Uncategorized

மு.க. அழகிரி மருமகள் பெயரில் மோசடி!

கொஞ்சம் சினிமா – இதையும் தெரிஞ்சுக்குங்க

Anjali
நடிகை அஞ்சலி இப்போது ஊடகங்களில் ஹாட் டாபிக் ஆகியிருக்கிறார். எல்லாவற்றுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக ‘இனி முழுகவனத்தையும் சினிமா பக்கம் திருப்பப் போகிறேன்’ என்று விடியோ எடுத்து ஊடகங்களுக்கு அனுப்பி வைத்திருக்கிறார். சினிமாவின் மறுபக்கத்தைக் காட்டும் இன்னொரு உதாரணம் இது.
Anusha

சில மாதங்களுக்கு முன்பு மு.க. ஸ்டாலின் மருமகள் கிருத்திகா உதயநிதி, தன் பெயரில் யாரோ மோசடி செய்வதாக புகார் கொடுத்திருந்தார். தற்போது மு.க.அழகிரி மருமகள் அனுஷா தயாநிதியும் அதே போன்ற புகார் ஒன்றை எழுப்பியிருக்கிறார். யாரோ சிலர் தன்னைப் போலவே பேசி, தன் பெயரை பயன்படுத்தி பணம் பறிக்க முயற்சிப்பதாகவும் அதை யாரும் நம்பவேண்டாம் என்றும் சமீபத்தில் அறிக்கை வெளியிட்டிருக்கிறார் அனுஷா.

555
‘பூ’ படத்திற்குப் பிறகு, இயக்குநர் சசி இயக்கும் படம் ‘555‘. சமீபத்தில் ஹிட் படம் எதுவும் தராத பரத், இந்தப் படம் இழந்து மார்க்கெட்டை பெற்றுத்தரும் என்று எதிர்பார்த்திருக்கிறார். புதுமுகம் சாந்தினி கதாநாயகியாக நடிக்கிறார். கடந்த வாரம் ஆடியோ வெளியீடு நடந்தது. இதில் வரும் ‘எலவு’ பாடல் பிரபலமாகிவருகிறது.
Devayani
தேவயானி தன் கணவர், ராஜகுமாரனை ஹிரோவாக்கி நீண்ட காலமாக தயாரிப்பில் இருந்த ‘திருமதி தமிழ்’ இன்று ரிலீசாகிறது. பெரும்பாலான நேரங்களில் புத்திசாலிகளாக இருக்கும் பெண்கள், சில சமயம் அதிபுத்திசாலிகளாகிவிடுகிறார்கள். தேவயானியும் அப்படிப்பட்டவர்களில் ஒருவர்.
Udayam NH4
‘உதயம் என்எச்4’ படத்திற்காக கானா பாலா பாடிய ‘ஓரக்கண்ணாலே’ பாடலை குழந்தைகளும்கூட முணுமுணுக்க ஆரம்பித்துவிட்டார்கள். படம் ரசிக்கும்படியாக இருக்கும் என்கிறார்கள். இந்த வாரம் ரிலீசாகிறது. நாயகன் சித்தார்த்துக்கும் புதுமுக நாயகி அர்ஷிதாவுக்கும் திருப்பம் கிடைக்குமா?

Advertisements

“மு.க. அழகிரி மருமகள் பெயரில் மோசடி!” இல் 2 கருத்துகள் உள்ளன

  1. அட! நான்குபெண்கள் சினிமா சேதியும் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்களா?
    நல்வரவு! சுவாரஸ்யமான செய்திகளை கொடுத்து அசத்த வாழ்த்துகள்!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.