ஆவக்காய் ஊறுகாய், கோடை கால சீசன் சமையல், சமையல், சீசன் சமையல், செய்து பாருங்கள், சைவ சமையல், பாரம்பரிய ரெசிபி, மாங்காய், மாங்காய் ஊறுகாய், ருசியுங்கள்

ஓ…இதுதான் ஆவக்காய் ஊறுகாயா?!

ருசி -12

காமாட்சி
காமாட்சி

ஆந்திர மாநிலத்தின்  புகழ் பெற்ற ஊறுகாய். ஊறும் + காய் = ஊறுகாய். எண்ணெயில் ஊறும் காயிது. உடன் நெய்யும் சேர்த்துச் சாப்பிடுபவர்களும் உண்டு. இந்த ஊறுகாய் வருஷக்கணக்கில்கூட கெட்டுப்போகாது. அவர்கள் வேப்புடு, கந்தி ஸுன்னி,  ஆவகாயி என்று வரிசையாகச் சொல்லுவார்கள். வருவல், பருப்புப்பொடி, மாங்கா ஊறுகாய் எல்லாமிருந்தால் அவசரத்துக்கு ஒரு சாதம் வைத்தால் போதும், பச்சடி ஒன்று இருந்தால் நன்றாக இருக்கும் என்று நான் சொன்னால், பச்சடி என்றால் தெலுங்கில் துவையலாம். பெருகு சொல்ல வேண்டும் போலுள்ளது. நான் ஒரு தெலுங்குக் குடும்ப சினேகிதியிடம்தான்  இந்த ஊறுகாய் செய்முறையைப் பார்த்தேன். அவ்வளவாக  காட்மாண்டுவில்  மாங்காய் நன்றாகக் கிடைக்காது. தராய் ஏரியாவிலிருந்து மாங்காய்கள் எப்போதாகிலும் வரும். நல்ல கொட்டை முற்றிய மாங்காய்கள் அவசியம். பறித்த மாங்காய்களாக இருக்க வேண்டும். நறுக்குவதும் நம் அரிவாள் மனையில் முடிவதில்லை. சற்று பலத்த உளி போன்ற  கத்திகளால் காயை வெட்ட வேண்டும். இங்கு, மும்பையிலும் டெல்லியிலும் மாங்காய் விற்பவர்களே அதற்காகவும் பணம் பெற்றுக் கொண்டு, மாங்காயை வெட்டிக் கொடுத்து விடுகிறார்கள். சென்னையிலும் அப்படியே என்று நினைக்கிறேன். பூர்வ பீடிகை இவ்வளவு. சாமான்கள் ரெடியாகி விட்டால், ஊறுகாய் போடுவது மிகவும் சுலபம்.
வாங்கோ எல்லாரும் சேர்ந்து போடலாம் ஊறுகாயை!!!!!!!!!!!!!!!!!! சேர்ந்து பாடுவதில்லையா? அம்மாதிரி எண்ணிக் கொள்ளுங்கள்.

P1020681
வேண்டியவை
நல்ல முற்றிய மாங்காய் – 12
கடுகு – 200 கிராம்
மிளகாய்ப் பொடி – 250 கிராம்.
வெந்தயம் – 50 கிராம்
மஞசள்ப் பொடி – 3 டேபிள் ஸ்பூன்
உப்பு – 200 கிராம்
நல்லெண்ணெய் – முக்கால் கிலோ.
மேலும் விருப்பமான சில சாமான்களில் எது விருப்பமோ அதைச்
சேர்க்கலாம்.
அவைகள்: பூண்டு, கொண்டைக் கடலை, முருங்கைக்காய், பெருங்காயம்.

செய்முறை:
மாங்காயை அலம்பித் துடைத்து முதலில் இரண்டாக வெட்டவும். உள்ளிருக்கும் கொட்டையையும் சேர்த்து. இரண்டை நாலாக்கவும். இப்போது ஒவ்வொரு துண்டையும் மூன்றாக வெட்டவும். ஆக நல்ல ஒரு பெரிய மாங்காயை 12 துண்டுகள் போடலாம். மாங்காய் சைஸ் சிறியதானால் 8 துண்டமாக்கலாம். மாங்காயின் உள்ளிருக்கும் கொட்டையுடன் வெட்டியிருக்கிறோம். மாங்காயின் உள்ளே இருக்கும் பருப்பை  முற்றிலும் நீக்கி விட வேண்டும். பருப்பை மூடியிருந்த கெட்டியான  ஓடு என்ற பாகத்துடன்தான் ஊறுகாய் தயாரிக்கிறோம்.  கண்டிப்பாக இதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.
இந்த கடினமான பாகம் தான் மாங்காயைக் கரைய விடாமல் பாதுகாக்கிறது.
கடுகை சுத்தம் செய்து நல்ல வெயிலில் ஒரு நாள் பூராவும் காயவைத்து எடுக்கவும். கடுகை மிக்ஸில் இட்டு நன்றாக,  மெல்லியதாகப் பொடித்துக் கொள்ளவும். மிளகாய்ப்பொடி வீட்டில் பொடித்ததாக இருந்தாலும் நல்லது..கடையில் வாங்கியதாக இருந்தாலும், நம்பகமான ப்ராண்டாகப் பார்த்து நல்ல பொடியாகத் தேர்ந்தெடுக்கவும். சிகப்பு மிளகாயின் பொடியாக இருக்கட்டும். வெந்தயத்தையும் வெயிலில் காய வைக்கவும். எண்ணெய் எள்ளெண்ணெய் அதுதான் நல்லெண்ணெய் வேண்டும். சுத்தமான மஞ்சள் பொடி, சுத்தமான உப்புப் பொடி வேண்டும்.
1. நறுக்கிய மாங்காயை நல்ல வெயிலில் பரத்தி ஒரு நாள் உலர்த்தவும்.
2. ஒரு அகலமான  பாத்திரத்தை சுத்தமாகத் துடைத்து வெயிலில் வைத்து எடுக்கவும். இந்தப் பாத்திரத்தில்
3. மிளகாய்ப்பொடி, உப்பு, மஞ்சள் பொடி, வெந்தயம் யாவற்றையும்
ஒன்றாகக் கலக்கவும். முழு வெந்தயம்தான். எண்ணெயையும் விட்டு, பஜ்ஜி மாவு போல  ஒரு மரக் கரண்டியால் கிளறி வைக்கவும்.
4. ஊறுகாயை எடுத்து வைக்க கண்ணாடி பாட்டிலோ, ஜாடியோ முதலிலேயே சுத்தம் செய்து வெயிலில் வைத்து எடுத்து வைக்கவும்.
5. ஒரு அகலமான சுத்தமான ஸ்டீல் தாம்பாளத்தில் ஓரளவு மாங்காயைப் போடவும்.
6. பஜ்ஜிமாவுபோல  கலந்து வைத்திருக்கும் கலவையை  சிறிது அதில் போட்டு  கரண்டியால் கலக்கவும். இதை ஜாடியில் சேர்க்கவும்.
7. அடுத்து மேலும் மாங்காய்த் துண்டுகளை, இதே ரீதியில் மிளகாய்ப்பொடி கலவையைச் சேர்த்துக் கலக்கி ஜாடியில் சேர்க்கவும்..
8. இப்படியே, நான்கைந்து முறையில் பூரா மாங்காய்த் துண்டுகளில் கலவையைச் சேர்த்து, ஜாடியில் சேர்த்து, மீதி கலவை பாக்கி இருப்பதையும் அதில் சேர்த்துக் கலக்கவும். ஈரமில்லாத நீண்ட மரக்கரண்டி கலப்பதற்கு விசேஷம்.
9. பூண்டு பிடித்தவர்கள் 100 கிராம் உறித்த பூண்டைக் கலவையில் சேர்க்கலாம்.
10. கொண்டைக் கடலையை 100கிராம் வெயிலில் நன்றாகக் காயவைத்து கலவையில் சேர்க்கலாம்.
11. நல்ல முருங்கைக்காயைத் துடைத்து, 2 அங்குல நீளத்திள் நறுக்கி அதையும் சேர்க்கலாம் .சுமார் 15 துண்டங்கள். ஏதாவது ஒன்று போதும்.
12. நல்ல பெருங்காயப் பொடி வேண்டிய அளவு போடலாம்.
13. ஊறுகாய் ஜாடியை, நல்ல துணியினால் வாயை இறுகக் கட்டி ஒரு நாள் வெயிலில் வைத்து எடுக்கவும். அடிக்கடி முதலில் நான்கு, ஐந்து நாட்கள் கிளறி விடவும்.. ஊற ஊற எண்ணெய் ஊறுகாயின் மேல் தேங்க ஆரம்பிக்கும்.
P1020686
ஃப்ரிஜ்ஜில் வைக்க வேண்டாம். வேண்டிய அளவு ஊறுகாயை சின்ன பாட்டிலில் எடுத்து மீதியை அழுத்தமாக மூடி வைக்கவும்.. எடுக்கும் போது கிளறி விடவும். வெந்தயம் வறுக்க வேண்டாம் கடலை, பூண்டு யாவும் ஊறினால் ருசியாக இருக்கும். மாங்காய் புளிப்பு பூராவும் மஸாலாவுடன் சேர்ந்து ஊறும் காயைவிட ருசியாக இருக்கும். நீண்டகாலம் வைப்பதற்காக இந்தத் தயாரிப்பு. உப்பு காரம் விருப்பப்படி  கூட்டிக் குறைக்கலாம்.

தொடர்புடைய பதிவுகள்
கோடை கால சீசன் சமையல்

வெயில்கால கடுமையைப் போக்கும் வாழைத்தண்டு மோர்க்கூட்டு

அவசரமாக மோர்க்குழம்பு வைப்பது எப்படி?

வெயிலை வீணாக்காமல் அரிசி வடாம் இடுவது எப்படி?

நாவில் நீர் ஊறும் மெந்தியமாங்காய் செய்வது எப்படி?

எழுத்தாளரின் வலைப்பூ http://chollukireen.wordpress.com/

Advertisements

“ஓ…இதுதான் ஆவக்காய் ஊறுகாயா?!” இல் 11 கருத்துகள் உள்ளன

  1. நான் ஸ்டாக் வைக்கிறேன். எப்போது வேண்டுமானாலும் எடுத்துப் போகலாம்..உங்கள் வரவுக்கு நன்றி . எடுத்துப்போக வாருங்கள்.

  1. நிறைய ஊறுகாய் போட்டால்ப் போகிறது. என்ன பிரமாதம்?நான் போடுவதில் எல்லோருக்கும் சேர்த்துப் போடுகிறேன். காரம் குறைவாக வேண்டுமா?அதிகம் வேண்டுமா? முன்னாடியே சொல்லிவிடுங்கள்.

 1. அடடா…நல்ல குறிப்பு அம்மா… 🙂
  மேலு உள்ள கந்தசாமி ஐயா, தனபாலன் சார் அவங்ககூட எனக்கும் ஒரு போட்டல் ஊறுகாய் தாங்கம்மா… :)))

  ஆமா.. கொண்டைக்கடலை, முருங்கைக்காய் இவையெல்லாம் அப்படியே அவிக்காம பச்சையாவே சேர்த்துக்குவீங்களா??? இதுவரை அறியவில்லை. அதான் கேட்டேன்.

  அருமையான குறிப்பு. மிக்க நன்றி அம்மா!

  1. இளமதி இது விசேஷமான ஊறுகாய்தான். கடலை,பூண்டு எல்லாவற்றையும் வெய்யிலில் காயவைத்து அப்படியே போடவேண்டியதுதான். முருங்கைக்காயும் அப்படியே.
   நாளாகஆக எல்லாம், நன்றாக ஊறிக்கொண்டு சாப்பிட நன்றாக இருக்கும்,. இன்தியாவின் மாங்காய்கள்தான் விசேஷம்.
   உன் அன்பான வார்த்தைகளுக்கு வரவேற்பு கொடுக்கிறேன்.
   ஒரு பாட்டில் என்ன போடுவதை அதிகமாகப் போட்டால் உபயோகமாகிப் போகும். அன்புடன்

 2. புகைபடத்திலேயே ருசியும் தெரிகிறது. உங்கள் வீட்டின் முன் நீண்ட வரிசையா? நானும் வந்து நின்று விட்டேன்.
  நாலு காய் வாங்கிப் போட்டுப் பார்க்கிறேன்.
  இங்கும் வியாபாரிகளே நறுக்கிக் கொடுத்து விடுகிறார்கள்.
  அவர்கள் நறுக்கிக் கொடுத்து, நீங்கள் ஊறுகாய் போட்டு சாப்பிட வந்து விடுகிறேன்…ஹி….ஹி….!

 3. ஸ்பெஷலாய் நல்ல மாங்காய்க்கு ஆர்டர் கொடுத்து, வீட்டிலே வந்து வெட்டிக் கொடுக்கச் சொல்லுகிறேன். உங்களுக்கு எந்த வகை வேண்டும்.? ஸாமான்களுக்கு சொல்லி விட்டேன்.ஒரு போன் கால்தான். ஸாமான் வந்தாகி விட்டது. வெயில் நிறைய இருக்கிறது. ஊறுவதற்கு கொஞ்சம் டைம் எடுக்கும். மொத்தமா ஆர்டர் பிடிச்சுடலாம் போல இருக்கு. முதல்லே வந்தவர்கள் எல்லோருக்கும் முன்னுரிமை. சாப்பிட்டுவிட்டு,கையிலும் உண்டு. என்ன ஸந்தோஷம் தெரியுமா? எனக்கும் ஆவக்காயிற்கும்.!!!!!!!!

 4. முருங்கைக்காய்,கொண்டைக்கடலை எல்லாம் சேர்த்து வித்தியாசமான ஊறுகாயா இருக்கே!படத்தைப் பார்க்கும்போதே எடுத்து வாயில் போட வேண்டும்போல இருக்கு.

  மாங்காயை எப்படி வெட்ட வேண்டும் என தொடங்கி போட்டு எடுத்து வைக்கும்வரை பக்குவமா சொல்லியிருக்கீங்க.செய்பவர்களுக்கு எளிதாக இருக்கும்.அன்புடன் சித்ரா.

 5. நான் இருக்கும் ஊரில் ஆவாக்காய் மாங்காய் வெட்டித்தர ஆள் இல்லை.சென்னை சென்றால் வெட்டி வாங்கி செய்து விடுகிறேன்.
  நல்ல பொறுமையாக ஒவ்வொன்றையும் விளக்கி சொல்கிறீர்கள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.