சமையல், சீசன் சமையல், சைவ சமையல், நீங்களும் செய்யலாம், மோர்க்குழம்பு

அவசரமா மோர்க்குழம்பு செய்வது எப்படி?

ருசி -7

காமாட்சி
காமாட்சி

திடீர் என்று ஒரு மோர்க் குழம்பு செய்.ய வேண்டும். ருசியாகவும் இருக்கவேண்டும்.. கறிகாய்களுமில்லை. மோர்க்குழம்பில் வெங்காயம் சேர்த்துப் பழக்கமில்லை. யோசித்துக்கொண்டே இருப்பதைக் கொண்டு ஒரு ருசியான மோர்க்குழம்பு செய்துவிட்டேன். வட இந்தியாவில் செய்யும் கடி  என்ற மோர்க் குழம்பு டைப்பில்லை. ஆனாலும்  அதன் சாயல்தான்.  எல்லாம் சுலபம்தான். ருசித்து எழுதவும்.
வேண்டியதெல்லாம்
1. தயிர்-2 கப் (லேசான புளிப்புள்ளது)

அரைப்பதற்கு வேண்டியது
2. பச்சைமிளகாய்-3
3. தனியா-1 டீஸ்பூன்
4. கடலைப்பருப்பு-2 அல்லது 3 டீஸ்பூன்
5. சீரகம் – அரை டீஸ்பூன்
6 . இஞ்சி – சிறுதுண்டு
7. தேங்காய்த் துருவல் – 2 டேபி ள்ஸ்பூன் அல்லது 1 கரண்டி
8. தாளித்துக் கொட்ட
கடுகு,பெருங்காயம் – சிறிது
வத்தல் மிளகாய் -1
9. ருசிக்கு – உப்பு
10. மஞ்சள் பொடி – துளி
11. கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை

மோர்க் குழம்பில் போட வெங்காய மெது பக்கோடாக்கள் செய்வதற்கு
வேண்டியவை
1. கடலைமாவு – 4 டேபிள்ஸ்பூன்
2. பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1 டேபிள் ஸ்பூன்
3. பொடியாக நறுக்கிய கேப்ஸிகம் – 1 டேபிள் ஸ்பூன்
4. கொத்தமல்லித் தழை நறுக்கியது – சிறிது.
5. பொரிக்க எண்ணெய்.
குழம்பிற்கான பருப்பு, தனியா, சீரகம் இவற்றை முதலிலேயே சுத்தம் செய்து தண்ணீரில் ஊற வைக்கவும்.. பச்சைமிளகாய், தேங்காய், இஞ்சி சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைத்துக் கொள்ளவும். தயிரைக் கடைந்து வைத்துக் கொள்ளவும்.
அரைத்த விழுதில் அரை கப் தண்ணீர் சேர்த்துக் கரைத்து அதில் கலக்கவும். உப்பு, மஞ்சள் சேர்க்கவும்.. பகோடா செய்ய கடலைமாவில் வெங்காயம், கேப்ஸிகம் சேர்த்து தளர தண்ணீர் விட்டுக் கலக்கவும்.  துளி உப்பு போதும். வாணலியில் எண்ணெயைக் காய வைத்து  கலந்த மாவை பக்கோடாக்களாகப் பொரித்து எடுக்கவும்.. ஒரே அளவாக இருக்கட்டும்.
குழம்புப் பாத்திரத்தில் மோர்க் கலவையைக் கொட்டி நிதான தீயில் வைக்கவும். பக்கோடாக்களையும் சேர்க்கவும். ஒரு கொதி வரும்போதே இன்னும் தீயைக் குறைத்து  சிறிது நேரம் வைத்து இறக்கி கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை சேர்த்து, கடுகு, மிளகாய், பெருங்காயம் தாளித்துக் கொட்டி மூடி வைத்து உபயோகிக்கவும். வெங்காய வாசனையுடனான மோர்க்குழம்பு கூடவே மிருதுவான பக்கோடா.

P1020628

சமையல் பின் குறிப்பு: மிருதுவான பக்கோடாக்கள் தயாரிக்கவே மாவில் தண்ணீர் அதிகம் சேர்ப்பது. காரம் அதிகம் வேண்டியவர்கள் மிளகாய் அதிகப்படுத்தவும். இந்த மோர்க்குழம்பை எதனுடன் சாப்பிட விரும்புகிறீர்களோ அதனுடன் சாப்பிடவும்.

தொடர்புடைய பதிவுகள்

நிமிடங்களில் சாம்பார் பொடி

தயாரிப்பது எப்படி?

கமகம சாம்பார் செய்வது எப்படி?

இன்ஸ்டன்ட் ரசப்பொடி தயாரிப்பது எப்படி?

வெயில்கால கடுமையைக் குறைக்கும் வாழைத்தண்டு மோர்க்கூட்டு!

எழுத்தாளரின் வலைப்பூ http://chollukireen.wordpress.com/

“அவசரமா மோர்க்குழம்பு செய்வது எப்படி?” இல் 18 கருத்துகள் உள்ளன

  1. கேள்விப் படாத குழம்பு!
    வெறும் வடைகள் பண்ணி சேர்ப்பேன். இது நிஜமாகவே புதிது.
    போட்டோ உடனே பண்ணு என்கிறது. பண்ணிவிட வேண்டியதுதான்.
    அங்கே கதம்பக் கறி, இங்கே அவசர மோர்க் குழம்பு – இரண்டும் சேர்ந்து செய்தால் நல்ல காம்பினேஷன் ஆக இருக்கும்போல இருக்கே!

    பாராட்டுகள்!

    1. அங்கேயும்,இங்கேயுமாக அமைந்தது தானாகவே. நானும் யோசித்தேன். காம்பினேஷன்கூட நன்றாக அமைந்திருக்கிரது.
      இது செய்து பாருங்கள். நான் அடிக்கடி செய்வேன். இதுவும் பண்ணி போட்டோ எடுத்துதான் அனுப்பினேன். போட்டோ கூட ஏதோ வந்ததை எடுத்து போட்டு விடுகிறேன். சமைத்ததையும்
      அங்கேயே எடுத்து விடுகிறேன். மெனக்கிட முடிவதில்லை.
      நினைத்தால் செய்து விடவேண்டும். அது இப்படிதானிருக்கும்.
      இருந்தாலும், பாராட்டுக்கு நன்றி. அன்புடன்

    1. செய்து பார்த்துவிட்டு ருசி எப்படி என்று சொல்கிறேன்.. நான் கார்த்துக் கொண்டு இருப்பேன்.. உங்கள் பதிலுக்கு. அன்புடன்

  2. சூப்பர் மோர் குழம்பு, அம்மா !போட்டோவும் சூப்பரோ சூப்பர்! சும்மா கலக்குறீங்க போங்க 🙂 பக்கோடாவும், மோர் குழம்பும் காம்பினேசன் ஆஹா,ஓஹோ!

    1. நீயும் மோர்க்குழம்பைச் செய்து கலக்கு. போட்டோ பிடிச்சிருக்கா?
      அப்போ குழம்பும் பிடிக்கும். அன்புடன்

  3. காமாக்ஷிமா,

    மோர்குழம்பில் மெதுபகோடா!புதுசா இருக்கு.பகோடா செய்யும்போது கண்டிப்பாக இந்தக்குழம்பை செய்து பார்க்க வேண்டும்.

    எல்லா இடங்களிலும் கலக்கறீங்கம்மா.எங்களுக்கும் நிறைய குறிப்புகள் கிடைக்கின்றன.நன்றிமா.

    1. அப்படியா?உனக்கெல்லாம் செய்ய வொன்றும் கஷ்டமில்லையம்மா. மோர்க்குழம்பில், வடை,பருப்புருண்டை,வற்றல்கள்,கருவடாம்போல, இந்தப் பகோடாக்களை துனுஸு தினுஸாகப் போடலாம். வேறு பருப்புகளை ,ஊரவைத்து அரைத்தும் செய்யலாம். உதாரணம்
      பயத்தம்பருப்பு,, மற்றும் எல்லாம் கீரை வகைகள்
      சேர்த்தும் செய்யலாம். 4 டேபில் ஸ்பூன் கடலைமாவில் ,பத்து பகோடாக்கள் தேறும். இந்தக் குழம்பு அளவிற்கு இது போதும்.
      என் பெண்கள் என்னைப் பாராட்டாது என் செய்வீர்கள்?நன்றி. அன்புடன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.