அவல் பாயஸம், சமையல், செய்து பாருங்கள், சைவ சமையல்

புத்தாண்டை கொண்டாட அவல் பாயஸம்!

காமாட்சி
காமாட்சி

விஜய வருஷ பிறப்பில் உங்களை பாயஸத்துடன் சந்திக்க விரும்புகிறேன். அவசரஅவசரமாக சுலபமாக செய்ய அவல் பாயஸம். இதற்க அதிக சாமான்களெல்லாம் தேவையில்லை.  பார்ப்போமா?

வேண்டியவைகள்:
மெல்லிய அவல் – ஒரு பிடி
பால் -2 கப்
சர்க்கரை-அரை கப்
ஏலக்காய்ப் பொடி- சிறிது
நெய் – 1 டீஸ்பூன்
ஐந்து அல்லது ஆறு  முந்திரி, பாதாம்.

செய்முறை :
மைக்ரோ அவனில், அவலை துளி நெய்விட்டுப் பிசறி அதன் பாத்திரத்தில் ஒரு நிமிஷம் வைத்து எடுக்கவும். அல்லது வாணலியில் வறுக்கவும். முந்திரி பாதாமையும்,  வறுத்துப் பொடிக்கவும். பாலைக் காய்ச்சி பாதியை எடுத்து வைக்கவும். மீதி பாலில் வறுத்த அவலை நிதான தீயில் வேக வைக்கவும்.. வெந்த கலவையில்,சர்க்கரை, பொடித்த பருப்புகளைச் சேர்த்துக் கிளறவும். சர்க்கரை கரைந்து ஒன்று சேர்ந்து வரும் போது மிகுதி பாலைச்சேர்த்து கொதித்தவுடன் ஏலப்பொடி சேர்த்து இறக்கவும். ருசியான பாயஸம் தயார்.

P1010741

பருப்புகள் பொடித்துச் சேர்த்தால் சுவை நன்றாக இருக்கும்.

விஜய வருஷத்தை இனிப்பான பாயஸத்துடன் உங்களையும் வரவேற்கிறேன்.  யாவருக்கும், இனிய வாழ்த்துக்கள்!

எழுத்தாளரின் வலைப்பூ http://chollukireen.wordpress.com/

“புத்தாண்டை கொண்டாட அவல் பாயஸம்!” இல் 12 கருத்துகள் உள்ளன

  1. அக்கா என்று அழைத்ததற்கு மிகவும் ஸந்தோஷம் ஸகோதரி.
   எல்லோருக்கும் தெரிந்த ஸுலபமானது. உங்களதும் படித்தேன். இரண்டு பேருக்கும் ஒரே விஷயம் எழுதத்தோன்றியதை நினைத்தேன்.
   நீங்களும் நினைத்திருப்பீர்கள். வாழ்த்துக்களுக்கு நன்றி.
   அன்புடன்

 1. கிருஷ்ணனுக்கு {என் பிள்ளையும் கிருஷ்ணாதான்} பிரியம் என்று நானும் அடிக்கடி செய்வேன் ஆனால் நான் வெல்லம் சேர்த்து செய்வேன் உங்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

  1. வெல்லம் சேர்த்துச் செய்யும்போது, தேங்காய் அரைத்து விட்டாலும், நன்றாக யிருக்கும் இல்லையா? அவஸர பாயஸம் சர்க்கரை போட்டிருக்கேன். கிருஷ்ணருக்கு அவல் விருப்பமான பொருள். உங்கள் பிள்ளைக்கும் விருப்பம். நல்ல பெயர் பொருத்தம். மகிழ்ச்சி. வாழ்த்துக்களுக்கும் நன்றி அன்புடன்

 2. ம். அருமை… இந்த அவல் பாயசம் இப்படித்தான் நான் வைப்பதுண்டு அம்மா. அதெப்படி அப்படியே உங்க கைப்பக்குவமும் நான் செய்யுறதும் அநேகமாக ஒரே மாதிரி இருக்கிறது… 🙂
  எங்க வீட்டில் ரொம்பப் பிடிக்கும். இடையிடையே நல்ல வெல்லமும் சேர்ப்பேன்…
  நல்ல குறிப்பு அம்மா. நன்றி!

  அம்மா உங்க முறையில் பால்பாயசம் எப்படிச் செய்வீங்கன்னு அப்புறம் ஒருமுறை தாங்க.. அறிய ஆவல்.

  உங்களுக்கும் எல்லோருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  1. சமையல் எல்லாம் யாருக்கும் பிரக்கும் போதே தெரிவதில்லை.
   யாரோ செய்து எவர் எவரோ கற்று நாமும் அப்படியே செய்கிறோம். இதிலிருந்து தெரிவது என்னவென்றால் , நீயும்,நானுமட்டுமல்ல. இப்படி பலபேர் செய்வதுதான் இந்தச்
   சமையல் கலையே!!!!எனக்கு உன் பதில் ரொம்பப் பிடித்தது.

   மனம் திறந்து எழுதியிருக்கிராய். ஸந்தோஷமும் வெளிப்படுகிறது. பால்ப் பாயஸம் தானே. செய்து கொடுத்தாற் போகிறது. நன்றியும் அன்பும்

 3. அவல் பாயசம் சாப்பிட ரொம்ப லேட்டாக வந்திருக்கிறேன். எல்லாம் தீர்ந்து போயிருக்கும்.
  நானே பண்ணி சாப்பிடுகிறேன். என் பெண் வீட்டில் அவலை வைத்துக் கொண்டு நிறைய உணவுகள் செய்கிறார்கள். நாமெல்லாம் கிருஷ்ண ஜெயந்தியன்று அவல் வெல்லம் சேர்த்து பிசைந்து வைப்போம். அவ்வளவுதான், இல்லையா?

  என் பெண்ணும் வெல்லம் போட்டுத்தான் செய்கிறாள். அவசரமான பாயசம் என்று சொல்லிவிட்டீர்கள்.
  ஆயாசமில்லாத பாயசம். அருமை!

  1. நீங்கள் என்ன லேட். நானும் லேட்தான் இப்போது எல்லா விஷயங்களிலும். நாட்டுப்பெண் ஊரிலில்லை. வேலை வளர்கிரது. ப்ளாக் புதுவருஷ ஆரம்பம். ஏதோ ஒன்று தித்திப்பாக இருக்கட்டுமே என்று. . ஒரு காலத்தில் வீட்லே அவல் இடிப்பார்கள். நேபாலில் அவல் சாதத்திற்கு அடுத்தபடியாக
   உபயோகிப்பார்கள். அவ்வளவு பிரஸித்தம். நாமும்,வெல்ல அவல்,புளி அவல், அவலுப்புமா,பாயஸம்,கேஸரின்னு எதை விட்டு வைக்கிறோம்? கல்யாண சீர் வரிசையில்கூட அவலும், வெல்லமும், உண்டே? கல்யாணம் மட்டுமா? கார்த்திகைக்கும் கூட தான். லேட்டானா பரவாயில்லே. அட்டன்டென்ஸ் முக்கியம். மிக்க நன்றி.. அன்புடன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.