காமாட்சி, சமையல், செய்து பாருங்கள், சைவ சமையல், பீன்ஸ் பருப்பு உசிலி

விருந்து சமையல்- பீன்ஸ் பருப்பு உசிலி!

காமாட்சி
காமாட்சி

 ருசியுங்கள்

பருப்பு உசிலியை   கொத்தவரைக்காய், அவரைக்காய், பச்சை சுண்டைக்காய், குடமிளகாய்,வாழைப்பூ போன்ற எல்லாவற்றிலும் தயாரிக்கலாம். சைவ விசேஷ சமையல்களில், கட்டாயம் இதுவும் இடம் பெறுகிறது. இரண்டு கறிவகைகளில் ஒன்று இதற்காகவே ஒதுக்கப்படுகிறது. சாதாரணமாக வீட்டில் இந்த பருப்பு உசிலியைச் செய்தால், மோர்க்குழம்பு, வெந்தயக்குழம்பு,  ரசம் என சமையலை முடித்து விடுவோம். அதே விருந்து,கலியாண சமையல்கள் என்றால் எல்லாவற்றுடனும் இதுவும் ஒரு பாகமாக இருக்கிறது.

பருப்புசிலியை தனித் துவரம்பருப்பிலும், கடலைப்பருப்பு, பயத்தம் பருப்பு என ஏதாவதொன்றை சமபாகமாகச் சேர்த்தும்,   நம் விருப்பத்திற்கிணங்க தயாரிக்கலாம்.  ஒரு பருப்பு உசிலியை உங்களுக்கு, அறிமுகம் செய்ய, அதாவது நான் செய்யும் முறையைச் சொல்ல வந்திருக்கிறேன் என்பதுதான் சாரம். வாருங்கள் போகலாம். நான் துவரம்பருப்பு,பயத்தம் பருப்பு இரண்டையும் கலந்து செய்ததிது.

வேண்டியவைகள்:

1. துவரம்பருப்பு-அரைகப்

2. பயத்தம் பருப்பு-அரைகப்

3. மிளகாய்வற்றல்-4 அல்லது 5

4. எண்ணெய்-5 டேபிள் ஸ்பூன்

5. ருசிக்கு உப்பு

6. மஞ்சள்பொடி-சிறிது

7.  கடுகு,உளுத்தம் பருப்பு,சிறிது

8.  பெருங்காயம் – வாசனைக்கு

9. பிடித்தவர்கள் சிறிது சீரகமும் சேர்க்கலாம்.

10.  முக்கியமானது பீன்ஸ்- கால் கிலோ

செய்முறை:

1. பீன்ஸை நன்றாக சுத்தம் செய்து அலம்பி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

2. இரண்டு பருப்புகளையும் தண்ணீர் விட்டுக் களைந்து இரண்டு மணிநேரம் ஊற வைத்து   வடிக்கட்டிக் கொள்ளவும்.

3. மிளகாய்,பெருங்காயம் சேர்த்து  மிக்ஸியில் கொரகொர என்ற பதத்தில் தண்ணீர் விடாது பருப்பைக் கெட்டியாக அரைத்தெடுக்கவும்.

4.பீன்ஸை சிறிது தண்ணீர் சேர்த்து வேகவைத்து வடிக்கட்டிக் கொள்ளவும்.

5. அரைத்த பருப்புக் கலவையை, மைக்ரோவேவ் அவனில் அதனுள் வைக்கும் அகலமான தட்டில் எண்ணெயைத் தடவி,அடைபோலப் பரப்பி,  உயர்ந்த சூட்டில்,அதாவது ஹை பவரில் நான்கு நிமிஷங்கள் வைத்து எடுக்கவும்.

1 (1)

6.  கலவை ஆறியவுடன் சிறு துண்டங்களாக்கி, மிக்ஸியில் போட்டுவைப்பரில் நான்கு சுற்றுசுற்றினால், பருப்புக்கலவை உதிர்உதிராகப் புட்டுபோலக் கிடைக்கும்.

7.  அடி கனமான வாணலியைச் சூடாக்கி, எண்ணெயைக் காயவைத்து கடுகு,உளுத்தம்பருப்பைத் தாளித்து, பீன்ஸைச் சேர்த்து வதக்கவும். உப்பு, மஞ்சள்பொடி சேர்க்கவும்.

1 (4)

8.  புட்டுப் போன்ற பருப்புக் கலவையையும் சேர்த்து நன்றாக வதக்கவும்.

9.  எண்ணெய் சற்று தாராளமாக விட்டால்தான் பருப்புக்கலவையையும் சிவக்க வதக்க முடியும்.

1 (2)

10.  நிதானமான தீயில் பதமாகக் கிளறிவிட்டு இறக்கவும்.

பயத்தம் பருப்பு சேர்த்துச் செய்யும்போது நல்ல மெத்தென்ற உசிலியை சுவைக்க முடிகிறது. தனியாக கடலைப்பருப்பு,துவரம் பருப்பிலும் இதைச் செய்யலாம். பருப்பின் தன்மையையொட்டி சுவை சற்று வித்தியாஸப்படும்.

1 (3)

குறிப்பு:  பருப்பை ஊறவைத்து அரைத்து   ஸ்டீம் செய்து உதிர்த்து வதக்கியும் செய்யலாம். அரைத்த கலவையை நேரடியாகவே எண்ணெயில் வதக்கிச் செய்வதும் உண்டு. மைக்ரோ அவன் முறை செய்வது மிகவும் நன்றாக வருகிறது. ருசி மாற்றி செய்ய பூண்டு, இஞ்சி, வெங்காயம்,தனியா,சீரகம் முதலானவைகளை வதக்கும்போது சேர்த்துச் செய்பவர்களும் உண்டு. கொத்தமல்லி,கறிவேப்பிலை நம்முடைய எல்லா சமையல்களிலும் உண்டு. சமைத்து அசத்துங்கள்.பருப்புசிலியுடன், மோர்க்குழம்பும் ரசமும்.. அதையும் பாருங்களேன்!

 

Advertisements

“விருந்து சமையல்- பீன்ஸ் பருப்பு உசிலி!” இல் 15 கருத்துகள் உள்ளன

  1. பக்கத்திலிருந்தால் கொடுத்தனுப்பலாம்.. கூப்பிட்டு கொடுக்கலாம்.
   சொல்லுகிறேன் என்று பெயர் தோன்றி வைத்துக் கொண்டதால்,
   சொல்லிக்கொண்டே இருக்கிறேன்..நன்று உங்களுக்குதான்.அன்புடன்

  1. தளம் அழகாக இருக்கிரது. எனக்கும் தோன்றியது.படங்களும் அருமை என்று எழுதினதற்கு நன்றி. ருசியும் உங்கள் யாவருக்கும்
   தெரியாததொன்றுமில்லை. வந்து கொண்டே இருங்கள். பேசிக்கொண்டே சமைக்கிறேன். அன்புடன்

 1. கோடைக்கால சமையல் முடிந்து விருந்து சமையல் ஆரம்பித்துவிட்டீர்களா?
  எங்கள் குடும்பத்தின் ஜீன்ஸ்- லேயே கலந்துவிட்ட பருப்புசிலி!
  பயத்தம்பருப்பு போடலாம் என்று இதுவரை தெரியாது. இப்போதுதான் கேள்விப் படுகிறேன். அடுத்தமுறை (வரும் ஞாயிறு ஸ்பெஷல்!) பண்ணிப் பார்த்துவிடுகிறேன்.

  நான் கொஞ்சம் வேர்க்கடலையையும் வேக வைத்து சேர்ப்பேன். எங்கள் வீட்டு பருப்புசிலியில் இது மட்டும் ரொம்ப ஸ்பெஷல்!

  பருப்புசிலியுடன் கூட எங்கள் வீட்டில் எலுமிச்சைரசம் தான். அதுவும் பருப்புசிலி அரைத்த ஜலத்தில் பண்ணுவது.

  நீங்கள் போட்டிருக்கும் படம் நாவில் நீர் ஊற வைக்கிறது!

  1. கொஞ்சம் சமையலும், தலைப்பும் மாற வேண்டாமா?
   விருந்தும் கொஞ்சம் வேண்டுமே? பூணூல் சாப்பாடு நான் சாப்பிடவில்லையே!!!!
   கடலை பருப்பு சட்டென்று கிடைக்கவில்லை. பயத்தம் பருப்பு
   கிடைத்தது. போட்டேன் செய்தேன். ஸாப்டா,ருசியாக இருந்தது.
   எல்லோருக்கும் சொல்லணுமே!
   ஜீன்ஸ் பருப்புசிலிக்கு துளி மாறுதல்.
   ரஸம் எல்லாரும் அப்படிதான். ஜீரா ரஸம் இருக்கும்.
   படத்திற்கு கமென்ட் வரவேற்கப் படுகிறது. வீட்டு சமையல்.
   அவ்வளவுதான். அன்புடன்

 2. பருப்பு உசிலி பிரமாதம். நான்தான் இங்கு வர தாமதமாகிவிட்டது. அம்மா… 😦 வேலை அதிகம். வரவேண்டுமென நினைத்தும் எப்படியோ நாட்கள் நகர்ந்துவிடுகிறது.

  மைக்ரோவேவில் வைத்து செய்யும்விதம் பகிர்வதும் மிக உதவியாக இருக்கிறது. 2 அடுப்புகள் வேலைசெய்தாலும் இந்த மைக்ரோவேவ் இல்லாவிட்டால் அவசரத்திற்கு எனக்கும் சமையல் வேகமாக நிறைவுறாது. அப்படிப் பழகிவிட்டேன்… :).

  அருமையான செய்முறை சொல்லியுள்ளீர்கள்.
  செய்து பார்க்கவேண்டும்.
  தளமும் அழகாக இருக்கிறதே… வாழ்த்துக்கள் அம்மா.
  பகிர்விற்கும் மிக்க நன்றி அம்மா!

  எனது வலைப்பூவிற்கும் வாருங்கள் அம்மா…. :).

  1. இளமதி ஆசிகள். இன்று நான் நினைத்தேன். இப்படி உன் தளத்திற்கு வராமல் இளமதியைத் தேடாதே என்று மனதில் நினைத்துக் கொண் டேன். என்னவோவரவர உட்கார்ந்து எதையோ நினைத்து எங்கேயோ எங்கேயோ போய் எழுதின கமென்ட் போகாமல் இன்டர்நெட் கை கொடுக்க எல்லைம் ஸ்லோ பெண்ணே ஸ்லோ.
   தளத்தை நான்கு பெண்கள்.ஃப்ோரம் அழகாக்கி இருக்கிரது.

   அவர்களின் நன்றி. உனக்கு. நான் கூட மைக்ரோவேவ் உதவிதான்
   நாடுகிறேன்
   அருமையாக கமென்ட் கொடுக்கிராய்.. வாழ்த்துகள் உனக்கு அம்மா

   உன் கமென்ட் ஸந்தோஷத்தைக் கொடுக்கிரது. ஒடியாடி வேலை செய்யும் நேரமிது உனக்கு. நன்றி பெண்ணே. அன்புடன்
   .

   1. அம்மா அங்கு வந்து வாழ்த்தியது உளம் நிறைந்த சந்தோஷமா இருக்கு எனக்கு.

    // ஒடியாடி வேலை செய்யும் நேரமிது //
    சரியாக சொன்னீர்கள். நேரமே போதவில்லையம்மா எனக்கு.. அங்கு சொன்ன உங்க வாழ்த்திற்கு நன்றி சொல்ல இங்கே வந்தேன்மா… மிக்க மிக்க நன்றிமா…
    மீண்டும் வருவேன்…

 3. வாவா வந்து கொண்டே இரு. எல்லோர் தளத்திற்கும் போக முடிந்தால், நான் பின்னூட்டம் கொடுத்தால், இங்கும் அவர்கள் வருவார்கள். வேகமாக என்னால் போகமுடியவில்லையே என்று
  நினைக்காமல் இருப்பதில்லை.. ஸரி உன்னைப் பற்றியும் எழுது.
  ஒரு செல்ல மகன், கணவர், மனைவி என்ற அளவில் குடும்பம்.
  ஸரிதானே! அன்புடன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.