இயக்கநர் விக்ரமன், சினிமா, நினைத்தது யாரோ

30 வருடங்களுக்குப் பிறகு காஷ்மீரில் படமான விக்ரமனின் நினைத்தது யாரோ!

கொஞ்சம் சினிமா

பல வெற்றிப் படங்களை இயக்கிய விக்ரமன் தற்போது இயக்கிக் கொண்டிருக்கும் படம் ‘நினைத்தது யாரோ’. இந்த படத்தை அபிஷேக் பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பாக P. ரமேஷ், இமானுவேல் இருவரும் இணைந்து தயாரிக்கிறார்கள். இந்த படத்தில் ரஜித் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக நிமிஷா நடிக்கிறார்.

RAJITH - NIMISHA (10)
படம் பற்றி இயக்கநர் விக்ரமனிடம் கேட்டோம்,
“முழுக்க முழுக்க புதிய நடிகர்களை வைத்து வைத்து படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறேன். இந்தப் படத்திற்காக ரஜித் – நிமிஷா , “கொஞ்சம் புன்னகை, கொஞ்சம் காதல், அழகிய காதல் ” என்ற பாடலும், ‘மனசே லேசா, ரிங்கா ரிங்கா ரோசா” என்ற பாடல் காட்சியிலும் ரஜித் – நிமிஷா பங்கேற்க காஷ்மீரில் உள்ள பெகல்காம் என்ற இடத்தில் ராபர்ட் நடன அமைப்பில் படமாக்கப்பட்டது.

RAJITH - NIMISHA (2)
தமிழ்நாட்டிலிருந்து படப்பிடிப்புக்கு வந்திருக்கிறோம் என்றவுடன் காஷ்மீர் போலீஸ் தங்களது படையுடன் வந்து பாதுகாப்பு கொடுத்து எந்த தொந்தரவும் இல்லாமல் ஒத்துழைப்பு கொடுத்தனர். எனக்கு தெரிந்து ரஜினி நடித்த ‘வேலைக்காரன் ’ படத்திற்குப் பிறகு ‘நினைத்தது யாரோ’ படப்பிடிப்பை நாங்கள்தான் காஷ்மீரில் நடத்தி இருக்கிறோம்.
காஷ்மீரில் படப்பிடிப்பு என்றவுடன் வேண்டாமே பாதுகாப்பு, பிரச்சனை ஏற்படுமே என்று நிறைய நண்பர்கள் பயமுறுத்தினர். ஆனால், எந்த பிரச்சனையுமே ஏற்படவில்லை என்பதுதான் யதார்த்தம்.
‘நினைத்தது யாரோ’ பாடல்கள் மட்டுமல்ல, படமும் பிரமாதமாக வந்திருக்கிறது’’ என்கிறார் பெருமையுடன்.
IMG_4194DSC_5701

சமீபத்தில் நடந்த பாடல் வெளியீட்டு விழாவில் பிரபுதேவா கலந்துகொண்டார்.

படக்குழு விவரம்:

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – விக்ரமன்
ஒளிப்பதிவு – R.K. பிரதாப்
இசை – X. பால்ராஜ்
எடிட்டிங் – S. ரிச்சர்ட்
கலை – ஜனா
பாடல்கள் – கலைக்குமார், பா. விஜய், வைரபாரதி
நடனம் – சுசித்ரா, ராபர்ட், பாஸ்கர்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.