நடுத்தர மக்கள் அதிகமாக நம்பி முதலீடு செய்யும் அஞ்சல் அலுவலக ரெக்கரிங் டெபாசிட் (5 ஆண்டு தொடர் வைப்புத் திட்டத்திற்கு மட்டும்) மற்றும் பி.பி.எஃப் கணக்குகளுக்கான வட்டி விகிதத்தை 0.1 சதவிகிதம் குறைத்திருக்கிறது மத்திய அரசு. ரிஸ்க் இல்லாத பாரம்பரிய முதலீட்டு திட்டங்கள் என்று சொல்லப்படும் இவற்றில் இப்படி வட்டி விகிதத்தைக் குறைப்பது அதிருப்தியை உண்டாக்கியிருக்கிறது.

நிதி கையாள்வதில் திறமையுள்ளவர்கள் பாரம்பரிய முதலீட்டுத் திட்டங்களைத் தவிர்த்து குறைவான ரிஸ்க்கும் அதிக லாபமும் தரும் முதலீட்டுத் திட்டங்களில் தங்கள் முதலீடுகளைத் தொடர்கிறார்கள். அந்தவகையில் நிதி ஆலோசகர்கள் அதிகம் பரிந்துரைப்பது மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுத் திட்டங்களைத்தான். இதுகுறித்து ஏற்கனவே நிதி ஆலோசனை பகுதியில் நிதி ஆலோசகர் பி. பத்மநாபன் சொல்லியிருக்கிறார். இதுகுறித்த கடந்த பதிவில் மியூச்சுவல் ஃபண்ட் தொடங்குவது எப்படி என்று சொல்லியிருந்தோம். இந்த பதிவில் மாதாந்திர முதலீட்டை தொடங்குவது (SIP) எப்படி என்று பி. பத்மநாபன் சொல்கிறார்.
‘‘மியூச்சுவல் ஃபண்ட் ஆரம்பிக்கும்போது ஒரே முறை செய்யும் முதலீடாக இருந்தால் குறைந்தபட்சம் ரூ. 5 ஆயிரம் என வரம்பு நிர்ணயித்திருக்கிறார்கள். அதேசமயம் சிஸ்டடமேடிக் இன்வெஸ்ட்மெண்ட் பிளான்(SIP) என்று சொல்லக்கூடிய மாதாந்திர முதலீட்டுக்கு குறைந்தபட்சம் ரூ. 1000 லிருந்து கட்டலாம். சில தேர்ந்தெடுக்கப்பட்ட ஃபண்டுகளில் ரூ. 100, ரூ 200ஐக்கூட குறைந்தபட்ச முதலீட்டு வரம்பாக நிர்ணயித்திருக்கிறார்கள். சரி… அதென்ன சிஸ்மாடிக் இன்வெஸ்ட்மெண்ட் பிளான்? வங்கி அல்லது போஸ்ட் ஆஃபிஸ் ரெக்கரிங் டெபாசிட்டில் மாதாமாதம் சேமிப்பது போன்றதுதான் மாதாமாதம் குறிப்பிட்ட பணத்தை மியூச்சுவல் ஃபண்ட் சேர்ப்பதும். ஒரே வித்தியாசம் ஆர்டியில் போட்ட பணம் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட வட்டி விகிதத்தின் அடிப்படையில் முதிர்வின்போது கிடைக்கும். ஆனால் மியூச்சுவல் ஃபண்ட் என்பது பங்குச் சந்தையில் வர்த்தகமாகும் தேர்ந்தெடுக்கப்பட்ட பங்குகளின் தொகுப்பு. மொத்தமாக தொகுக்கப்பட்ட பங்குகளின் ஏற்ற இறக்கத்தைப் பொறுத்து


உங்களுடைய முதலீடு வளரும். அல்லது தேயும். எது வளர்ச்சியைக் கொடுக்கும், எது லாபத்தைக் கொடுக்கும் என்பதை மியூச்சுவல் ஃபண்டைத் தேர்ந்தெடுக்கும்போது கவனிக்க வேண்டும். இது முதலீட்டாளர்கள் அவசியம் செய்ய வேண்டிய ஹோம் ஒர்க்.
நீங்கள் சரியான மியூச்சுவல் ஃபண்டை தேர்ந்தெடுக்கும் விதத்தில்தான் லாபமும் நஷ்டமும் இருக்கிறது. உங்களுக்கு சரியான ஃபண்ட் தேர்ந்தெடுப்பதில் பிரச்னை இருந்தால் நிதி ஆலோசகர்கள் உங்களுடைய சந்தேகங்களைத் தீர்த்து வைத்து வழிகாட்டுவார்கள்.
சரியான மியூச்சுவல் ஃபண்ட்டைத் தேர்வு செய்து, மாதாந்திர முதலீட்டையும் தொடங்கிவிட்டோம். அந்த முதலீடு எப்படி வளர்ந்திருக்கும்? அதை கண்காணிப்பது எப்படி? அடுத்த பதிவில் சொல்கிறேன்.’’
தொடர்புடைய பதிவுகள்
தங்கம், ரியல் எஸ்டேட்டைவிட அதிக வருமானம் தரும் மியூச்சுவல் ஃபண்ட்!
மியூச்சுவல் ஃபண்டில் ஏன்
முதலீடு செய்ய வேண்டும்?
நிதி ஆலோசகர் பி. பத்மநாபனைத் தொடர்பு கொள்ள
தொலைபேசி எண் 98843 49173
நன்றி… தொடர்கிறேன்.