கோடை கால சீசன் சமையல், சமையல், சீசன் சமையல், செய்து பாருங்கள், சைவ சமையல், தயிர் சாதம் செய்வது எப்படி?, ருசியுங்கள்

ஜில்லுனு தயிர் சாதம் செய்வது எப்படி?

காமாட்சி
காமாட்சி

ருசி -10

நல்ல வெயிலுக்கு ஜில்லுனு தயிர் சாதம் சாப்பிட நினைப்பவர்களுக்கு அழகான வண்ணக் கோலத்துடன் தயிர் சாதம். யாராவது நம் பக்கத்துக்காரர்களைச் சாப்பிடக் கூப்பிட்டால்  அதிகமில்லாவிட்டாலும், ஒரு கண்ணாடி போல் நிறைய தயிர் சாதம் வைத்து விட்டால் மற்றது பாக்கி இருக்குமே தவிர இது காலியாகிவிடும். டேபிளில் மற்றவைகளுடன் இதுவும் ஒரு கதம்பமாகக் காட்சியளிக்கும். என்ன பிரமாதம், தயிர்சாதம்தானே என்று நினைக்கிறீர்கள்? பரவாயில்லை.

வேண்டிய சாமான்கள்

 1. நல்ல பச்சரிசி – ஒரு கப்
 2. தயிர் – 2கப்
 3. பால் – ஒரு கப்
 4. நறுக்கிய அல்லது துருவிய இஞ்சி – ஒரு டீஸ்பூன்
 5. பச்சை மிளகாய் – ஒன்று
 6. எண்ணெய் – ஒரு டீஸ்பூன்
 7. கடுகு – அரை டீஸ்பூன்
 8. அலங்கரிக்க பச்சை திராட்சை, கேரட், வெள்ளரித் துருவல், சிகப்பு கேப்ஸிகம், மாதுளை முத்துகள், கறிவேப்பிலை.
 9. எல்லாமே வேண்டுமென்பதில்லை. எது பிடிக்குமோ அதை உபயோகிக்கலாம்.
 10. உப்பு – ருசிக்கு

செய்முறை

சாதத்தை வழக்கமாக வைக்கும் ஜலத்துடன் சற்று அதிகமாக வைத்து குழைய வேகவைக்கவும். பாலைக் காய்ச்சி ஆற வைக்கவும். சாதம் சூடு ஆறும் முன்பாக  நன்றாக குழிக் கரண்டியினால் மசித்துக் கொள்ளவும். மசித்த சாதத்தில் காய்ச்சிய பாலைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். நன்றாகச் சூடு குறைந்தபின், உப்பையும் தயிரையும் விட்டுச் சேர்த்துக் கலக்கவும். இஞ்சியைச் சேர்க்கவும்

கடுகு, பெருங்காயம் தாளித்துக் கொட்டவும். பச்சைமிளகாய் போடுவதானால் நறுக்கி வதக்கிச் சேர்க்கவும். சிலர் உடம்பிற்கு நல்ல தென்று முழு மிளகைத் தாளித்துக் கொட்டுவதையும் பார்த்து இருக்கிறேன்.

ஃப்ரிஜ்ஜில் வைத்து வேண்டும்போது எடுத்து,  எது வகையாகக் கிடைக்கிறதோ அதைக்கொண்டு அலங்கரித்துப் பரிமாறவும். கறிவேப்பிலை, பச்சை திராட்சை, மாதுளை முத்துகள் போட்டிருக்கிறேன்.

P1020673

இருக்கவே இருக்கிறது ஊறுகாய்கள்.. ருசித்துப், புசித்து எழுதுங்கள் சில வரிகள். கையால் பிசைவதற்கு யோசனை இருப்பின் கட்டி தட்டாமல் உருளைக்கிழங்கு மசிக்கும் கரண்டியினால் கட்டி இல்லாமல் கலக்கவும்.

தொடர்புடைய பதிவுகள்
கோடை கால சீசன் சமையல்

வெயில்கால கடுமையைப் போக்கும் வாழைத்தண்டு மோர்க்கூட்டு

அவசரமாக மோர்க்குழம்பு வைப்பது எப்படி?

வெயிலை வீணாக்காமல் அரிசி வடாம் இடுவது எப்படி?

எழுத்தாளரின் வலைப்பூ http://chollukireen.wordpress.com/

“ஜில்லுனு தயிர் சாதம் செய்வது எப்படி?” இல் 18 கருத்துகள் உள்ளன

 1. என் வலைக்கு வாருங்கள் என்று ரஞ்சனி மேடம் சொன்னதை கேட்டு வந்தால்
  இங்க தயிர் சாதத்தை எனக்குன்னே மேடம் காமாட்சி அவங்க பண்ணி வச்சுண்டு
  வாங்கோ வாங்கோ சாப்பிடுங்கோ அப்படின்னு சொல்றார் போல் இருக்கிறது.

  இந்த சுடற அனல் பொசுக்கற வெயில்லே இந்த தயிர் சாதம் தேவாம்ருதம்.
  எங்கே கிடைக்கும் ? எப்ப கிடைக்கும்?
  வளசரவாக்கத்திலேந்து எத்தனை தூரத்துலே இந்த தயிர் சாதம் கிடைக்கிற வீடு இருக்கிறது.

  ஏகப்பட்ட கேள்விகள் உதிக்கிற அதே நேரத்துலே
  தயிர் சாதத்தைப் பார்த்து பார்த்து நாக்குலே வேற ஜலம் சொட்டிண்டே இருக்கு.

  இப்பவே வந்துட்டேன்.

  ஆமாம். தொட்டுக்க என்ன? மாங்காய் வடுவா !! பேஷ் பேஷ் !!

  சுப்பு தாத்தா

  1. தாத்தாவென்று அடை மொழிகளுடன் கூடிய உங்களை வருகவருக என்று வரவேற்கிறேன். அக்ஷய திருதியைக்கு,பானை ஜலத்துடன்,விசிறி, தயிர்சாதம் எல்லாம் தானமாக வழங்குவதைப்
   பார்த்திருக்கிறேன். அவ்வளவு நல்லது தயிர் சாதம் வழங்குவது.
   குறைந்த பக்ஷம்,ப்ளாகிலாவது போட முடிந்தது என்று ஸந்தோஷம். இந்த வீடு இப்போது மும்பையில் மையம் கொண்டுள்ளது.

   சாதம் சாப்பிட வரும்போது,வடுமாங்காய் என்ன, எந்த ஊறுகாய் வேண்டுமோ செய்து விட்டாற் போகிறது.
   ரஞ்ஜனி மேடம் அவர் போகுமிடமெல்லாம் என்னையும் அழைத்துப்போவது வழக்கம்..
   வயதானவர்கள் மீது, அதிலும் என்னிடம் பரிவு அதிகம்.
   அவர்கள் ப்ளாகிற்கு போகும் வழியில் கட்டு சாதத்துடன் இருக்கும்என்னையும் பார்க்க வந்ததில் மிகவும் திருப்தி.
   நிஜமாக வே இம்மாதிரி வலைப்பூ ஸகோதர ஸகோதரிகள் வந்து ஸுலபமாக இந்த தயிர் சாதத்தை சாப்பிட்டால் எவ்வளவு ஸந்தோஷமாக யிருக்கும்?
   கற்பனைகள் விரிகிறது. நன்றியும், ஸந்தோஷமும். அன்புடன்

  1. மனமும்,வயிறும், குளிர்ந்து விட்டால் வாழ்த்தத்தான் தோன்றும்.
   இதைப் படிப்பவர்களை வாழ்த்துங்கள். நன்றி அன்புடன்

   1. சாப்பிடலாம்போல இருக்குங்க. பாராட்டுகள்தான் இதுவும். உங்கள் வருகைக்கும், பாராட்டுகளுக்கும் நன்றிங்க. அன்புடன்

 2. காமாஷிமா,

  தயிர் சாதத்தைப் பார்த்தால் தொட்டு சாப்பிட எதுவுமே தேவையில்லை போல.அதிலேயே எல்லாமும் இருக்கின்றன.பார்க்கவே ஜில்லுன்னு இருக்கு.

  “எல்லாமே வேண்டுமென்பதில்லை.எது பிடிக்குமோ அதை உபயோகிக்கலாம்”___இப்படி எல்லாம் எழுத உங்களால்தான் முடிகிறது. அன்புடன் சித்ரா.

  1. எது இருக்கிறதோ அதைக்கொண்டு செய்தாலும்,அதுவும், ருசியாகத்தானிருக்கும். ஜில்லுனு பழையதில் உப்பு போட்டு
   தயிர் விட்டுப் பிசைந்து கையில் போடுவார்கள்.. அந்த மாதிரி ருசி
   இப்போது கிடைக்குமா? ;சொன்னால்தான் நம்புவார்களா? உன் பதில் அன்த சாதம் சாப்பிட்டமாதிரி இருக்கு. அன்புடன்

  1. பாதியிலேயே post comment – பட்டனை அழுத்திவிட்டேன் போலிருக்கு.

   மோர் மிளகாய் கூட வறுத்து தயிர் சாதத்தில் சேர்த்து போடுகிறார்கள்.

   எனக்கு ஒரு சின்ன விளக்கம் தேவை: தினமும் மதிய சாப்பட்டுக்கு எடுத்துக் கொண்டு போகும் தயிர் சாதம் ரொம்ப புளித்துவிடுகிறது என்று பிள்ளை சொல்லுகிறான். புளிக்காமல் இருக்க டிப்ஸ் கொடுங்களேன்.

  2. ஆமாம். நான்கூட எழுத நினைத்தேன். அதை ஒரு பதிவாகப் போடலாமென்று நினைத்து அதற்கு விஷயம் நிலுவையில் வைத்து விட்டேன்..அன்புடன்

   1. சாதம் பிசையும்போது நிறைய பால் விட்டுப் பிசைந்து விட்டு, தயிர் உறை குத்துவது போல துளி தயிர் விட்டுப் பிசைந்து கொடுங்கள்.. சாப்பிடும்போது அப்போதுதான் தயிர் உறைந்த மாதிரி யிருக்கும்.,. முதலில் சின்ன அளவில் டெஸ்ட் செய்து பாருங்கள்.. வெளியூர்களுக்குப் போகும் போதும் இப்படி செய்வதுண்டு. பாலை தளர விட்டுப்பிசைந்து துளி தயிர் சேர்க்கவும். ரிஸல்ட் சொல்லவும்.. சுடச்சுட பாக்ஸில் எதுவும்
    வேண்டாம். மிகவும் நன்றி. அன்புடன்

  3. மோர் மிளகாய் மட்டுமென்ன, முந்திரி பருப்பு கூட வறுத்துப் போடலாம்.ஹஜ்ஜி கிருஷணராவ் மிள, முந்திரியும் வறுத்துப் போடச் சொல்வார். அந்த ஞாபகம் வந்தது. அன்புடன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.