
சென்ற வாரம் அரைத்து விட்ட கமகம சாம்பார் செய்வது எப்படி என்ற பதிவுக்கு எக்கச்சக்க ரெஸ்பான்ஸ்! எல்லோருக்கும் கமகம சாம்பார் ரொம்பவே பிடித்திருந்தது. ஆனால் இன்றைக்கு இருக்கக்கூடிய வேகமான லைஃப் ஸ்டைலில் ஒவ்வொரு முறை சாம்பார் தயாரிக்கும்போதும் அரைத்துவிட்டு செய்வது இயலாத காரியம். கவலையே பட வேண்டாம் சாம்பார் பொடி செய்யவும் கற்றுத் தருகிறேன் என்கிறார் சமையல் கைதேர்ந்த காமாட்சி.
ருசி 2
சாம்பார் பொடி
தேவையானவை
1.மிளகாய் வற்றல் – கால்கிலோ
2.தனியா -அரைகிலோ
3.கருமஞ்சள் – 100கிராம்
4.கடலைப் பருப்பு – 200 கிராம்
5.துவரம்பருப்பு – 200 கிராம்
6.மிளகு – 100 கிராம்
7.வெந்தயம் – 100கிராம்
8.கடுகு – 50 கிராம்
9.காய்ந்த கறிவேப்பிலை
10.உளுத்தம் பருப்பு – அவசியமில்லை. சிலர் சிறிது போடுவார்கள்
செய்முறை. நல்ல வேனிற்காலமானால் சாமான்கள் எல்லாவற்றையும் வெய்யிலில் நன்றாகச் சுத்தம் செய்து காயவைத்து, அரவை மெஷினில் கொடுத்து, இரண்டுமுறை அரைத்ததைப் திருப்பிப் போட்டு அரைத்து, உடனே ஒரு பேப்பரில் கொட்டி ஆற வைத்து காற்றுப் புகாத டப்பாக்களிலோ, சீஸாக்களிலோ எடுத்து வைத்தால் மாதக்கணக்கில் கெட்டுப் போகாமலிருக்கும்.. வெயில் குறைவாக இருந்தால் எல்லாவற்றையும் லேசாக வறுத்துக் கொடுத்து மெஷினில் அரைக்கலாம். சிறிய அளவில் செய்வதானால், சற்று வறுத்து மிக்ஸியில் பொடி செய்து கொள்ளலாம். மைக்ரோவேவில் வறுப்பது மிகவும் சுலபமாக இருக்கிறது.


சாம்பார் பொடிக்கு, சீரகமும் பெருஞ்சீரகமும், வாசனை பிடித்தவர்கள் சேர்த்து அரைப்பதுண்டு. பொடி காரமாக வேண்டுபவர்கள் தனியாவை குறைத்துச் சேர்க்கலாம். அரைத்து விடும் சாம்பாருக்கு மசாலாவில் துவரம்பருப்பு வறுப்பதில் சேர்ப்பதில்லை.. காய்கறிகள் சிலது சேர்த்து சாம்பார் செய்தால் ருசி நன்றாக அமையும்.
அவரவர்களுக்கான டேஸ்ட் வேறு. இருப்பினும் சாம்பார் பொடி செய்து விட்டு, அதை எப்படி உபயோகித்து சாம்பார் செய்வது என்று சொல்லாமல் விடலாமா?
சாம்பார் பொடி அரைத்து வையுங்கள். அடுத்த வாரம் வருகிறேன்.
தொடர்புடைய பதிவுகள்
கமகம சாம்பார் செய்வது எப்படி?
“குறித்து வைத்துக் கொள்” என்று துணைவியிடம் கூறினால், பதில் : “நான் முன்பே பார்த்து குறித்து வைத்து விட்டேன்”
கருத்துரை இடுவது மட்டும் தான் என் வேலை…! நன்றி…
எனக்கு முன்னே நீங்கள் வந்து விட்டீர்கள். எவ்வளவு ஸந்தோஷம் தெரியுமா? முன்னணி இடுகைகளைப் பார்த்து,தளத்திற்கு வருவதற்குள். திரு தனபாலன் ஆஜர். குறிக்கரதோட அறைத்தும் வைத்துக் கொள்ளுங்கள்.
கருத்துரைக்கு மிகவும் நன்றி. அன்புடன்
நீங்கள் சொல்லியிருக்கும் முறையில் சாம்பார் பொடி செய்து வைத்துக் கொண்டால் சமையல் தெரியாத கற்றுக்குட்டிகள் கூட ‘கமகம’ சாம்பார் செய்ய முடியும் போலிருக்கிறதே! படிக்கும்போதே வாசனை தூக்குகிறது.
கருமஞ்சள் என்று போட்டிருக்கிறீர்களே, அப்படிக் கேட்டால் கடைகளில் கிடைக்குமா? இல்லாவிட்டால் சாதாரண குச்சி மஞ்சள் கிடைத்தால் சேர்க்கலாமா?
எளிமையான குறிப்பு செய்வதற்கு சுலபம்.
பாராட்டுக்கள்!
விரளி மஞ்சள்,கரு மஞ்சள், குச்சி மஞ்சள் எல்லாம் ஒரே பொருளே. உடைத்தால் கொஞ்சம் கருமை கலந்த நிரமாக வரும். சமையலுக்கேற்ற மஞ்சள்.. பொடிக்கு நிறமும், மணமும், ருசியும் கொடுக்கும் உடம்பிற்கு நல்ல வஸ்து.
நான் நீங்கள் சொன்ன சாமான்களுடன் சீரகம், உளந்தம்பருப்பு கொஞ்சம் பச்சரிசி போட்டு வறுத்து செய்வேன். கெட்டு போகாமல் இருக்க கொஞ்சம் கடுகு போட்டு திரிக்க சொல்வார்கள் அம்மா.
நீங்கள் சொன்ன மாதிரி ஒருமுறை செய்து பார்க்கிறேன்.
நன்றி.
உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன். இஷ்டமுள்ளவர்கள் அவர்களுக்குப் பிடித்த ஸாமான்கள் சேர்த்து அரைப்பார்கள். சில ஸமயம் நான் கூறியபடி செய்த பொடியையே ரஸத்திற்கும், உபயோகப்படுத்தினால், மேற்கொண்டு சிறிது மிளகு சீரகம் பொடித்துப் போட்டாலும் போதும்.
ஸாம்பாருக்கு வேண்டுமானால் சிறிது அரிசி மாவு கரைத்து கடைசியில் சேர்க்கும் வழக்கமும் உண்டு… அவசியமிருந்தால்தான். பாருங்கள். முடிந்தபோது செய்யுங்கள்
அன்புடன்
உங்கள் பதிலை வரவேற்கிறேன். அவரவர்களுக்குப் பிடித்ததைச் சேர்த்து அரைப்பார்கள். இதே பொடியை சில ஸமயம்.ரஸத்திற்கு உபயோகப்படுத்தினால், சிறிதுமிளகு சீரகம் பொடித்து சேர்த்தால் போதும்.. கூட்டு, கறிப்பொடியில் உளுத்தம் பருப்பு, சேர்க்கிறேன். ஒரு முறை முடிந்த போது செய்து பாருங்கள். நன்றி. அன்புடன்
காமாஷிமா,
மிளகாய் செலவு நீங்க சொல்லியுள்ள பொருள்கள் மாதிரிதான் சேர்ப்போம். மிளகாய்&கொத்துமல்லி மட்டும் ஒரு பங்குக்கு 4 லிலிருந்து 6 பங்கு வரை போடுவோம்.
மெஷின் இல்லாத ஊரிலிருக்கும் என்னைப்போன்ற ஆட்களுக்கு உங்க குறிப்பு மிக உதவியாக இருக்கும்.அடுத்த வாரம் வரும்வரைக் காத்திருக்கிறோம். அன்புடன் சித்ரா.
சித்ரா அவரவர்கள் வழக்கம் என்று ஒன்று உள்ளது. அம்மாதிரி பொடி போடும்போது, அதிகம் மிளகாய் வற்றல்கள் தாளிப்பில் சேர்ப்பார்கள் போலும்.. இந்த வகையும் செய்து பார். இதுவே, மிதமான காரம்தான்.. மிக்ஸியில் பொடித்த பொடி ஸாம்பாருக்கு
திக்னெஸ் கொடுக்காது. மணம் அதிகமிருக்கும். சிறிது மாவு கரைத்து விடுவது தேவையாக இருக்கலாம். அரவை மெஷினில் அரைத்த பொடி கூடுதல் திக்னெஸ்ஸை ஸாம்பாருக்கு கொடுக்கும்.. உனக்கில்லாத யோசனையா? அன்புடன்
நான் திருமண்ம் செய்துகொண்டு ஆந்திரா வந்து 35 வருடங்கள் ஆகின்றன இன்றுவரை பிறந்த வீட்டிலிருந்துதான் சாம்பார் பொடி வந்து கொண்டு இருக்கிறது நானே செய்யப்போகும் நாளில் உதவியாக இருக்கும் ரொமப நன்றி அம்மா
பாருங்கள், நான் காட்மாண்டு போய் 26 வருடங்களில் பெரும் பகுதி, இரும்பு உரலில் இடித்து சலித்தே பொடிகள் செய்தேன்.
இடிக்க ஆள் கிடைத்தது.. பிற் பகுதியில் மிக்ஸியும், கிடைத்தது.
நம் தமிழ் நாட்டு மிக்ஸிகள் நன்றாக இருக்கிரது.. உங்களுக்கு குறிப்பு உபயோகமானால்,அதைவிட வேறு என்ன வேண்டும்.?
நன்றி, அன்புடன்