ஆவக்காய் ஊறுகாய், சமையல், சீசன் சமையல், செய்து பாருங்கள், சைவ சமையல், பாரம்பரிய ரெசிபி, மாங்காய், மாங்காய் ஊறுகாய், மெந்தியமாங்காய், ருசியுங்கள்

நாவில் நீர் ஊறும் மெந்தியமாங்காய் செய்வது எப்படி?

ருசி -11

காமாட்சி
காமாட்சி

இந்த சீஸனில் மாங்காய்கள் பலவிதமாகக் கிடைக்கும். சுலபமாக வெந்தியமாங்காய் தயாரித்தால் தயிர் சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும். பிஞ்சு மாங்காயானால், அதாவது கொட்டை முற்றாமல், உள்ளே பருப்புடன் கூடியதாக இருந்தால், சாதாரணமாக உப்பு பிசறி கடுகு தாளித்துக் கொட்டினாலே போதும். ருசியாக இருக்கும். துளி இஞ்சியைத் தோல் சீவி, பொடியாய் நறுக்கிச் சேர்த்தாலும் ருசி அலாதிதான். அதே சற்று புளிப்புள்ளதாக இருந்தால்கூட ஒரு பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கி சேர்த்து கடுகு தாளித்துக் கொட்டினாலும் போதும். சற்றுக் கொட்டை முற்றிய, காயாய் இருந்தால் காயை நறுக்கி, உப்பு, மஞ்சள் பொடி, மிளகாய்ப்பொடி சேர்த்து, எண்ணெயில் கடுகு, பெருங்காயம், தாளித்துக் கொட்டினாலும், நன்றாக இருக்கும்.

வெந்தயம் சேர்த்து செய்யும் மாங்காய் ஊறுகாய்தான் மெந்திய மாங்காய். இதை நாட்பட வைத்துக்கொள்ள வேண்டுமானால் சற்று கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

1

ஆவக்காய் என்ற பெயரில் வழஙகும் மாங்காய் ஊறுகாய் பிரசித்தமானது. இது ஆந்திர மாவட்டத் தயாரிப்பு வகை. ஆவாலு என்றால் கடுகு. கடுகை முக்கியமாக வைத்துத் தயாரிக்கும் வகையாதலால் ஆவகாயி என்று சொல்வது ஆவக்காய் ஆகிவிட்டது. முதலில் மெந்திய மாங்காய். அடுத்து ஆவக்காய் ஊறுகாய்.

வேண்டியவைகள்:
மிளகாய்ப்பொடி – இரண்டு டேபிள் ஸ்பூன்
கொட்டை முற்றிய மாங்காய் – இரண்டு
வெந்தயம் – ஒரு டீஸ்பூன்
கடுகு – ஒரு டீஸ்பூன்
மஞ்சள்பொடி – அரை டீஸ்பூன்
பெருங்காயம் – விருப்பத்திற்கிணங்க
நல்லெண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்.
உப்பு – ருசிக்கு

செய்முறை:
மாங்காயை நன்றாக அலம்பித் துடைத்து திட்டமான துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியைச் சூடாக்கி வெந்தயத்தைச் சிகப்பாகவும், கடுகைப் படபடவென்று வெடிக்கும் அளவிற்கும். வறுத்து எடுத்து ஆறினவுடன் மெல்லியதாகப் பொடித்துக் கொள்ளவும். ஒரு கண்ணாடிப் பாத்திரத்திலோ, ஜாடியிலோ மாங்காய்த் துண்டங்களைப் போடவும். உப்புப் பொடி சேர்த்துக் கலக்கவும்.

2

எண்ணெயைக் காயவைத்து கீழிறக்கி சற்றுச் சூடு குறைந்தவுடன் மிளகாய்ப்பொடி, மஞ்சள் பொடியை அதில் சேர்க்கவும். நறுக்கிய மாங்காயின் மேல் எண்ணெயைச் சேர்த்து, பெருங்காய, வெந்திய, கடுகுப் பொடியைச் சேர்த்துக் கலக்கவும். போட்டவுடனேகூட தொட்டுக் கொள்ள ஆரம்பிக்கலாம். ஊறினவுடன் ஃப்ரிஜ்ட்ஜில் வைத்து உபயோகிக்கவும்..

நறுக்கிய மாங்காயை உப்பு சேர்த்தவுடன் பாத்திரத்துடன் இரண்டு நாட்கள் வெயிலில் வைத்து எடுத்து, எண்ணெய், காரம் சேர்த்தால் அதிக நாட்கள் வரும். கெட்டுப் போகாது. கடுகு பொடி செய்து போட விரும்பாவிட்டால், தாளித்துக் கொட்டலாம். உப்பு, காரம், விருப்பத்திற்கு கூட்டிக் குறைக்கவும்.

Untitled-1 copy

ஃப்ரிட்ஜ்ஜில் வைப்பது அதிகம் செலவாகாத குடும்பத்திற்கு நல்லது. தயிர் சாதத்திற்கு சரியான ஜோடி இந்த மெந்திய மாங்காய்!

குறிப்பு : ஒரு பெரிய மாங்காய்க்கு சராசரி ஒரு டேபிள் ஸ்பூன் மிளகாய்ப்பொடி கணக்கு வைத்துக் கொள்வோம். நல்ல மிளகாய்ப்பொடியாக இருக்க வேண்டும்.

தொடர்புடைய பதிவுகள்
கோடை கால சீசன் சமையல்

வெயில்கால கடுமையைப் போக்கும் வாழைத்தண்டு மோர்க்கூட்டு

அவசரமாக மோர்க்குழம்பு வைப்பது எப்படி?

வெயிலை வீணாக்காமல் அரிசி வடாம் இடுவது எப்படி?

எழுத்தாளரின் வலைப்பூ http://chollukireen.wordpress.com/

Advertisements

“நாவில் நீர் ஊறும் மெந்தியமாங்காய் செய்வது எப்படி?” இல் 11 கருத்துகள் உள்ளன

 1. ….ஸ்..ஸ்… முடியலே… படங்கள் அப்படி…! தலைப்பும் சரியே…

  மாங்காயை துண்டங்களாக நறுக்குவதற்குள் பாதி காணாமல் போய் விடும்… ஹிஹி…

  செய்முறைக்கு நன்றி…

  1. பரவாயில்லே.ஊறுகாய் மாங்காய் சற்று புளிக்குமே! வாங்கும் போது அதிகம் வாங்கி விடுங்கள். எல்லாம் ஸரியாகப் போய்விடும். அன்புடன்

 2. மெந்தியமாங்காய் ஊறுகாய் நல்ல குறிப்பு அம்மா. இங்கு சாதாரண கடைகளில் கிடக்கும் மாங்காயை வாங்கி நீங்க சொன்னது போலவும் செய்து பார்க்கணும்.
  நான் மாங்காயை சிறுசிறு துண்டுகளாக வெட்டி 1ஸ்பூன் நல்லெண்ணையில் இளந்தீயில் அடுப்பில் ஒரு பிரட்டுபிரட்டி 4 நிமிடங்கள் வைத்து ஆறியபின் நீங்கள் சொன்னது போலவே தயாரித்துவைத்திருக்கும் ஊறுகாய்ப்பொடி சேர்த்து செய்வதுண்டு.

  நல்ல குறிப்பு. மிக்க நன்றி அம்மா.

  1. ஒருவர்க்கொருவர் தயாரிக்கும் முறை சற்று வேறுபடச்செய்யும்.

   மாங்காய் கிடைக்கிரதே. அதுவே நல்லது. . உனதும் நன்றாக யிருக்கிறது. அன்புடன்

 3. இமெயிலில் ரொம்ப வாசனையுடன் ஒரு போஸ்ட்! என்னவென்று பார்த்தால் கமகம மெந்திய மாங்காய்!
  அந்த தயிர் சாதத்தையும் இந்த மெந்திய மாங்காயையும் பக்கத்துப் பக்கத்தில் வைத்து ஒரு புகைப்படம் போட்டிருக்கலாம்! பார்த்தாலே பசி தீர்ந்துவிடும்!

  மிகவும் சுலபமாகச் செய்துவிடலாம் போலிருக்கிறதே!
  அடுத்ததாக ஆவக்காய் செய்முறைக்கு காத்திருக்கிறேன்.

  1. ஊறுகாய்தான் முதலில். தயிர்சாதம் முதலில் முகத்தைக்காட்டி விட்டது. இரண்டையும் மனதால் ஜோடி செய்து விடுங்கள். இப்படி ஏதாவது இருந்தால்தான் பின்னூட்டம் ருசியாக எதிர்பார்க்க முடியும்.கலந்த சாதமாக ஒன்று போடும்போது, ஊறுகாயை ஜோடியாகப் போட்டுவிடுகிறேன்.. சாதம் சாப்பிட்ட பிறகு ஊறுகாயா?என்று கேட்பது ஸரிதான். எதுவுமே ஒருதரம் செய்து விட்டால், பூ இவ்வளவுதானாதான். ஆவக்காயும் சுலபம்தான்.
   பார்க்கலாம். பெருங்காயம்,மாங்காய் கமகமதான் நன்றி. அன்புடன்.

 4. காமாக்ஷிமா,

  இந்த மாதிரி பச்சை மாங்காயைப் பார்த்து பல வருடங்களாயிற்று. மிளகாய்த்தூள் கலந்த ஊறுகாய் படம் சூப்பர்.

  இவ்வளவு நாளும் ஆவக்காய் என்பது வேறொரு காய் என்றே நினைத்திருந்தேன்.இன்றுதான் விஷயம் தெரிந்தது.ஒரு சமயம் கடையில் ஆவக்காய் ஊறுகாய் வாங்கி யாருமே தொடவில்லை,அவ்வளவு துவர்ப்பு.

  உங்கள் ஆவக்காய் செய்முறையைக் காண ஆவலாய் உள்ளேன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.