இன்ஷூரன்ஸ், சேமிப்பு, நிதி ஆலோசனை, நிதி நிர்வாகம், நிதி மற்றும் காப்பீட்டு ஆலோசகர் பி. பத்மநாபன், மருத்துவ செலவு, ஹெல்த் இன்ஷூரன்ஸ்

ஹெல்த் இன்ஷூரன்ஸ் ஏன் அவசியம்?

பி. பத்மநாபன்
பி. பத்மநாபன்

நாள்பட்ட வியாதிகள் உள்ளவர்கள்தான் ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுக்க வேண்டும் என்று நம்மில் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறோம். எதிர்பாராதவிதமாக டெங்கு காய்ச்சல் வந்தவர்களுக்குக்கூட ஹெல்த் இன்ஷூரன்ஸ் கைகொடுக்கும் என்பதே நிதர்சன உண்மை. ஹெல்த் இன்ஷூரன்ஸில் வேறு என்னென்ன நன்மைகள் இருக்கிறது? சொல்கிறார் நிதி மற்றும் காப்பீட்டு ஆலோசகர் பி. பத்மநாபன்.
‘‘6 மாத குழந்தை முதல் 80 வயதைத் தொட்ட பாட்டி வரை எல்லோருக்கும் அவசியமாக ஹெல்த் இன்ஸ்சூரன்ஸ் தேவை. ஏனென்றால் இப்போதைய வாழ்க்கை முறையில் நாம் நோய்களின் கூடாரமாகிவிட்டோம். சரியான பழக்கவழக்கங்கள் கிடையாது, சரியான தூக்கம் கிடையாது, சரிவிகித உணவை சாப்பிடறது இல்லை. நாமாக இதைத் தெரிந்து செய்வதில்லை என்றாலும், நம்முடைய மாறிவரும் வாழ்க்கைச் சூழல் தவறான பழக்கங்களுக்கு இட்டுச் செல்கிறது. அதனால் நோய்கள் நம்மைத் தேடி வருவது தவிர்க்க முடியாததாகிறது. 30 வயதுகளிலே சர்க்கரை நோய் வருகிறது, குழந்தைகளையும் கேன்சர் தாக்குகிறது! இதுக்கு ஈடுதருவதுபோல மருத்துவ செலவுகளும் இங்கே அதிகம். லேசாக காலிலோ, கையிலோ அடிபட்டு 10 நாட்கள் ஹாஸ்பிடலில் இருந்தாலே ரூ. 40 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் செலவழிக்க வேண்டியிருக்கும். இந்த நிலையில்தான் ஹெல்த் இன்ஷூரன்ஸ் அவசியமாகத் தேவைப்படுகிறது. ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுத்திருந்தால் இந்த செலவுகளை இன்ஷூரன்ஸ் நிறுவனமே ஏற்றிருக்கும்.
ஹெல்த் இன்ஷூரன்சுக்கு எளிமையான உதாரணம் இது… கோயிலுக்கு சாமி கும்பிட காஸ்ட்லியான செருப்பு அணிந்து செல்கிறீர்கள். கோயிலுக்கு வருபவர்களின் செருப்புகளை பாதுகாப்பதற்கென்றிருக்கும் நபரிடம் ரெண்டு ரூபாய் கொடுத்து டோக்கன் வாங்கி செருப்புகளை கழற்றிவிடுகிறீர்கள். நிம்மதியாக இறைவனை தரிசனம் செய்துவிட்டு திரும்பும்போது டோக்கனை கொடுத்து உங்கள் காஸ்ட்லியான செருப்புகளை பாதுகாவலரிடமிருந்து வாங்கி அணிந்துகொள்கிறீர்கள். ‘பாதுகாப்பு’ என்கிற நிம்மதியைத் தருவதுதான் இன்ஷூரன்ஸ்!
இதுவே, ரெண்டு ரூபாயை மிச்சம் பிடிக்க கேட்பாரில்லாத இடத்தில் செருப்புகளை விட்டால், அது அங்கேயே இருக்குமா? என்பதற்கு எந்த உறுதியும் இல்லை. ‘ஐயோ என் செருப்பை யாராவது திருடிக் கொள்வார்களோ?’ என்கிற நிம்மதியின்மையோடுதான் நீங்கள் இறைவனை தரிசிக்க வேண்டியிருக்கும். செருப்பு காணாமல் போய்விட்டால் உங்களுடைய மனஉளைச்சலும் இழப்பும் அதிகமாகிவிடும். இதைப் போக்கத்தான் இன்ஷூரன்ஸ் தேவை என்கிறோம்!
ஹெல்த் இன்ஷூரன்ஸைப் பொறுத்தவரை முன்பு நிறைய கன்டீஷன்கள் இருந்தது. இப்போது தேவைக்கு ஏற்ப, வயதிற்கு ஏற்ப ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுக்க முடியும். ஹெல்த் இன்ஷூரன்ஸில் தனிநபர் பாலிசிகளைவிட, குரூப் பாலிசி மற்றும் ஃபேமிலி ஃபுளோட்டர் பாலிசிகள் பிரபலமானவை. குரூப் பாலிசிகளை அலுவலங்களில் வேலை பார்ப்பவர்களுக்கு அலுவலகமே எடுத்துத்தரும். வேலையின் தன்மையைப் பொறுத்து ரூ. 3 லட்சத்துக்கோ ரூ. 5 லட்சத்துக்கோ பாலிசிகளை எடுப்பார்கள்.

குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் சேர்த்து எடுப்பது ஃபேமிலி ஃப்ளோட்டர் பாலிசி! கணவன், மனைவி, இரண்டு குழந்தைகள், 45 வயதுக்கு உட்பட்ட அப்பா, அம்மா, மாமனார், மாமியாரை இதில் சேர்த்துக்கொள்ளலாம். இதில் நிறைய நன்மைகள் இருக்கிறது. தனித்தனியாக பாலிசி எடுக்கும்போது, எவ்வளவு தொகைக்கு பாலிசி எடுத்திருக்கிறீர்களோ அந்த தொகைக்கு மட்டும்தான் கிளைம் கேட்க முடியும். உதாரணத்துக்கு உங்களுக்கு ஏதேனும் மருத்துவச் செலவுகள் ஏற்பட்டு உங்கள் பாலிசி தொகையை விட கூடுதலாக பணம் செலவழித்திருந்தால், பாலிசி தொகையை மட்டும்தான் இன்ஷூரன்ஸ் நிறுவனம் தரும். உங்கள் கணவர் தனியான ஒரு பாலிசி எடுத்திருந்து மருத்துவச் செலவு எதுவும் வராமல் பல வருடங்கள் அப்படியே இருந்தால்கூட அந்தத் தொகைக்கு நீங்கள் க்ளைம் கோர முடியாது.
இதுவே கணவன், மனைவி, ஒரு குழந்தை மூன்று பேரையும் சேர்த்து தலா ரூ. 1 லட்சமாக ரூ. 3 லட்சத்துக்கு ஃபேமிலி ஃப்ளோட்டர் பாலிசி எடுத்தால் ஒரு வேளை மருத்துவ செலவுகளுக்காக மூன்று பேரில் யாருக்கு அதிக தொகை தேவைப்படுகிறதோ அவர் மற்ற இருவரின் தொகையையும் பயன்படுத்திக்கொள்ள முடியும்’’

Advertisements

“ஹெல்த் இன்ஷூரன்ஸ் ஏன் அவசியம்?” இல் 2 கருத்துகள் உள்ளன

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.