
ருசி – 5
வேண்டியவைகள்
பழுத்த தக்காளிப்பழம் – பெரியதாக 3
புளி – சிறிய அளவில்
ரஸப் பொடி – 2 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கு
பூண்டு – 4 பல்லு
பெருங்காயம் – விருப்பத்திற்கிணங்க
துவரம் பருப்பு -கால் கப்
மஞ்சள் பொடி – சிறிது
நெய் – ஒரு டீஸ்பூன்
கடுகு – அரை டீஸ்பூன்.
வாசனைக்கு, பச்சைக் கொத்தமல்லி, கறிவேப்பிலை.
செய்முறை
தக்காளியை நறுக்கி 4,5 நிமிஷங்கள் வேக வைத்துக் கொள்ளவும். துவரம்பருப்பை தண்ணீர் விட்டுக் களைந்து, திட்டமாக ஜலம் வைத்து ப்ரஷர் குக்கரில் ஸப்ரேட்டரில் வைத்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். புளியை தக்காளியுடன் சேர்த்து ஊற வைக்கவும். மைக்ரோவேவ் இருப்பின் அதில் தக்காளியை ஹை பவரில் வேக வைத்துக் கொள்ளலாம். ஆறியபின் தண்ணீர் விட்டுக் கரைத்து,புளி சேர்த்து சக்கை நீக்கி சாறு எடுக்கவும். இந்தச் சாற்றுடன், 2 டீஸ்பூன் ரசப்பொடி, திட்டமான உப்பு, நன்றாக நசுக்கி விழுதான பூண்டு இவைகளைச் சேர்த்து, மிதமான தீயில் நன்றாகக் கொதிக்க விடவும்.
பொடி வாசனை போய் ரசம் சிறிது சுண்டியவுடன் பருப்பைத் தண்ணீர் விட்டுக் கரைத்து கொதிக்கும்,கலவையில் சேர்க்கவும். ரசம் நுரைத்துப் பொங்கியவுடனே இறக்கி நெய்யில் கடுகு, பெருங்காயத்தைத் தாளித்துக் கொட்டி, சுத்தம் செய்த கொத்தமல்லி, கறி வேப்பிலையைச் சேர்க்கவும்., இதுவும், 4 கப்பிற்கு அதிகமாகவே வரும். தெளிவாக ரசம் வேண்டுமென்றால் பருப்பைக் கரைத்து பிழிந்துவிட்டு விடவும். பருப்புச் சக்கையை வேறு ஏதாவதில் சேர்த்து விடலாம். சிவப்பு டொமேடோ ரசம் என்ன கலராக இருக்கிறது பாருங்கள். ருசியும்தான்.
பொடியைக் குறைத்துப் போட்டு ஒரு மிளகாயை முழுதாக தாளிப்பில் போடலாம். காரம் அதிகமாக்க பொடியையும் அதிகரிக்கலாம்.
ருசியுங்கள்!
தொடர்புடைய பதிவுகள்
தக்காளி ரசம் நான்தான் முதலில் ருசி பார்த்தது!
இங்கிருக்கும் என் தோழி ஒருத்தி தக்காளியை நறுக்கிப் போட்டால் குழந்தைகள் எடுத்து எடுத்து வைத்துவிடுகிறார்கள் என்று அதை அரைத்து (கொத்துமல்லி, இஞ்சியுடன் சேர்த்து) விடுவாள். இதுவும் கிட்டத்தட்ட அப்படித்தான் இருக்கிறது, இல்லையா?
அசத்தல் தக்காளி ரசத்திற்கு பாராட்டுக்கள்!
ரஞ்ஜனி இந்தப்பதிவையே இப்போதுதான் பார்த்தேன். அதுவும் நோம்பு பலகாரம் பண்ணின பிறகு. என்னுடைய எல்லா பிராஞ்ஜிலும் வெகு காலமாகவே இந்த வேகவைத்துப் பிழியும்
கலாசாரம் அமுலுக்கு வந்து விட்டது. மைக்ரோவேவ் உபயோகத்தின் சுருக்குவழி. ரஸம்,கலருடன் ருசியாகவும் இருக்கு. எந்த ரஸம் செய்தாலும் ஸரி. இந்த மாதிரி ரஸத்தில்
காப்ஸிகமும்,2,3 துண்டு கொதிக்கும் போதே சேர்த்தால் வாஸனை//யாக இருக்கும். நீள கதையா?. இல்லை.ஸமயம் வரும்போது இப்படிதான் எழுதிவிடுகிறேன். ருசியான பின்னூட்டம், ருசிக்க வைத்தது. அன்புடன்
ருசிக்கும் தக்காளி ரசத்திற்கு பாராட்டுக்கள்!
பாராட்டுகளை விரும்பாதவர்கள் உண்டா? உங்கள் பாராட்டுகள் .யோசனை செய்ய வைக்கிரது.. இன்னும் நன்ராக எழுத வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டுகிரது. நன்றி மிகவும். அன்புடன்
தக்காளி ரசம் சூப்பர்.
ரஞ்சனி மேடம் சொல்லியிருக்க மாதிரி தக்காளியை அரைத்து பண்ணினால் தான் குழ்ந்தைகள் சாப்பிடுகிறார்கள்.
அரைத்து செய்வதுபோல் ,இது கரைத்து செய்வது. சக்கை எடுத்து விடுவதால்
ருசியும்,கலரும் ஒத்தாற்போல ஒரே மாதிறி இருக்கும் என்பது என் யோசனை.. குழந்தைகள் விருப்பத்திற்கு முதலிடம் கொடுக்க வேண்டும்.. நன்றியுடனும் அன்புடனும்
காமாக்ஷிமா,
உங்க வீட்டு ரசமா!சூப்பரா இருக்கு.பார்த்ததுமே தக்காளி ரசம் என்பது புரிந்துவிடுகிறது.நாங்க செய்யும் கிள்ளிப்போட்ட சாம்பார்/முழுமிளகாய் சாம்பார் ஏறக்குறைய உங்க தக்காளி ரசம் மாதிரியேதான் இருக்கும்.
இங்கேயும்,உங்க ப்ளாக்கிலும் கலக்குறீங்க.தொடருங்கள் அம்மா.அன்புடன் சித்ரா.
சித்ரா எங்கவீட்டு என்னோட ரஸம் தான்.. இங்கு காலையில்
கையில் எடுத்துப் போவதற்காக ரொட்டி வகையராக்கள்.செய்வதற்கு
நான் போவதில்லை. இரவு உணவு பருப்பு வேகவைத்து ரஸமும்
கறியும்தான்.. வாலண்டியரா செய்யறத்துக்குப் போய் விடுகிறேன். ஏதோ செய்தால்தான் மனதுக்குத் திருப்தி ஏற்படுகிரது. எல்லாம் உன்னைப் போன்ற என் பெண்களின் ஆதரவுதான. உன்னுடைய கிள்ளிப்போட்ட ஸாம்பார் ஜாடையாக
இருக்கிரது என்னுடைய தக்காளி ரஸம்.. எல்லாம் பேரன், பேத்ததிகள். ஜாடை இருக்கத்தான் செய்யும். ரஸித்தேன். அன்புடன்
ரசம் பிடிக்காதவர்கள் இருக்கமுடியாது ஜுரம் வந்த நாக்கிற்கு ரசத்தைவிட சிறந்த உணவு இருக்க முடியாது உங்கள் தக்காளி ரசம் சூப்பர் மாமி னீங்கள் எழுதி ஜமாயுங்கள் நாங்கள் செய்து பார்த்து ஜமாய்க்கிரோம்
எழுதி ஜமாய்க்கிரதை விட, செய்துபார்த்து ஜமாய்க்கிறேன் என்று சொன்னீர்களே அது மிகவும் பிடித்திருக்கிரது.
பிரமாதமா சொல்லிடலாம். செய்து பார்த்தால்தானே தெரியும்
என்ற சொல் வழக்கு இருக்கிரது.
ஜமாயுங்கோ!!!!!!!நானும் வருகிறேன். அன்புடன்
ஆஹா! காமாட்சிம்மா, இங்கும் குறிப்புகள் கொடுக்கறீங்களா? இப்பத்தானே பார்க்கிறேன்!
படம் சூப்பரா இருக்கும்மா..ரசத்தின் படம் மட்டுமில்ல, உங்க படத்தையும் சேர்த்துத்தான் சொல்றேன். 🙂
ரசம் அருமை, நானும் கிட்டத்தட்ட இதே போலதான் செய்வேன். காப்ஸிகம் சேர்க்கறது புதுசா இருக்கு. டிப்ஸுக்கு நன்றிம்மா!
ஓஹோ!!!!!!!!!!!! மஹி உன்னை, உன் பின்னூட்டத்தைப் பார்க்க மிகவும் ஆனந்தமாக இருக்கு. ரஸத்துடன் காமாட்சிமாவையும் ரஸித்துப் பார்த்திருப்பதை உன் பின்னூட்டம் சொல்கிரது. ரஸம் அருமை. இம்மாதிரி வார்த்தைகள் சொன்னவர்கள் அனைவரும் அருமை எனக்கு. என்னை அம்மா என்று அழைக்கும் பெண்கள் இங்கு வந்து ரஸிப்பதும் மிகவும் பெருமை. இனி இங்கும் அடிக்கடி ஸந்திக்கலாம் என்பதில் மிக ஸந்தோஷம்.
காப்ஸிகம் சேர்த்து ஒரு நாள் செய்து பார். நன்றியும்,அன்புடனும்