வீட்டில் வளர்க்கும் செடிகள்
மணமும் குணமும் மிக்க ஒரு கீரை புதினா! நகரங்களிலும் கிராமங்களிலும் புதினாவை எளிதாக வளர்க்கலாம்.
என்னென்ன தேவை?
தொட்டிகளில் வளர்க்க: மண் தொட்டி (அ) சிமெண்ட் தொட்டி, இயற்கை உரமும் மண்ணும் கலந்த கலவை, இலைகள் கிள்ளிய புதினா கீரையின் காம்பு (முற்றிய கீரைகளின் தண்டுகள்தான் முளைப்பு திறன் உள்ளவை.
நிலத்தில் வைக்கும் முன் நிலத்தை கொத்தி சீர் செய்ய வேண்டும். பிறகு இயற்கை உரத்தை தூவி விடுங்கள்.
நடவை முறை: சீர் செய்த மண்ணில் புதினா காம்புகளை 2 அங்குலத்திற்கு நட்டுவிட்டு முளைப்பதற்கு ஏதுவாக நீர் தெளித்து விடுங்கள்.
அறுவடை காலம் எப்போது? சரியான நிழலும் சூரிய ஒளியும் தண்ணீரும் கிடைக்கும் பட்சத்தில் மூன்று வார காலத்தில் புதினாவை அறுவடை செய்ய முடியும்.
பராமரிப்பு: பராமரிப்பு என்று பெரிதாக நீங்கள் மெனக்கெட தேவையில்லை. காலை, மாலையில் நீர் ஊற்றி வந்தால் போதுமானது.
எவ்வளவு அறுவடை செய்யலாம்? 4 தொட்டிகளில் வைத்தால் 2 வாரத்துக்கு ஒரு முறை, 2 கட்டு கீரைகளை அறுவடை செய்யலாம். நிலத்தில் நட்டால் அறுவடை இன்னும் கூடுதல் ஆகும்.
புதினாவில் ஒரு ரெசிபி…
does it produce any seeds? If I plant it in a pot, then harvest after 2 weeks, how can I plant it again?
நல்ல கேள்வி கேட்டீர்கள் செந்தில்…
புதினா செடியை விதைகள் மூலம் விளைவிக்க முடியாது. நன்கு வளர்ந்த புதினா தண்டின் இலைகளை அகற்றிவிட்டு ஈரமான மண்ணில் நட்டு வைத்தால் மூன்று நாட்களில் புதினா வேர்விட்டு துளிர்க்க ஆரம்பிக்கும்.
அறுவடை செய்யும் புதினா இலைகள் செறிந்த இளம் தண்டினை கிள்ளி எடுத்தால் தாய் புதினா செடி மறுபடியும் துளிர்த்து செழிப்பான இலைகளைத் தரும்.
வீட்டில் வளர்க்கும் புதினா மண(ன)மே தனி…
அருமையான பயனுள்ள பகிர்வு என் வீட்டில் புதினா இல்லாமல் தேனீர் இல்லை துவையல் ச்ட்னி என தினமும் நான் உபயோகிப்பது புதினா நானும் தொட்டியில் வளர்க்கிறேன் அதன் மணமும் சுவையும் தனிதான்