அத்தகு சாப்பிட்ட மருந்துகளின் பக்க விளைவுகள் என் பற்களை பாதித்தன!

 8. தலையின் பிதடி வழியே உள்ளே கடுமையான தலை வலி.!! மூளை வலிப்பது போல் தோன்றுகிறது ,தலையும் மொத்தமாக சேர்ந்து பயங்கர வலி..இதை பற்றி கொஞ்சம் விளக்குங்களேன்…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.