சமையல், சாம்பார் செய்வது எப்படி?, சாம்பார் பொடி, செய்து பாருங்கள், நீங்களும் செய்யலாம், பாரம்பரிய ரெசிபி, ருசியுங்கள்

சாம்பாருக்கு எந்த காய் சிறந்தது?

சென்ற வாரம் சாம்பார் பொடி செய்யச் சொல்லித் தந்தேன். சாம்பார் பொடி செய்து
விட்டு இதை எழுதாது விடலாமா? சாம்பாருக்கு எந்த காய்கள் சிறந்தது என்று சொல்கிறேன்.

காமாட்சி
காமாட்சி

1. வெந்தயக்கீரையும் அவரைக்காயும்.
2. கேரட், கேப்ஸிகம், தக்காளிப்பழம்
3. முள்ளங்கி, வெங்காயம்.
4. முருங்கை, வெங்காயம், முருங்கை தனியாகவும் சேர்த்தும் சமைக்கலாம்
5. வெண்டை, தக்காளி, கேப்ஸிகம், பச்சைமிளகாய்
6. பாலக்கீரை, வெங்காயம்
7. பறங்கிக்காய், பச்சைமிளகாய்
8. பூசணி, கத்தரிக்காய், பச்சை மிளகாய்
9. சுரைக்காய்
10. சேனை அல்லது சேப்பங்கிழங்கு
11. கத்தரிக்காய்
12. அவரைக்காய்
13. நூல்கோல், வெங்காயம்
14. பச்சை சுண்டைக்காய்
15. சௌசௌ
16. எல்லாவற்றையும்விட  சாம்பார் வெங்காயம்.
17. உருளைக்கிழங்கு, காலிஃப்ளவர், பச்சைபட்டாணி.
18. பாகற்காய்
10. எல்லா காய்களுமோ, சிலதோ சேர்த்தும் செய்யலாம்.
20. இளம் கீரைகள்

சாம்பொர் பொடி வைத்து சாம்பார் செய்வது எப்படி?

sambar

சாதரணமாக பொடிபோட்டுச் செய்யும் சாம்பார்களுக்கு பருப்பு கூடுதலாகப் போடவேண்டும். சாம்பாருக்கேற்ற துவரம் பருப்புதான். பருப்பை ஒரு கப்பாக எடுத்துக் கொள்வோம். அலம்பித் தண்ணீர், மஞ்சள்பொடி சேர்த்து குக்கரில் வேகவைப்போம். பொடி போட்டு சாம்பாரும் செய்வோம்.
புளி- ஒரு சின்ன எலுமிச்சையளவு ஊற வைப்போம். எந்த காய் உங்களுக்கு இஷ்டமோ சுத்தம் செய்து நறுக்கவும். புளியைக் கரைத்து சாறெடுக்கவும். குழம்புப் பாத்திரத்தில் எண்ணெய் விட்டு,  கடுகு, மிளகாய், பெருங்காயம் தாளித்துக் கொட்டவும். இதில் காயையும் தக்காளியையும் சேர்த்து வதக்கி புளி சாறை சேர்க்கவும். அடுத்ததாக உப்பு, 3 டீஸ்பூன் சாம்பார் பொடி சேர்த்து கொதிக்க விடவும். காய் வெந்து, பொடி வாசனை குறைந்த பின் வெந்த பருப்பை சற்று கரைத்தமாதிரி சேர்க்கவும். நன்கு கொதித்தபின் வேண்டுமானால் ஒரு ஸ்பூன் அரிசிமாவைக் கரைத்து சேர்த்துக் கொதிக்கவைத்து இறக்கவும். சாம்பார் சற்று சேர்ந்தார்ப்போல வரும்.. தக்காளி, பச்சைமிளகாய் எல்லாவற்றிலும் ருசியைக் கொடுக்கும்.. எல்லா சாம்பாரிலுமே வெங்காய ருசி அவசியமென்றால் வதக்கும் போது சேர்த்துக் கொள்ளலாம்.

P1010768

இன்னொரு முறை

புளி ஜலத்தைக் கொதிக்க வைத்து காயைச் சேர்த்து கொதிக்கும் போதே உப்பு, சாம்பார் பொடி சேர்த்து கொதிக்க வைத்து, வெந்த பருப்பைக் கரைத்து சேர்த்து கடைசியில் தாளிதத்தை வறுத்து சேர்த்து அவசியமானால் மாவு கரைசலும் சேர்த்து இறக்குவது. கொத்தமல்லி, கறிவேப்பிலை போட மறக்க வேண்டாம் ஜம்மென்று வாசனை தூக்கும். வெங்காயம் வதக்கி சேர்ப்பது, வெண்டைக்காயும் நன்றாக வதக்கித்தான் போட வேண்டும்.. இதுவும் ஒரு முறை காய்களை சிறிது தண்ணீரில்  ஒரு 4, 5 நிமிஷங்கள் வேக வைத்து விட்டு அதனுடன் புளித் தண்ணீர், சாம்பார் பொடி, உப்பு சேர்த்துக் கொதிக்க வைத்து, வெந்த பருப்பைச்  சேர்த்து,  தாளித்து இறக்குவது.

சாம்பார் சிறப்பாக அமைய சில குறிப்புகள்!

பூசணிக்காய், சௌசௌ, நூல்கோல் இவையெல்லாம் நீரோட்டமுடைய காய்கள்.  சாம்பார் நீர்க்காமலிருக்க  கடைசியில்  மாவு சேர்க்கச் சொல்லியுள்ளேன். வேக நேரமெடுக்கும் காய்களுக்கு இந்த முறை சிறந்தது. சேப்பங்கிழங்கை. வேகவைத்து உரித்துச் சேர்க்க வேண்டும். சேனையை தோல் சீவி நறுக்கி வேக வைத்துச் சேர்க்க வேண்டும். பொடியின் காரத்திற்குத் தகுந்தாற்போல் தாளிக்கும் மிளகாயின் அளவையும்  கூட்டிக் குறைக்கவும்..
குறைந்த அளவில்  வருத்து மிக்ஸியில் பொடி செய்து பொடி தயாரித்தால் சாம்பார் ருசியாகவே இருக்கும். புதுப்புளி, நல்ல சிகப்பு மிளகாய், மஞ்சள்பொடி, டொமேடோ இவைகளெல்லாம் சாம்பாருக்கு நல்ல கலரைக் கொடுக்கும். சாம்பாரை மிகவும் கெட்டியாக வைக்காதீர்கள். அதேபோல சாம்பாருக்கு மாவு கரைத்து விடுவது கட்டாயமில்லை.  கேஸை பெரியதாக வைத்து சமைப்பது,  வறுக்கும் சாமான்களை அதிகம் கருக விடுவது, இதெல்லாம் சாம்பாரின் ருசியைக் குறைத்து விடும். கிள்ளு சாம்பார் என்று சொல்லுவது சாம்பார் பொடிக்குப் பதில் நிறைய காரத்திற்கு வற்றல் மிளகாய், பெருங்காயம், வெந்தயம் முதலியவற்றை தாளித்துக் கொட்டி, மற்றவை மாமூலாக செய்வதுபோல என்று சொல்லக் கேட்டிருக்கிறேன்..

P1020175

மெஷின்கள் வராத கால கட்டத்தில் சாமான்யர்கள் ஒரு குறிப்பிட்ட அளவு காசைக் குறிப்பிட்ட கடையில் கொடுத்து செலவு சாமான் வாங்குவார்கள். எல்லா சாமான்களையும் அள்ளிப்போட்டு கொடுப்பார்கள். அதை அப்படியே அரைத்துக் குழம்புக்கு போடுவார்கள். சாந்து கூட்டி முருங்கைக்கைக்காய் கொழம்பு என்பார்கள்.
போதுமா பொடியும், சாம்பாரும்?

தொடர்புடைய பதிவுகள்
கமகம சாம்பார் செய்வது எப்படி?

“சாம்பாருக்கு எந்த காய் சிறந்தது?” இல் 12 கருத்துகள் உள்ளன

 1. கீரை, துவரம்பருப்பு, சிறிது பயத்தம்பருப்பு (கீரை நன்றாக சேர்ந்தாற்போல வரும்) சேர்த்து வேக வைத்து செய்யும் குழம்பை புளிக்கீரை என்போம், இல்லையா? சிலர் இதனை கீரை மசியல் என்றும் சொல்வார்கள்.

  அதற்கு நீங்கள் சொல்லியிருப்பது போல பொடி போடாமல் நிறைய காய்ந்த மிளகாய், பெருங்காயம், மெந்தியம், கொஞ்சம் துவரம்பருப்பு, கடலைப்பருப்பு கடுகு ஆகியவற்றை தாளிப்பது எங்கள் வீட்டுப் பழக்கம்.

  சாம்பார் சிறப்பாக அமைய நீங்கள் கொடுத்திருக்கும் குறிப்புகள் அருமை!

  பாராட்டுக்கள்!

  1. புளியிட்ட கீரைன்னும் சொல்வது வழக்கம். சற்று முற்றின கீரையாக இருந்தால் வெல்லம் சேர்த்து பச்சடி மாதிரியும் செய்வார்கள். கீரை மசியல் பருப்பெல்லாம் போடாமல்
   நல்ல முளைக் கீரையில் தாளித்துக் கொட்டிச் செய்வது.
   உங்கள் பாராட்டுகளுக்கு நன்றி.

  1. ரொம்ப ஸரி. காய் வாஸனையுடன், சாதம் இன்னும் கொஞ்சம் சாப்பிடணும் என்று தோன்றும்., அதுவும் கிராமங்களில் கிடைக்கும் அப்பொழுதே பறித்த முருங்கைக்காய். நன்றி

 2. ஆஹா ஏமி ருசி என்று தெலுங்கிலேயே சொன்னால் ரொம்ப நன்றாக இருக்கும் என்று தோன்றியது தமிழர்களூக்கு சாம்பாரை விட பிரியமானது உண்டோ?

 3. ஏமிருசிரா, எந்த ருசிரா, என்று பாடினால்ப் போயிற்று. ஒரு முழு உணவு ஆகி விடுகிறது, அதன் சேர்மானங்கள். ஸாம்பார் பன்னாட்டு ஃபேமஸ் ஆகிவிட்டது.

 4. கலக்கிதானே பரிமாரணும். ஒவ்வொரு காய் மாற்றிச் செய்யும் போது,ஸாம்பார், காயின் வாஸனைகளைப் பொறுத்து ருசிமாறும்.. நன்றி
  மஹாலக்ஷ்மி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.