கோ- ஆப்டெக்ஸ், சீட்டு, சேமிப்பது எப்படி?, சேமிப்பு, நகைச் சீட்டு, பட்டுப் புடவைச் சீட்டு, மாதத் தவணைத் திட்டம்

சீட்டு போட்டு பட்டுப் புடவை வாங்கலாம்!

 நம் எல்லோருக்குமே இருக்கும் கனவு தீபாவளி, பொங்கல் மாதிரியான பண்டிகைகளில் புது பட்டுப் புடவை வாங்கி அணிய வேண்டும் என்பதுதான். விற்கிற விலைவாசியில் ரூ. 2 ஆயிரம், 3 ஆயிரம் கொடுத்து பட்டுப் புடவை வாங்குவதென்றால் மனசு பதைக்கத்தான் செய்யும். பல சமயங்களில் பர்ஸும் கடிக்கத்தான் செய்யும்! சிறுக சீட்டுப் போட்டு நகை வாங்குவதுபோல் சிறுக சேமித்து பட்டுப் புடவை வாங்கலாம்.

சில வருடங்களுக்கு முன்புவரை பிரபல ஜவுளிக்கடைகள் மாதந்திர சேமிப்புத் திட்டங்களை நடத்திக் கொண்டிருந்தன. ஆனால் மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்துவிட்ட சமீப வருடங்களில் பல ஜவுளிக்கடைகள் இந்த திட்டத்தை நிறுத்திவிட்டன. ஆனாலும் பாரம்பரியமாக பட்டுத் துணிகள் விற்கும் சென்னையைச் சேர்ந்த ராசி சில்க்ஸ், ரங்காச்சாரி கிளாத் ஸ்டோர்ஸ் போன்ற கடைகள் இன்னமும் மாதந்திர தவணை மூலம் பட்டுப் புடவை வாங்கும் திட்டத்தை செயல்படுத்திக் கொண்டிருக்கின்றன. இதேபோல் தமிழகம் முழுக்க பாரம்பரியத்துடன் பட்டுத் துணிகளை விற்பனை செய்யும் கடைகளிலும் இந்த மாதத் தவணைத் திட்டம் இருக்கிறது.

pudavai
பட்டுப் புடவைச் சீட்டில் அப்படியென்ன ஸ்பெஷல்?

நகைச் சீட்டு போலத்தான் இதுவும். 12 மாதங்கள் ஒரு குறிப்பிட்ட தொகையைச் செலுத்தினால் 12வது மாத இறுதியில் சீட்டுத் தொகையுடன் அந்த ஜவுளிக் கடை போனஸ் தொகையை சேர்த்து வழங்கும். நாம் அந்த மொத்த பணத்தில் விரும்பிய துணிகளை அதே கடையில் வாங்கிக் கொள்ள முடியும். ஆரம்பத்திலேயே சொன்னதுபோல் ரூ. 2 ஆயிரம், 3 ஆயிரம் கொடுத்து மொத்தமாக பணம் கொடுத்து புடவை வாங்கும்போது பெரிய சுமையாகத் தெரியும். மாதாமாதம் சிறு தொகையை சேமித்து வந்தால் பெரிய சுமை குறையும். இதில் லாபம் என்று பார்த்தால் இதுதான்!
பட்டுப் புடவை சேமிப்புத் திட்டத்திலேயே அதிக லாபம் தரும் நிறுவனம் ஒன்று இருக்கிறது. அரசு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ்தான் அது! கிட்டத்தட்ட நாம் கட்டும் தொகையில் 40 சதவீத அளவுக்கு போனஸ் தொகையை நமக்கு தருகிறது கோ- ஆப்டெக்ஸ். இன்னொரு ஸ்பெஷல் என்ன தெரியுமா?  சீட்டின் கால அளவு 10 மாதங்கள்தான்! ‘வாவ்’ போட வைக்கிறது இல்லையா?!
கோ-ஆப்டெக்ஸின் இந்தத் திட்டம் பற்றி இன்னும் விரிவாகப் பார்ப்போம்…மாதம் ரூ. 1000 வீதம் 9 மாதங்கள் கட்டினால் போதும் 10வது மாதத் தொகையை நிறுவனமே கட்டும். 10வது மாதம் முடிந்ததும் 30 சதவீத போனஸ் தொகையுடன் சேர்த்து ரூ. 14286 ஐ வழங்கும். இந்த மெச்சூரிடி அமவுண்டுக்கு ஏற்ப விரும்பிய கோ- ஆப்டெக்ஸ் ரகங்களை வாங்கிக் கொள்ளலாம். ஒரிஜினல் சில்க் மார்க் முத்திரை பதித்த பட்டுப் புடவைகளை சுலபமான சேமிப்பு முறையிலேயே வாங்கிக் கொள்ளலாம்.
கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் எப்படி இவ்வளவு டிஸ்கவுண்ட் தரமுடியும் என்கிற கேள்வி உங்களுக்கு வந்திருக்கும். பட்டுத் துணி நெய்பவர்களிடமிருந்தே குறைந்த விலைக்கு வாங்கி விற்பதால்தான் கோ-ஆப்டெக்ஸால் அதிக லாபம் வைக்கலாம் நமக்கு குறைந்த விலைக்கே தர முடிகிறது.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.