கோடை கால சீசன் சமையல், சமையல், சீசன் சமையல், செய்து பாருங்கள், சைவ சமையல், பாரம்பரிய ரெசிபி, மாங்காய், மாங்காய் ஊறுகாய், ருசியுங்கள்

மாங்காய் பச்சடி செய்வது எப்படி?

காமாட்சி
காமாட்சி

மாங்காய் சீசனில் மாங்காய் பச்சடி செய்வதற்கு குறிப்பு வேண்டாமா? தமிழ் வருஷப் பிறப்பன்று கட்டாயம், மாங்காய் பச்சடியும் அதிலேயாவது இரண்டு வேப்பம் பூவை சேர்த்து வேப்பம்பூ பச்சடியும் செய்வார்கள். மாங்காய், மட்டரக மாம்பழங்கள் எது இருந்தாலும் பச்சடி செய்து விடலாம். புளிப்பு மாம்பழமானாலும் வேக வைத்து, வெல்லம் சேர்த்து, காரமும் சேர்ந்தால் பச்சடி ஏக ருசியாகத் தானிருக்கும் பிடித்தவர்களுக்கு. வயதானவர்களுக்கு கேட்கவே வேண்டாம். பாருங்கள், யாருக்கு இஷ்டமோ, அவர்களும் குறிப்பு விரும்பவர்களும் அட்லீஸ்ட், பிறருக்கு சொல்வதற்காவது உபயோகப்படும். காய் வாங்குவோம். ஒழியாது ஊறுகாய்போட. பிறகு நறுக்க உட்கார்ந்தால்
நான் பழுக்கப் போகிறேனே அம்மா என்று மஞ்சமசுக்க இளிக்கும். விசாரமே இல்லை. நீதான் இன்றைய இனிப்பு என்று சொல்லி  பச்சடியாக்கி விடுங்கள். எல்லோரும் இளம் வயதினரும் விரும்பிச் சாப்பிடுவார்கள். என்ன வேண்டும்? என்ன இருக்கிறது? காயா, பழமா? எது இருந்தாலும் சரி..

வேண்டியவைகள்:
1. மாங்காய்-2 முற்றியது
2. பச்சை மிளகாய்- 2
3. எண்ணெய்- ஒரு டீஸ்பூன்
4.  வெல்லம்-ஒரு பாதி மாங்காய் அளவு
5. கடுகு -சிறிது,  உப்பு-ஒரு துளி,  வேண்டுமானால் மஞ்சள் பொடி
6. முந்திரி, திராட்சை

செய்முறை:
மாங்காயை சுத்தம் செய்து, தோலைச் சீவி, துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும். கொட்டையின் மேலுள்ள சதைப் பற்றையும் சீவி எடுத்துக் கொள்ளவும். ஒட்டு மாங்காயாக இருந்தால் புளிப்பு குறைவாக, நன்றாகவும் இருக்கும்.. பாத்திரத்தில் சிறிது தண்ணீருடன் மாங்காயை வேக வைக்கவும். கூடவே உப்பு பச்சை மிளகாயையும் சேர்த்தே வேக வைக்கலாம். மாங்காய் நன்றாக வெந்தவுடன் சுத்தமான வெல்லத்தைச் சேர்த்து கொதிக்க வைக்கவும். அல்லது வெல்லத்தை ,துளி ஜலம் சேர்த்து கொதிக்கவிட்டு வடிக்கட்டி  வெந்த மாங்காயுடன் சேர்த்துக் கொதிக்க வைக்கவும்.

கலவை குறுக ஆரம்பித்தவுடன் நீர்க்க இருந்தால் துளி அரிசி மாவைக் கரைத்து விடலாம்.   தாளித்துக் கொட்டி    இரக்கவும்.  காரம் அதிகம் வேண்டுமென்றால் சிறிது மிளகாய்ப் பொடி போடலாம். வாஸனை பிடித்தவர்கள் ஏதாவது மஸாலா பொடியையும் சேர்க்கலாம். முந்திரி திராட்சை, எது வேண்டுமானாலும் சேர்க்கலாம். பழங்களானாலும் இதேமாதிரி  வேக வைத்துச் செய்ய வேண்டியதுதான்.
manga pacchadi
நான் மைக்ரோவேவில் பத்து நிமிஷங்கள் வேக வைத்துச் செய்து விடுகிறேன். பச்சை மிளகாயையும் தேங்காய் சிறிதும் அரைத்துச் சேர்ப்பவர்களும் உண்டு காய் புளிப்புக்குத் தக்கபடி வெல்லம் அதிகரிக்கலாம். இதிலேயே துளி, வருஷப்பிறப்பன்று வேப்பம் பூவை  வறுத்துச் சேர்க்கும் பழக்கமும் இருந்தது.
மாங்காய்ப் பச்சடியா?  உங்களது மாம்பழப் பச்சடியா? யோசித்துக் கூறுங்கள்.

“மாங்காய் பச்சடி செய்வது எப்படி?” இல் 4 கருத்துகள் உள்ளன

  1. எனக்கு மிகவும் பிடித்த மாங்காய்/மாம்பழப் பச்சடி!
    துளி புளிப்புடன் இருந்தால் வெல்லமும் புளிப்பும் சேர்ந்து தனி ருசிதான்! வெல்லம் கொஞ்சம் அதிகமாகவே சேர்ப்பேன்.
    முந்திரி போடுவதில்லை. ஆனால் நீங்கள் போட்டு செய்திருப்பது நன்றாக இருக்கிறது. அடுத்த முறை போட்டுவிட வேண்டியதுதான்.

    //நான் பழுக்கப் போகிறேனே அம்மா என்று மஞ்சமசுக்க இளிக்கும். விசாரமே இல்லை. நீதான் இன்றைய இனிப்பு என்று சொல்லி பச்சடியாக்கி விடுங்கள்//
    அருமையான வார்த்தை பிரயோகங்கள்! ஒரு நல்ல கதை படிப்பது போல இருக்கிறது உங்கள் சமையல் குறிப்பு!
    பாராட்டுக்கள்!

    1. உண்டானபோது கோடானு கோடி. வீட்லே இருந்தது,முந்திரிப்பருப்பு போட்டேன். மாங்கா பச்சடிக்காக முந்திரி வாங்க கடைக்கு அனுப்புவதில்லை.. ஆனால் கலியாண சமையல்களில், இனிப்பு ப் பச்சடியில் முந்திரி ஆஜராவது தவருவதில்லை. அதன் தாகக்கம்தானிது. ரிச் முந்திரி. லுக்.
      மாங்காய் பச்சடி பிடிக்காதவா உண்டா? உங்கள் பின்னூட்டம் முந்திரிப்பருப்பு போட்ட மாதிரி இருக்கு. நன்றிகள். அன்புடன்

  2. காய் வாங்குவோம். ஒழியாது ஊறுகாய்போட. பிறகு நறுக்க உட்கார்ந்தால்
    நான் பழுக்கப் போகிறேனே அம்மா என்று மஞ்சமசுக்க இளிக்கும். விசாரமே இல்லை. நீதான் இன்றைய இனிப்பு என்று சொல்லி பச்சடியாக்கி விடுங்கள்.//
    சித்திரை வருஷபிறப்புக்கு கோவில்கள் போய் வந்ததால் நேரம் இல்லை மாங்காய் பச்சடி செய்ய . நான் இன்று மாங்காய் வாங்கி இருக்கிறேன். செய்து விடுகிறேன்.
    நன்றி சகோதரி.

    1. வயதான கேட்டகிரி இல்லையாநான். தக்காளி,பீட்ரூட்,பாகக்காய், வாழைத்தண்டு எல்லாவற்றிலும் செய்வதுண்டு.. ஸமீபத்தில் அனாஸிப் பழத்தில், வெல்லம் போட்டு,தேங்காய்,பச்சைமிளகாய்
      சேர்த்து செய்திருந்ததைப் பார்த்தேன். . ருசியும் ப்ரமாதமாக இருந்தது. ஒரு முறை வாங்கிச் செய்ய வேண்டும் என்று நினைத்தேன்.. இது எப்படி இருக்கு? உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி ஸகோதரி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.