காமாட்சி, குழந்தைகளுக்கான உணவு, கோடை கால சீசன் சமையல், சமையல், சீசன் சமையல், செய்து பாருங்கள்

சுட்டெரிக்கும் வெயிலை குளுமையாக்கும் தயிர்வடை!

ருசி்யுங்கள்

காமாட்சி
காமாட்சி

காலை நேர உணவில்    வெயிற்காலத்தில் கூட ஒரு தயிர்வடையும் இருந்தால் எப்படி இருக்கும் என்று தோன்றியது.ஹோட்டலானால் எது வேண்டுமோ ஆர்டர் கொடுத்துச் சாப்பிட்டு விடலாம். வீட்டில்.?விரும்பி கேட்பவர்கள் வீட்டிற்கு வந்தால், பண்ணுவதில் ஆர்வத்தோடு செய்து உபசரிப்பதுதானே அழகு? அப்படி என்ன பிரமாதம்.? மிக்ஸி இருப்பது எவ்வளவு ஒத்தாசை?  அரை கப்,ஒரு கப் என்று எவ்வளவு குறைந்த அளவிலும் அரைத்துச் செய்ய முடிகிறது. அதுவும் விசேஷம் தானே? வீட்டில் செய்வது   பார்ப்பதற்குச் சின்னதாக இருந்தாலும் ருசியில் குறைவொன்றுமிருக்காது.

எனக்கு வெளிநாட்டில் பிள்ளையுடனிருக்கும் போது, அவர்களின் சினேகிதக் குடுங்பங்களின் மெம்பர்கள் யாவரும் விரும்பிக் கேட்டு, வந்திருந்து,சாப்பிட்டுப் போவது நினைவுக்கு வந்தது.

தவிரவும், நவராத்திரியில்  விசேஷமாக இதைச்  செய்வது வழக்கம். எல்லோரும் குடும்பத்துடன்  வரும்போது இதுவும் ஒரு  ஐட்டமாகச் செய்வேன்.

நீங்களும் தெரிந்தவர்களானாலும்  யாருக்காவது இந்த குறிப்பு  உபயோகமாகும். பார்க்கலாமா? அல்லது செய்யலாமா? வடை செய்வதற்கு வேண்டிய சாமான்களுடன் , தயிர் அவசியம் வேண்டும்.

வேண்டியவைகள்
வெள்ளை உளுத்தம்பருப்பு -ஒரு கப்
துவரம்பருப்பு – ஒரு டேபிள் ஸ்பூன்
பச்சைமிளகாய்-6
புளிப்பில்லாத தயிர்  -3 கப்
தேங்காய்த் துருவல்-அரை கப்
உப்பு-ருசிக்கு
வடை தட்ட வேண்டிய எண்ணெய்
இஞ்சித்துண்டு-சிறிது
அலங்கரிக்க-கேரட் துருவல்,கொத்தமல்லி இலை, தக்காளி
தாளிக்க – கடுகு, பெருங்காயம் சிறிது.
செய்முறை
பருப்புகளைக் தண்ணீரில் களைந்து ஊறவிடவும். மிக்ஸியில் அரைப்பதானால் ஒரு  மணி நேரம் ஊறினால்கூட போதும்.  தண்ணீரை ஒட்ட வடிக்கட்டவும். ஒரு மிளகாய், இஞ்சி சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைக்கவும். அதிகம் ஊராததால் சிறிது தண்ணீர் தெளித்து அரைக்கவும். சின்ன கண்டெய்னரில் போட்டு அரைத்தால் சுலபமாக அரைக்க முடியும்.
முதலிலேயே தேங்காய்த் துருவலுடன்   மிளகாய்களையும் அரை ஸ்பூன் , ஊறவைத்த அரிசியையும் சேர்த்து,  மிக்ஸியில் நன்றாக அரைத்து தனி யாக வைக்கவும்.

தயிரை தண்ணீர் விடாமல் நன்றாகச் சிலுப்பவும். அரைத்ததேங்காய் விழுதைக் கலக்கி திட்டமாக உப்பு சேர்த்துக் கலந்து ஃப்ரிஜ்ஜில் வைக்கவும்.

வடைக்கு அரைத்த மாவை அதிகம் ஊறவிடாமல் வடைகளாகத் தட்டி எண்ணெயில் வேகவைத்து எடுக்கவும்.
கையில் தண்ணீரைத் தொட்டுக்கொண்டு  மாவை  எடுத்து பாலிதீன் கவர்மேலோ, துண்டு வாழை இலையின் பின்புறமோ வடையாகப் பரப்பிப் பொத்தலிட்டு எண்ணெயில் நழுவ விட்டு இரண்டு புறமும் திருப்பி வேக வைத்து எடுக்கவும். வடைகளை எடுக்கும்போதே ஒரு சின்ன பாத்திரத்தில் தண்ணீர் வைத்து அதில் முக்கி நனைத்து வைத்த ஒரு நிமிஷத்தில் பிழிந்தாற்போல வேறொரு தட்டில் வைக்கவும். அடிக்கடி தண்ணீரை மாற்றவும். இப்படியே  வடைகளைத் தயாரிக்கவும்.
ஃப்ரிஜ்ஜில் வைத்த தயிரை வெளியில் எடுக்கவும்.

ஒரு அகலமான தாம்பாளம் தயாராக வைக்கவும். இப்போது ஒவ்வொரு வடையாக தயிரில் நன்றாக முக்கி எடுத்து தாம்பாளத்தில்  பரவலாக வைக்கவும். ஒன்றின் மேல், ஒன்றாக வேண்டாம்.  ஒத்தையாகவே பரத்தவும்.மேலாக தயிரையும் வடை மேலாக நனையும்படி விடவும்.
தக்காளியை ஃப்ரிஜ்ஜில் வைத்தெடுத்து மெல்லிய துண்டுகளாக நறுக்கவும். குட்டி தக்காளியானால் நல்லது. ஒவ்வொரு வடையின் மீதும் துளி காரட் துருவல், அதன்மீது தக்காளி வில்லை அதன்மீது கொத்தமல்லி இலை என  அழகாக அலங்கரிக்கவும்.
P1000152

மிகுதி தயிர் இருந்தால்  கிண்ணத்தில் விட்டு பொதுவாக வைத்து விடவும். யாருக்கு வேண்டுமோ போட்டுக்கொண்டு சாப்பிடட்டும். சின்னச் சின்ன வேலைதான். கதம்பம் மாதிரி வடைகள்.  வீட்டில் செய்வதால் வடைகள் பெரியதாக இருக்காதே தவிர நல்ல தயிரும், வடையும் குளுமையாக சாப்பிடச் சுவைதான்.

குறிப்புகள்

அதிகம் பருப்பு போட்டு  கிரைண்டரில் அரைத்தால்  இன்னும் டேஸ்டிதான்..

மிக்ஸியில் அரைத்தால்  சிறிது  தண்ணீர் சேர்க்கும் படிதானிருக்கும். அதற்காகவே அதிகம் ஊராவிட்டாலும் பரவாயில்லை. அரைத்த மாவை சிறிது நேரம் ஃபிரிஜ்ஜில் வைத்து எடுத்து வடை செய்தால், மாவு சற்றே இருகும்.

வடைகள் சரிவர வராத  ஆரம்ப நிலை கற்றுக்கொள்பவராக இருந்தால்  மாவை உருட்டிப் போட்டு எண்ணெயில் பொரித்தெடுத்து இதே முறையில் தயிரில் ஊறவைத்தும் உபயோகிக்கலாம். தட்டில் வடைகள் உள்ளது. மிகுதி தயிரையும் தேடி எடுத்துப் போட்டுக்கொண்டு உண்டு மகிழுங்கள்.

கடுகு,பெருங்காயம் தாளித்துக் கொட்டுவது உங்கள் இஷ்டம்.

தொடர்புடைய பதிவுகள்கோடை கால சீசன் சமையல்

வெயில்கால கடுமையைப் போக்கும் வாழைத்தண்டு மோர்க்கூட்டு

அவசரமாக மோர்க்குழம்பு வைப்பது எப்படி?

வெயிலை வீணாக்காமல் அரிசி வடாம் இடுவது எப்படி?

நாவில் நீர் ஊறும் மெந்தியமாங்காய் செய்வது எப்படி?

எழுத்தாளரின் வலைப்பூ http://chollukireen.wordpress.com/

“சுட்டெரிக்கும் வெயிலை குளுமையாக்கும் தயிர்வடை!” இல் 5 கருத்துகள் உள்ளன

  1. பார்க்கவே இவ்வளவு அழகாக இருக்கிறதே சாப்பிட எவ்வளவு ருசியாக இருக்குமோ செய்து பார்த்துவிட வேண்டியதுதான்

  2. நீங்கள் செய்து பார்த்தும் ருசிக்கிறீர்கள் என்பதில் மிக்க ஸந்தோஷம். டேபிளில் வைக்கும் போது எல்லாவற்றுடனும் இது மனதை சற்று ஈர்க்கும்.
    நன்றி உங்களுக்கு.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.