எனக்கு இப்போது 50 வயது ஆகிறது. இன்னும் 10 ஆண்டுகளில் ரிடையர்டு ஆக விரும்புகிறேன். சென்னையில் எனக்கு சொந்தமாக ஒரு ஃபிளாட் இருக்கிறது. இன்னொரு ஃபிளாட் வாங்கி விடலாமா? அல்லது வங்கி ஃபிக்ஸுடு டெபாசிட்களில் சேமிக்கலாமா?
திரு. எஸ்எஸ்கே.

இன்னொரு வீடு, அல்லது ஃபிளாட் வாங்குவதை எதிர்காலத்துக்கான சேமிப்பு என்று எல்லோரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். இன்றைய இளைய தலைமுறையிடம் இந்தப் பழக்கம் அதிகமாக இருக்கிறது. ரூ 50 ஆயிரம் சம்பளம் வாங்கும்போது இ.எம்.ஐ. போட்டு ஒரு ஃபிளாட் வாங்குகிறார்கள்.. அடுத்து சம்பளம் 1 லட்ச ரூபாயாகும்போது இ.எம்.ஐ. போட்டு இன்னொரு ஃபிளாட் வாங்குகிறார்கள். பொதுவாக இந்தக் காலக்கட்டத்தில் கணவன், மனைவி வேலைக்குப் போகிறார்கள். குழந்தைகளும் பள்ளிப் போய்விட்டு இரவில்தான் வீட்டில் இருக்கிறார்கள். வீட்டை தூங்குவதற்கு மட்மே பயன்படுத்துகிற சூழ்நிலை உருவாகிவிட்டது. இதில் இரண்டு வீடு வாங்கி அதை பராமரித்து, பயன்படுத்துது முடியாத செயல். அப்படியே ஒரு வீட்டை வாடகைக்கு விட்டாலும் அதனால் பெரிய லாபம் எதுவும் வந்துவிடப்போவதில்லை.
உங்கள் கேள்விக்கு வருகிறேன் எஸ்எஸ்கே, ரியல் எஸ்டேட் விலை வானுயரத்துக்கு உயர்ந்து நிற்கிற இந்த நேரத்தில் எதிர்கால சேமிப்புக்கு என்று இன்னொரு ஃபிளாட் வாங்குவது சரியான முடிவல்ல.
15 நாட்களுக்கு முன் தினசரிகளில் வந்த செய்தி இது. ரியல் எஸ்டேட் துறையில் பிரபலமான விஜிஎன் நிறுவனம், சென்னை கிண்டியில் 11 ஏக்கர் நிலத்தை ரூ 270 கோடிக்கு வாங்கியது. 2008ல் இந்த நிலம் விற்பனைக்கு வந்த போது அதன் மதிப்பை ரூ 360 கோடியாக நிர்ணயித்திருந்தார்கள். ரியல் எஸ்டேட் துறை பின்னடைவை சந்திக்கும் என்பதற்கு இது ஆரம்ப கட்ட உதாரணம்.
உண்மையில் இன்னும் 10 வருடங்களில் எல்லோரும் வாங்கின லீட்டை விற்கிற சூழல் வரும். எல்லோரும் விற்க முயற்சிக்கும்போது வாங்க யாரும் முன்வரமாட்டார்கள். அப்படியே விற்றாலும் வாங்கின விலையைவிட குறைவாகத்தான் விற்க முடியும். அந்த சமயத்தில் நிங்கள் இன்னொரு வீடு வாங்கினால் லாபம் பார்க்கலாம். அதுவரை ரியல் எஸ்டேட் துறை முதலீடுகளை தள்ளிவையுங்கள். அதற்கு பதிலாக வேறு வகையான முதலீட்டுத் திட்டங்களை தேர்ந்தெடுக்கலாம்.
கீதா ராம்குமார் கேட்டிருந்த தனியார் கம்பெனிகளில் வேலை செய்பவர்களுக்கான பென்ஷன் ஸ்கீம் பற்றிய விரிவான விளக்கம் அடுத்த பதிவில்.
இன்ஷூரன்ஸ், மியூச்சவல் ஃபண்ட் உள்ளிட்ட நிதி தொடர்பான சந்தேகங்களை நீங்களும் கேட்லாம். சர்டிஃபைடு ஃபினான்ஷியல் பிளானர் பி. பத்மநாபன் பதில் சொல்வார்.
தொடர்புடைய பதிவுகள்
தங்கம், ரியல் எஸ்டேட்டைவிட அதிக வருமானம் தரும் மியூச்சுவல் ஃபண்ட்!
மியூச்சுவல் ஃபண்டில் ஏன்
முதலீடு செய்ய வேண்டும்?
நிதி ஆலோசகர் பி. பத்மநாபனைத் தொடர்பு கொள்ள
தொலைபேசி எண் 98843 49173
மிக தெளிவாக விளக்கி சொல்லியமைக்கு மிக்க நன்றி ..
வீடு வாங்கும் எண்ணம் இதை படித்ததும் இல்லை
ஆனால் பிற்கால பாதுகாப்புக்கு வேறு வகையான முதலீட்டுத் திட்டங்கள் சில இருந்தால் தெரிவியுங்கள்
உங்களுடைய கேள்விகளை இங்கே பகிர்ந்துகொண்டதற்கு நன்றி எஸ்எஸ்கே. மாற்று முதலீட்டுத் திட்டங்கள் பற்றி இந்தப் பகுதியில் சொல்லவிருக்கிறோம். தொடர்ந்து வாசியுங்கள்.
I dont agree to this. India’s population is growing at the rate of 1.41% / year. That means, about 16 million couples will become eligible for marriageable age. Even if we assume 50% of them are going to purchase the house/flat, then we need 8 miilion units, We can not increase the land area in India, unless we occupy pakistan or srilanka. So, land area is constant and the requirement of housing unit will increase. Then, naturally by simple demand/supply calculation, the price has to increase.
முதலீடு செய்ய நல்ல யோசனை சொல்லியுள்ளீர்கள்
தவறான ஆலோசனை.