வணக்கம். 4பெண்கள் தளத்தில் உங்களுடைய நிதி ஆலோசனை தொடரை ஆர்வமாகப் படித்துக்கொண்டிருக்கிறேன். நிதி திட்டமிடல் என்பது ரொம்பவும் சிக்கலான சப்ஜெக்ட். அதை என்னைப் போன்றவர்களுக்கு எளிமையாக சொல்லி வருகிறீர்கள். மிக்க நன்றி. எனக்கொரு ஆலோசனை வேண்டும். நானும் என் கணவரும் பணிபுரிந்து வருகிறோம். ஒரு வயதில் குழந்தை இருக்கிறது. எங்கள் குழந்தையின் கல்விச் செலவுக்கு சேமிப்பது எப்படி? எப்படிப்பட்ட மியூச்சுவல் ஃபண்ட்டுகளில் முதலீடு செய்யலாம்?
– ப்ரீத்தி ராம்குமார், சென்னை.

‘‘உங்களுடைய வாழ்த்துக்கு நன்றி ப்ரீத்தி. குழந்தையின் எதிர்காலத்துக்கான இப்போதே திட்டமிட நினைப்பதை பாராட்டுகிறேன். குழந்தைகளின் எதிர்கால பணத் தேவைகளை முக்கியமான இரண்டு கட்டங்களாகப் பிரித்துக் கொள்ளலாம். ஒன்று பள்ளிக்கான செலவுகள், இரண்டு கல்லூரி செலவு.
நம்முடைய வசதிக்கேற்பவும் நாம் தேர்ந்தெடுக்கும் பள்ளிகளுக்கு ஏற்பவும் பள்ளி ஆண்டுக் கட்டணம் ரூ. 10 ஆயிரத்திலிருந்து ரூ. 1 லட்சம் வரை ஆகலாம். ப்ரீ கேஜி முதல் 12-ஆம் வகுப்பு முடியும் வரை ஒவ்வொரு வருடத்துக்கான பள்ளிக் கட்டணத்தையும் ரெக்கரிங் டெபாசிட் முறையில் சேர்க்கலாம். ஒரு வருடத்துக்கான ரெக்கரிங் டெபாசிட்டுக்கு அதிக வட்டிதரும் வங்கியைத் தேர்ந்தெடுத்து மாதாமாதம் குறிப்பிட்ட தொகை ஒதுக்கி சேர்க்கலாம். ஜூன் மாதம் பள்ளிக் கட்டணம் செலுத்துகிறீர்கள் என்றால் ரெக்கரிங் டெபாசிட் காலம் ஒரு மாதம் முன்பாகவே அதாவது மே மாதமே முடியும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.
இன்றைய நிலையில் இன்ஜினீயரிங் படிக்க ரூ. 5 லட்சம் செலவாகிறது. 18 வருடம் கழித்து உங்கள் மகள் இன்ஜினீயரிங் படிக்க ரூ. 20 லட்சம் (அப்போது பணவீக்கம் 8 சதவிகிதமாக இருக்கும்) செலவாகும். ஏறிவரும் விலைவாசிக்கு அதாவது பணவீக்கத்துக்கு ஈடுகொடுக்க வங்கிகள் தரும் வட்டி விகிதத்தால் ஈடுகொடுக்க முடியாது. அதனால் நீண்ட கால முதலீட்டுக்கு டைவர்சிஸிஃபைடு மியூச்சுவல் ஃபண்டுகளை நாங்கள் பரிந்துரைக்கிறோம்.
18 வருடம் கழித்து உங்கள் குழந்தையை இன்ஜினீயரிங் படிக்க வைக்க இப்போதேலிருந்தே மாதம் ரூ. 2000த்தை 15 சதவிகித வட்டி தரும் டைவர்சிஸிஃபைடு மியூச்சுவல் ஃபண்டுகளில் சேமித்து வர வேண்டும். 18 வருடம் கழித்து அந்தத் தொகை ரூ. 22 லட்சமாக வளர்ந்து நிற்கும்.
மேற்கொண்டு உங்கள் குழந்தை மேற்கொண்டு உயர்படிப்பில் சேர்க்க விரும்பினால் தனியாக மாதம் ரூ. 3 ஆயிரம் வீதம் 22 வருடங்களுக்கு சேமிக்க வேண்டும். 15 சதவிகித வட்டி தரும் டைவர்சிஸிஃபைடு மியூச்சுவல் ஃபண்டுகளில் அது ரூ. 62 லட்சமாகக் கிடைக்கும்.
உங்கள் குழந்தையின் எதிர்காலத்துக்கு மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை ஒதுக்கி சேமித்து வரலாம். இப்படி சேமிப்பதால் பணம் தேவையான நேரத்தில் அலைச்சல் இல்லாமல் எடுத்து செலவு செய்யலாம்’’
உங்களுக்கும் இதுபோல நிதி ஆலோசனை, இன்ஷூரன்ஸ் பற்றி கேள்விகள் இருந்தால் கேளுங்கள் நிதி ஆலோசகர் பி. பத்மநாபன் பதிலளிப்பார். கேள்விகளை பின்னூட்டமாகவோ, fourladiesforum@gmail.com என்ற இ.மெயிலிலோ கேட்கலாம்.
தொடர்புடைய பதிவுகள்
தங்கம், ரியல் எஸ்டேட்டைவிட அதிக வருமானம் தரும் மியூச்சுவல் ஃபண்ட்!
மியூச்சுவல் ஃபண்டில் ஏன்
முதலீடு செய்ய வேண்டும்?
நிதி ஆலோசகர் பி. பத்மநாபனைத் தொடர்பு கொள்ள
தொலைபேசி எண் 98843 49173
இ.மெயில் முகவரிக்கு நன்றி…
நண்பர்களிடமும் பகிர்கிறேன்…
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தனபாலன்
திருமதி ப்ரீத்தியின் கேள்வி இன்றைய சூழ்நிலையில் ஒவ்வொரு பெற்றோரின் மனதிலும் இருக்கும் கேள்வி.
சிறந்த கேள்வி கேட்டதற்கு அவருக்கு முதலில் நன்றி.
பெற்றோர்கள் இருவரும் சம்பாதிப்பதால் 2,000 ரூபாய் மாதம் சேமிப்பது சிரமமாகவும் இருக்காது. அதுவும் குழந்தையின் எதிர்காலம் என்னும்போது எப்படியாவது சேமிக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.
சிறுகக் கட்டிப் பெருக வாழ் என்று யோசனை தந்த நிதி ஆலோசகர் திரு பத்மனாபனுக்கும் மனமார்ந்த நன்றி.
என் பிள்ளைக்கும் உங்கள் ஆலோசனையைக் கூறுகிறேன்.
கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி ரஞ்சனி
Can you also tell about pension schemes mainly for private sector employees?
regards
geetha Ramkumar
வருகைக்கு நன்றி கீதா. உங்களுக்கான ஆலோசனையை விரைவில் ஆலோசகர் பத்மநாபன் சொல்வார்.
I have flat in Chennai. Is it worth to buy another flat for rental purpose? or better to save in fixed deposit. 50 now and want to retire in 10 years from now.
வணக்கம் . உங்களுடைய கேள்விக்கான பதிலை விரைவில் நிதி ஆலோசகர் பத்மநாபன் சொல்வார்.
மாதம் 3000 பணம் செலுத்தினால் முதலிலேயே 62 லட்சத்திற்கான 22 வருடம் முதிர்வு தேதியிட்டு பத்திரம் கொடுப்பார்களா?
வணக்கம் புரட்சிதமிழன். நீங்கள் கேட்பதுபோல பத்திரம் தருவதில்லை. பங்குச்சந்தையின் வளர்ச்சி மற்றும் பணவீக்கத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுவது இது. மியூச்சல் ஃபண்ட் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ள எங்களுடைய முந்தைய பதிவுகளைப் படிக்கவும்.