கத்தரிக்காய் ரசவாங்கி காராமணியுடன், காமாட்சி, காராமணி, சமையல், சாம்பார் செய்வது எப்படி?, விருந்து சமையல்

கத்தரிக்காய் ரசவாங்கி காராமணியுடன்

விருந்து சமையல்

காமாட்சி
காமாட்சி

விருந்து சமையலில்,  பருப்பு உசிலி, வாழைக்காய் கறி அவியல் முதலானது செய்திருக்கிறோம். கலத்திற்கு பருப்பு ஒன்றும் பிரமாதமில்லை. வெந்தபருப்பில் திட்டமாக உப்பு சேர்த்து, துளி மஞ்சள்பொடி சேர்த்து,சற்று நெகிழ்வாக வைத்தால் போதும். இலை போட்டுப் பரிமாறும் போது அரைத்துவிட்டுச் செய்த,  பிட்லையோ, ரசவாங்கியோ  செய்து பரிமாறுவது வழக்கம்.   சாதாரணமாக   சாம்பார் எப்போதும் சாப்பிடும் வழக்கம்.. சற்று மாறுதல். இந்த அரைத்து விட்ட வகைகளில். சற்று  கெட்டியாகச் செய்வதால் இலையில் ஓடாது கலந்து சாப்பிட  சுலபமாக இருக்கும். காராமணி,  அதிலும்,வெள்ளைக் காராமணியுடன் சேர்த்துச் செய்தால் நன்றாக இருக்கிறது.  சாம்பார் மாதிரி இல்லாமலும்,  கூட்டுமாதிரி கெட்டியாக இல்லாமலும், ஒரு நடுவாந்திரமாக தயாரிப்போம் வாருங்கள். வறுத்து அறைத்துச், செய்வதெல்லாம்  ஓரளவு உங்களுக்குத் தெரிந்த விஷயம். அதுவும் சிறிய அளவிலேயே  நான் கூறுகிறேன்.

வேண்டியவைகள்:

நல்ல கெட்டி வகை கத்தரிக்காய் – 3 அல்லது 4. அதிலும் காம்பினருகில் முள்ளோடு  கூடியதான கத்தரிக்காய் மிகவும் நன்றாக இருக்கும். தேடவேண்டாம். கிடைப்பது போதும்.  

தக்காளி – 1

தனியா – 2 டீஸ்பூன்

மிளகு -அரைடீஸ்பூன்

உளுத்தம் பருப்பு -1 டீஸ்பூன்

கடலைபருப்பு – 1 டீஸ்பூன்

வற்றல்மிளகாய் – 3

பெருங்காயம் – வாசனைக்கு

தேங்காய்த் துருவல் – 5 டேபிள் ஸ்பூன்

துவரம்பருப்பு – கால்கப்பிற்கு

காராமணி – கால் கப் ( ப்ளாக் ஐ பீன்ஸ் )

புளி – பெரிய நெல்லிக்காயளவு

தாளித்துக்கொட்ட – எண்ணெய்,  கடுகு

கொத்தமல்லி, கறிவேப்பிலை

ருசிக்கு – உப்பு

மஞ்சள்    பொடி சிறிது.

P1020781

செய்முறை :  

1. காராமணியை இரவே நன்றாகக் களைந்து ஊரப்போடவும்.  

2. கத்தரிக்காயைச் சற்றுப் பெரிய துண்டங்களாக நறுக்கி. தண்ணீரில் போட்டு வைக்கவும். . வடிக்கட்டவும்.  

3. புளியை நன்றாகக் கரைத்து வைத்துக் கொள்ளவும்  

4. துவரம் பருப்பையும், காராமணியையும், ப்ரஷர் குக்கரில் திட்டமாகத் தண்ணீர் வைத்து மஞ்சள்பொடி சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.  

5. மிளகாய், உ.பருப்பு,க.பருப்பு,தனியா, மிளகு யாவற்றையும் எண்ணெயில் சிவக்க வறுத்துக் கொண்டு, தக்காளியையும் சேர்த்து வதக்கி, இறக்கி தேங்காயுடன் ஆறிய பிறகு மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

 6. குழம்பு வைக்கும் பாத்திரத்தில்   ஒரு ஸ்பூன் எண்ணெயைக் காயவைத்து,  காயைப் போட்டு லேசாக வதக்கவும்.

 7. புளித் தண்ணீரைச் சேர்த்து வேண்டிய உப்பு போட்டு கொதிக்கவிடவும்  

8. காய் முக்கால் பதம் வெந்ததும் ,  வெந்த பருப்பைச் சேர்க்கவும்.

 9. அரைத்து வைத்திருக்கும் கலவையைக் கரைத்துச் சேர்த்துக் கொதிக்க வைத்து இறக்கவும்.  

10. எண்ணெயில்,கடுகு,பெருங்காயம், தாளித்துக் கொட்டி, கொத்தமல்லி,கறிவேப்பிலை சேர்த்துக் கலக்கவும்.. அதிகம் ஓடஓட இறாமல் செய்யவும். சாப்பிட வேண்டியதுதான் பாக்கி.

P1020777

நான் வெங்காயம் சேர்த்துச் செய்வது கிடையாது. உங்களுக்கு வேண்டுமானால்,   சாம்பார் வெங்காயம் சிறிது வதக்கிப் போடுங்கள். அல்லது   நாலைந்து வெங்காயத்தை சாமான்களுடன் வதக்கி அறைத்து விடுங்கள். சில பேருக்கு வெங்காய வாசனை அவசியம்  வேண்டுமானால் இப்படிச் செய்யலாம். காரம்,புளிப்பு அதிகம் தேவை என்றால் அதிகப்படுத்தவும். மிளகு வாசனையுடன்  ரசவாங்கி தயார். எப்படி இருக்கு?

பச்சைமிளகாய் ஒன்று போட வேண்டுமா?  போட்டால் வாசனையாகத்தானிருக்கும். சிவப்பநிற  காராமணி போட்டும் செய்யலாம். பூசணிக்காய்,கத்தரிக்காய் சேர்த்து, முழுக் கடலையுடனும் செய்தால் அதுவும் ருசிதான்..பிட்லை செய்வதுடன் நில்லாமல்  கூடவே மோர்க்குழம்பும் செய்வது வழக்கம்.. எதெது மனதிற்குப் படுகிறதோ அவைகளைத் தேர்ந்தெடுத்துச் செய்யவும்.

“கத்தரிக்காய் ரசவாங்கி காராமணியுடன்” இல் 10 கருத்துகள் உள்ளன

 1. காலங்கார்த்தால உங்களின் ரசவாங்கி படித்தது பசியைக் கிளறி விட்டுவிட்டது.
  வறுத்து வைத்த பொருட்களுடன் தக்காளியையும்வதக்கி சேர்த்து அரைப்பது எனக்குக் கொஞ்சம் புதிதாக இருந்தது. அடுத்தமுறை இதேபோலச் செய்து பார்க்கிறேன்.
  இரண்டு நாட்கள் முன்னால் தான் பூசணிக்காய் வேர்க்கடலை சேர்த்து இதேபோல மைனஸ் தக்காளி வறுத்து அரைத்து ரசவாங்கி செய்திருந்தேன்.
  ஆனால் ரசவாங்கி என்றால் கத்தரிக்காய் தான், இல்லையா?
  என் மாமியார் இருக்கும்போது கத்தரிக்காய் ரசவாங்கி செய்தால் சுட்ட அப்பளம் தான் தொட்டுக் கொள்ள. வேறொன்றும் தனியாக கறியமுது செய்ய மாட்டார்.
  ரொம்பவும் ருசியாகச் செய்வார் என் மாமியார். உங்களின் ரசவாங்கி படித்து மாமியார் காலத்துக்கே சென்றுவிட்டேன்.
  கத்திரிக்காய் வாங்க நீங்கள் கொடுத்திருக்கும் குறிப்பு சூப்பர்!

  1. நமதெல்லாம் சமையல் முறை ஏறக்குரைய ஒன்றுதானே. ப்ளஸ் தக்காளி புளியைக் குறைக்க உதவுகிறது. அரைத்து சேர்ப்பதால்.கலர்,ருசி அப்படியே கிடைக்கிறது.. நறுக்கிப் போடுவதை
   வதக்குவதுடன் சேர்த்து அரைப்பது என் முறை. அவ்வளவுதான்.
   ரஸவாங்கி, கத்தரிக்காய்க்கு மட்டும் தானே சொல்கிறோம். மத்ததெல்லாம்,பிட்லை,கூட்டு இப்படிப் போகிரது.
   பார்,சிலது மாமியார்காலம்,, பலது அம்மாவினுடயது. காமாக்ஷிமாவினுடயது என்று சொல்ல தக்காளியை வதக்கி அரை.
   வீட்டில் செய்யும் சமையலுக்கு, மேச்சிங், டைம் டேபிள். ஸத்தானது, என்ற அகராதிகள் இருந்ததை உன் பின்னூட்டம்
   எல்லோருக்கும் தெரியப்படுத்துகிரது. எனக்கு நல்ல ஸப்போர்ட்.
   நன்றி ரஞ்ஜனி. அன்புடன்
   போடுவதைவிட

 2. காமாஷிமா,

  ரஸவாங்கி____கேள்விப்பட்டிருக்கேன்,ஆனால் சாப்பிட்டதில்லை. பெயர்க் காரணம் மட்டும் கொஞ்சம் சொல்லிடுங்கமா.எழுதிய விதம் படிக்க சுவாரசியமாய் இருக்கிறது.

  அரைத்துவிட்ட சாம்பார் மாதிரி இருக்கு.குட்டிகுட்டி நாட்டு கத்தரிக்காய், கூடவே காராமணியும் இருக்கு,செய்திடலாம். அன்புடன் சித்ரா.

  1. கத்தரிக்காயின் ரஸத்தை உள் வாங்குவதால் ரஸவாங்கியோ? ஒன்லி கத்தரிக்காய்க்கு மாத்திரம்தான் ரஸவாங்கியென்ற பெயர்.
   கத்தரிக்காய்க்கு தெலுங்கில் வெங்காயா என்று பெயர். கத்தரிக்காய் சாதத்திற்கு வாங்கிபாத் என்று பெயர்., வெங்காயா வாங்கிபாத் ஆகியிருக்கலாம்.. அதே ரஸவாங்கி ஆயிடுத்தோ என்னவோ?
   நல்ல கேள்வி. . ரஸத்தை உள்வாங்குவதுதான் என்னுடைய பதில்.
   ஸாம்பார்மாதிரி இல்லாமல், கூட்டுமாதிரியுமில்லாமல் ஓடாமல் பரவும். பதிலும் ஸ்வாரஸ்யமா ிருந்தால் ஸரி. ஸந்தோஷம் சித்ரா. அன்புடன்

 3. அருமையான ரசவாங்கி என் பிறந்த வீட்டில் தான் இந்தச் சமையல் எல்லாம் ஆந்திரா வந்த பீறகு குழந்தைகளுக்காக சமையல் முறையே முற்றிலும் மாறி விட்டது செய்து பார்த்து எழுதுகிறென்

 4. எல்லார் வீட்டிலும் அதே கதைதான். இருந்தாலும் கூடகூட இதையும் செய்யரோம். பலதினுஸு சமையல்கள் குழந்தைகளை முன்னிட்டு நமக்கும் வழக்கமாகப் போய்விட்டது. உங்களின் கமென்டிற்கு மிகவும் ஸந்தோஷம். செய்யுங்கள். பிரகும் எழுதுங்கள். அன்புடன்

 5. ரசவாங்கி நல்லா இருக்கும்மா! நான் பருப்புகள் சேர்க்காமல் பூசணிக்காய் ரசவாங்கி என்ற ஒரு ரெசிப்பி ஒரு வலைப்பூவில் பார்த்துச் செய்திருக்கேன், அது எங்களுக்கு ரொம்பவும் பிடித்தது. உங்க ரெசிப்பி படிக்கும்போதே செய்து பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது. நீங்க சொல்லியிருக்கும் அளவிலும் பாதி செய்தாலே எங்களுக்குப் போதும்..சீக்கிரம் கமெண்ட்டை சொல்லுகிறேன். பகிர்வுக்கு நன்றி! 🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.