ஃபேஸ்புக்கின் முதன்மை செயல் அதிகாரி ஷெரில் சாண்ட்பர்க், அலுவலக பெண்களின் பிரச்னைகள், பிஸினஸ், புத்தக அறிமுகம், புத்தகம், முதல் இந்திய பெண்

அலுவலக பெண்களின் பிரச்னைகள் : HSBC வங்கியின் தலைவர் நைனா லால்கிட்வாய் சொல்கிறார்

சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சி அலுவலகத்தில் பெண்களுக்கு எதிராக பல்வேறு பாலியல் துன்புறுத்தல்கள் நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. நாம் தெரிந்துகொண்ட வகையில் அந்த குற்றச்சாட்டு உண்மைதான் என்பது தெரிந்தது. அந்த வகையில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான அகிலாவுக்கு ஆதரவு தெரிவிக்கிறோம். தனியார் தொலைக்காட்சி நிறுவனம் தொடர்புடைய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்துகிறோம்.

மிகப்பெரிய அளவில் பெண்கள் இந்த பத்தாண்டுகளில்தான் அலுவலகப் பணிகளுக்கு வர ஆரம்பித்திருக்கிறார்கள். இது ஆரம்ப கட்டம் என்பதால் பெண்கள் பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கிறது. பெரும்பாலும் அலுவலகங்களில் தலைமை பதவிகளில் இருப்பவர்கள்தான் இந்த துன்புறுத்தல்களை பெண்களுக்குத் தருபவர்களாக இருக்கிறார்கள். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் பணியாளர்கள் செய்யும் வேலையின் தரத்தை மட்டும் பார்க்கும் இடங்களில் இந்தப் பிரச்னை ரொம்பவே குறைவு. ஆனால் இங்கே உள்ள அதிகாரிகள் மிகவும் பிற்போக்குத்தனமானவர்களாகவே இருக்கிறார்கள் என்பது மேற்படியான சம்பவங்களில் இருந்து தெரிகிறது.

அலுவலகம், பள்ளி, கல்லூரி உள்ளிட்ட வெளிஇடங்களுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பும் பெண்களின் பாதுகாப்பு பற்றி பேசிக்கொண்டிருக்கும் இந்த தருணத்தில், பணியிடங்களில் பெண்களின் நிலை என்ன என்பதையும் பேசியாக வேண்டும். இந்த சந்தர்ப்பத்தில் ஃபேஸ்புக்கின் முதன்மை செயல் அதிகாரி ஷெரில் சாண்ட்பர்க் வெளியிட்ட ‘லீன் இன்’ புத்தகம் அலுவலக பெண்களின் பிரச்னைகளை முன்னெடுத்திருக்கிறது. இதன் தாக்கம் இந்தியாவிலும் இப்போது ஏற்படத்தொடங்கியிருக்கிறது. எச்எஸ்பிசி வங்கியின் இந்திய தலைமை அதிகாரி நைனா லால்கிட்வாய், அலுவலகங்களில் இந்திய பெண்களின் நிலை பற்றி பேசியிருக்கிறார்.

Naina lal Kidwai

சமீபத்தில் ‘லீன் இன்’ புத்தகத்தை ஒட்டி அவர் எழுதியுள்ள ஒரு கட்டுரையில் தான் அலுவலகத்தில் பல்வேறு பிரச்னைகளை தாண்டி வந்திருப்பதை சொல்லியிருக்கிறார். அலுவலக பெண்கள் மட்டுமல்ல, அலுவலகம் செல்ல இருக்கும் அடுத்த தலைமுறை பெண்களின் அம்மாக்களும், சகோதர்களும் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்களை எளிமையாக சொல்லியிருக்கிறார் நைனா.
நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த தனக்கு சிறுவயதிவேயே ஒரு அலுவலகத்தில் பணியாற்றும் ஆர்வம் தன் அப்பா மூலம வந்தது என குறிப்பிடுகிறார்.  ஹார்வர்டு பிஸினஸ் ஸ்கூலில் படித்த முதல் இந்திய பெண் என்பதைச் சொல்லிவிட்டு, இதே பிஸினஸ் ஸ்கூலில்தான் 30 ஆண்டுகளாக ஆண்கள் படித்துக்கொண்டிருந்தார்க.ன். ஒரு பெண் 1982ம் வருடம்தான் படிக்க முடிந்தது. என்ன ஒரு சமூகம் இது? என்று சாடுகிறார்.
பிஸினஸ் ஸ்கூலில் படித்து முடித்துவிட்டு அலுவலகப் பணிகளில் சேர்ந்தபோது நேரம் காலம் இல்லாமல் உழைக்க வேண்டியிருந்தது என்பதுதான் முதல் பிரச்னையாக இருந்தது. அடுத்தது பெண்களுக்கான அலுவலக கழிப்பறை கட்டத்தின்  மூலையில் ஒரு இருட்டான இடத்தில் இருந்தது. அடுத்த நான் சந்தித்த பிரச்னையாக குழந்தை பிறந்தவுடன் வேலையைவிட்டுவிட வேண்டும் என்று தனக்கு ஏற்பட்ட நிர்பந்தத்தைச் சொல்கிறார்.
‘‘வேலை, குடும்பம் இரண்டையும் ஒரே நேரத்தில் பெண்ணால் சமாளிக்க முடியாது என்றே எல்லோரும் எனக்கு அறிவுறுத்தினார்கள். ஆனால் நான் வேலையை விடுவது, அடுத்து வரும் என்போன்ற பெண்களுக்கு வழிகாட்டும் செயலாக இருக்காது என்று நினைத்து, இரண்டையும் என்னால் சரியாக நிர்வகிக்க முடியும் என்று நிரூபித்தேன்.
இன்றும்கூட அலுவலகத்தில் பணியாற்றும் பெண்கள் நான் எதிர்கொண்ட பிரச்னைகளை எதிர்கொள்கிறார்கள். இந்த சூழ்நிலைகள் மெல்ல மாறிக்கொண்டிருக்கின்றன. அதற்கு ஒரு அழைப்பாக ‘லீன் இன்’ அமைந்திருக்கிறது. பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம் ஷெரில் சாண்ட்பெர்க்கின் ‘லீன் இன்’!’’ என்று முடித்திருக்கிறார் நைனா லால்கிட்வாய்.

“அலுவலக பெண்களின் பிரச்னைகள் : HSBC வங்கியின் தலைவர் நைனா லால்கிட்வாய் சொல்கிறார்” இல் 2 கருத்துகள் உள்ளன

    1. இவர்களைப்பற்றி நமது நம்பிக்கை இதழில் படித்து இருக்கிறேன்.
      பத்மஸ்ரீ விருது பெற்றவர்கள்.சர்வதேச வணிக உலகில் உலகத்தில் 50 பெண்நிர்வாகிகளில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
      அப்படி பட்டவர் நன்கு எழுதி இருப்பார் இந்த புத்தகத்தை ஆண், அலுவலகத்தில் பணியாற்றும் ஆண், பெண் இருபாலரும் படித்து பயன்பெற வேண்டியது அவசியம் தான்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.