தனியார் கம்பெனிகளில் வேலை செய்பவர்களுக்கான பென்ஷன் ஸ்கீம்
கீதா ராம்குமார்

தனியார் நிறுவனங்களில் பணியுரிபவர்களுக்கென்றே தேசிய ஓய்வூதிய திட்டம் உள்ளது.
ஓய்வூதிய திட்டங்கள் பற்றி நீங்கள் தெரிந்துகொள்வது அவசியம்.
முதாவது, இந்தத் திட்டங்களில் நாம் சேமித்த பணத்தில் மூன்றில் ஒரு பகுதிதான் உங்களுக்குக் கிடைக்கும்.
நீங்கள் ஓய்வு பெற்றதிலிருந்து இறக்கும்வரை ஓய்வூதியமாக ஒரு குறிப்பிட்ட தொகை மாதாமாதம் கிடைக்கும். உங்களுக்குப் பின் மனைவி அல்லது கணவருக்கு அந்தத் தொகை கிடைக்கும். அதற்குப் பிறகு, எதுவும் கிடையாது.
ஓய்வூதிய திட்ட முதலீடு மிகக்குறைவான வருமானத்தையே தரும்.
உதாரணத்துக்கு ஒருவர் ஓய்வுபெறும் வரை ரூ.25 லட்சத்தை ஓய்வூதிய திட்டங்களில் முதலீடு செய்திருந்தால், ஓய்வுபெறும் போது அவருக்கு ரூ. 8 லட்சம் மட்டுமே கைக்குக் கிடைக்கும். மீதி ரூ.16 லட்சத்தில் ரூ. 10 அளவுக்குத்தான் மாதாந்திர ஓய்வூதியமாக பெறுவீர்கள். நடுவில் எதிர்பாராத மருத்துவ செலவு ஏற்பட்டால்கூட ரூ. 16 லட்சத்தை எடுத்து பயன்படுத்த முடியாது.
ஓய்வூதிய திட்டங்களைவிட மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு லாபகரமானது. எப்போது வேண்டுமானால் எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
யோசியுங்கள்…
சுருக்கமான விளக்கத்திற்கு நன்றி…