சமையல், சமையல் குறிப்பேடு, சாம்பார் செய்வது எப்படி?, சாம்பார் பெயர் வந்தது எப்படி?, செய்து பாருங்கள், ருசியுங்கள், Uncategorized

கமகம சாம்பார் செய்வது எப்படி?

சாம்பார் பெயர் வந்தது எப்படி? ஒரு ருசியான ஆராய்ச்சி!

காமாட்சி
காமாட்சி

ருசியுங்கள் – 1

வேகவைத்த துவரம் பருப்புடன்,  புளிப்பு,  உப்பு,  காரம் விருப்ப  காய்கறிகளுடன்  சேர்த்து செய்து   சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் ஒரு சுவைமிக்க  குழம்புதான் சாம்பார். மசாலா அரைத்து புதியதாக செய்வதை சாம்பார் என்று சொல்லும் வழக்கம் பிற்காலத்தில் வந்தது.  எனக்குத் தெரிந்து  பருப்புக் குழம்பு என்றுதான் சொல்வார்கள்.  ஹோட்டல்கள் ஏற்பட்டு இட்லி தோசைக்கு சாம்பார் கொடுப்பது வழக்கமான பின் சாம்பார் என்ற சொல்வழக்கு பழக்கத்தில் வந்து விட்டது. சம்பாரம் என்றால் மிளகாயுடன் சேர்த்து அரைக்கும் தனியா, மிளகு, சீரகம், வெந்தயம், பருப்புகள் இவைகளுக்கு மொத்தமான கூட்டுப் பெயர். வற்றல் மிளகாயை துளி விளக்கெண்ணெயில்  வறுத்து, அதனுடன் தனியாவை வறுத்து சேர்த்து உரலில் இடித்து, சலித்து, மேல் சாமான்களை வறுத்து,   கல்லாலான எந்திரத்தில் அறைத்துக் கலந்துதான் சாம்பார்பொடி தயாரித்து வந்தனர்.  அதற்குப் பெயர் குழம்புப் பொடி.
பிற்காலத்தில் அரவை எந்திரங்கள் வந்தபின் அதில் கொடுத்து அரைக்கும் பழக்கம் வந்தது. அப்போதும் மெஷினில் அரைத்த பொடி ‘உடம்பிற்கு ஆவதில்லை, ஒரே உஷ்ணம்’ என்ற பேச்சுக்கள் உலாவந்தபோதும் மெஷின் நிலையான இடத்தைப் பிடித்து விட்டது.  மிக்ஸி வந்த பிறகு எல்லாப் பேச்சுமே ஓய்ந்துவிட்டது. புரோட்டின் நிறைந்த துவரம்பருப்பு,  காய்கறிகள், வாய்க்கு வேண்டிய புளிப்புச் சுவை, மணம் நிறைந்த, தனியா, வயிற்றுக்கு இதம் தரும் வெந்தயம், நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கும் மஞ்சள் என பலவித கலப்பில் உருமாறும் பருப்புக் குழம்புதான்  சாம்பார்! அதிக எண்ணெய் செலவில்லை. போடும் காய்களின் ருசிகளில் சாம்பார் ருசியும் மாறுகிறது. சாம்பாரை  சாதத்துடன் சாப்பிட சற்று கெட்டியாகவும் இட்லி வடைகளுடன் சாப்பிட,  சற்று நீர்க்கவும் செய்ய வேண்டும்.. இதோ சிம்பிளாக ஒரு சாம்பார் செய்வோம்.
என்னென்ன தேவை?
துவரம் பருப்பு – முக்கால் கப்
மஞ்சள்பொடி – அரை டீஸ்பூன்
மிளகாய் வற்றல் – 4
தனியா – 1 டேபிள் ஸ்பூன்
கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன்
தேங்காய்த்துருவல் – 1 டேபிள் ஸ்பூன்,
புளி – ஒரு சின்ன எலுமிச்சையளவு.
காய் – முள்ளங்கி அல்லது முருங்கை  விருப்பமானது.
தக்காளிப் பழம் – ஒன்று
சின்ன வெங்காயம் -10
(அல்லது விருப்பம்போல் அதிகமாகவும் போடலாம்)
ருசிக்கு – உப்பு.
கறிவேப்பிலையும் பச்சைக் கொத்தமல்லியும் – சிறிது
எண்ணெய்- ஒரு டேபிள் ஸ்பூன்.
தாளிக்க
கடுகும் வெந்தயமும் – தலா அரை டீஸ்பூன்
செய்யும் விதம்
துவரம் பருப்பை நன்றாகக் களைந்து திட்டமாகத் தண்ணீர் சேர்த்து மஞ்சள் பொடியுடன்  குக்கரில் நன்றாக வேகவைத்துக் கொள்ளவும். புளியை ஊற வைக்கவும். காய்களை சுத்தம் செய்து முள்ளங்கியை தோல்நீக்கி மெல்லிய வட்டங்களாக  நறுக்கிக் கொள்ளவும்.  வெங்காயத்தை உறித்து வைக்கவும். தக்காளியை சிறு துண்டங்களாக்கிக் கொள்ளவும். சிறிது எண்ணெயில் மிளகாய், தனியா, கடலைப்பருப்பை சிவக்க வறுத்து தேங்காயைச் சேர்த்துப் பிரட்டி இறக்கவும். ஆறினவுடன் மிக்ஸியில் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்தெடுக்கவும்.
ஊறின புளியில் தண்ணீர் சிறிது சிறிதாகச் சேர்த்துக் கரைத்து மூன்று கப் அளவிற்கு சக்கையை நீக்கி எடுக்கவும். ஸாம்பார் தயாரிக்கும் பாத்திரத்தை  சூடாக்கி எண்ணெய்விட்டு கடுகு வெந்தயத்தைத் தாளித்து முறையே வெங்காயம், தக்காளி, முள்ளங்கியை சிறிது வதக்கி புளித் தண்ணீரைச் சேர்த்து உப்பு போட்டு கொதிக்க விடவும். காய்வெந்து புளி வாசனை அடங்கியவுடன்,  அரைத்த விழுதைக் கரைத்து சேர்த்துக்  கொதிக்கவிடவும். தீயை மிதமாக வைத்து அடிக்கடி கிளறி விட்டு கொதித்தபின்  வெந்த பருப்பை  மசித்துச் சேர்த்துச் சிறிது கொதித்த பின் இறக்கி கொத்தமல்லி கறிவேப்பிலை சேர்க்கவும். வெங்காயம் சேர்த்ததால் பெருங்காயம் சேர்க்கவில்லை. மிதமான காரமிது. பச்சைமிளகாய் ஒன்றை கொதிக்கும்போது சேர்த்தால் வாசனையாகவும் காரமாகவும் இருக்கும்.

DSCN0926

பொதுவான அளவுதான் இது.  வேண்டியவர்கள் மிளகாயை கூட்டியும் குறைத்தும்  சேர்த்து தயாரிக்கலாம். 4, 5 பேர் உள்ள குடும்பத்திற்கு 2 வேளைக்கு உதவும்.
எந்தெந்த காய்கள் போட்டு சாம்பார் செய்தால் நன்றாக இருக்குமென்பதை அடுத்துப் பார்ப்போமா?

(4பெண்கள் குறிப்பு: இந்த சாம்பார் முழுக்க முழுக்க உடலுக்குத் தீங்கு விளைவிக்காத பொருட்களால் செய்யப்படுகிறது, முக்கியமாக ஆர்டிஃபீஷியல் வண்ணம், கெடாமல் இருக்க பயன்படுத்தும் கெமிக்கல்கள் சேர்த்த சாம்பார் பொடி, மிளகாய்ப் பொடி சேர்க்காமல் செய்யப்படுவதால் 4பெண்கள் இந்த ரெசிபியை ஆரோக்கியமான குடும்பத்திற்கு சிபாரிசு செய்கிறார்கள்.)

என்னைப் பற்றி
காற்று போன போக்கில்போய் ஓடத்தை செலுத்தி, குழந்தைகளின் முன்னேற்றம் காணும் ஒரே குறிக்கோளுடன் சென்று அவர்களின் முன்னேற்றத்தில் பங்கு பெற்ற ஒரே சந்தோஷம்.. அப்பாவிற்காக ஈயச்சொம்பில் இரவுநேர சமையலாக சீரா ரசம் செய்ததுதான் என்னுடைய முதல் சமையல். ‘பாரததேவி’யில்  நான் எழுதிய தேன் குழல் ரெசிப்பிக்கு தீபாவளிப் பரிசாக 5 ரூபாய் முதல் பரிசு. ‘இளையாள்’ என்ற கதைக்காக சுதேசமித்திரன் வாரப்பதிப்பில் 20 ரூபாய் பரிசு பெற்றது. இதெல்லாம் கலியாணத்திற்கு முன்பான செய்திகள். ஜெனிவாவில் இருந்தபோது தமிழ்ச் செய்திகள் படிப்பதற்கு,  விகடன் முதலான பத்திரிகைகளைப் படிப்பதற்கு இணையத்தின் உதவி தேவைப்பட்டது. வழிகாட்டி  என்னுடைய கடைசி மகனும். சிலது  கம்யூட்டரில் டைப் செய்ய  வாக்கியங்கள் அமைக்க  என ஒத்தாசைகளை எனது பேரன் மனைவி செய்தார். நான் அங்கு சென்றிருந்த நாட்களில் சொல்லிக்கொடுத்தாள். இப்படி பலபேர் வடமிழுக்க என் தேர் ஓடிக்கொண்டிருக்கிறது.   ஒற்றுமை, படிப்பில் ஆர்வம், சிரமம் உணரும் தன்மை, இவைகளால் முன்னுக்கு வந்தவர்கள்  என் பசங்கள். இதுவே போதும். நிறைவாக இருக்கிறது வாழ்க்கை!

“கமகம சாம்பார் செய்வது எப்படி?” இல் 25 கருத்துகள் உள்ளன

  1. திரு தனபாலன் அவர்களே உங்கள் மறுமொழி எனக்கு வந்து ரொம்ப நாட்களாகி விட்டது.. இப்போது மிக்க ஸந்தோஷம்.
   இதுவே போதும்.. வாருங்கள் அடிக்கடி. அன்புடன்

 1. நான் ஆசை ஆசையாக சமையல் செய்யும் குழம்பு முருங்கைக்காய் சாம்பார்! நான் கடலை பருப்பும், தேங்காய் பூவும் சேர்த்து செய்ததில்லை, மற்றபடி இதே போல்தான் செய்வேன் 🙂
  உங்களுடைய பதிவுகள் வாசிப்பதற்கு அருமையாக இருக்கிறது, உங்கள் கம கம சமையல் போலவே 🙂

  1. மஹாலக்ஷ்மி காய்கள் அதனதன் ருசியைக் கொடுக்கும். பருப்பு சேர்த்து அரைக்கும் போது பருப்புகள் சிவக்க வறுபட வேண்டும்.
   சிலர் பருப்புக்கு பதில் துளி அரிசியை வருக்கும் போது சேர்த்தும்

   அரைப்பார்கள். இதெல்லாம் ஸாம்பார் நீர்க்காமல் சற்று கெட்டியாக வருவதற்குதான்.. உன் பின்னூட்டத்திற்கு மிகவும்
   மகிழ்ச்சி பெண்ணே!!!!!!! வா,வா அடிக்கடிவா

 2. மிகவும் அற்புதமாக இருக்கு சாம்பார் செய்முறை. உஅடனே பண்ணி சாப்பிட தோன்றியது. நன்றி பகிர்வுக்கு.

  // இதுவே போதும். நிறைவாக இருக்கிறது வாழ்க்கை!//

  சிறப்பாக சொல்லியிருக்கீங்க..
  போதும் என்கிற குணம் இருந்தாலே வாழ்கை இனிமையாக இருக்கு.

 3. காமாஷிமா,

  வாழையிலை சாப்பாடு பார்க்கவே சாப்பிடத்தூண்டுகிறது.இரண்டு காயமும் சேராது என்பார்கள்.எதனால் என்று தெரியவில்லை.ஆனால் நான் போட்டுவிடுவேன்.

  உரலில் இடித்து,எந்திரத்தில் அரைத்து,நினைக்கையிலே கொஞ்சம் பயம் வரத்தான் செய்கிறது.சாம்பார் குறிப்பு மட்டுமல்லாமல் அந்தக் கால வாழ்க்கை முறையையும் சொல்லிச்செல்வது படிப்பவர்களை ஈர்க்கிறது. முடியும்போது ‘இளையாள்’கதையையும் பதிவு செய்யுங்கள்.

  “பலபேர் வடமிழுக்க என் தேர் ஓடிக்கொண்டிருக்கிறது”,”இதுவே போதும். நிறைவாக இருக்கிறது வாழ்க்கை!”_____இனிவரும் காலங்களிலும் அமைதியான வாழ்க்கையாக அமைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன். அன்புடன் சித்ரா.

 4. அன்புள்ள சித்ரா வாழையிலையுடன் சாப்பாடு 4 பெண்கள் உபயம். காயம் சேராது என்பது ஒன்றை ஒன்று அடக்கிவிடும் என்று சொல்வார்கள். வாஸனையைதான் . கதைதானே திரும்ப எழுதினால்தான் உண்டு.
  சாப்பிடத் தூண்டுகிறது. பின்னூட்டம் ருசியைத் தூண்ட வேண்டும்..
  வருகைக்கு நன்றி. அன்புடன்

 5. கமகம சாம்பாருடன் இங்கே வந்திருக்கிறீர்கள். வருக வருக!
  இனி அடிக்கடி இங்கேயும் உங்களைச் சந்திக்கலாம் என்ற நினைவே சந்தோஷமாக இருக்கிறது.

  நீங்கள் சொல்வதுபோல பருப்பு குழம்பு என்றுதான் சொல்லுவோம். சாம்பார் என்ற பெயர் பிறகு பிரபலம் ஆன பெயர். நீங்கள் செய்வது போலவே நானும் செய்வேன். ஒரே ஒரு வித்தியாசம் மெந்தியத்தையும் வறுத்து அரைத்து விடுவேன்.

  உங்கள் நிறைவான வாழ்க்கை பல ஆண்டுகள் நீடிக்க இறைவனைப் பாரார்த்திக்கிறேன்.

 6. அரைத்துவிட்ட சாம்பார் அருமை என்றால் வாழ்க்கை பற்றி அழகாய் எளிமையாக சொல்லி நிறைவாக வாழ்வதை சொன்னது அருமை.
  நானும் அப்படித்தான் எனக்கும் குழந்தைகள் தான் இணைய கல்வியை சொல்லி தந்தார்கள்.

  1. எல்லோரும் செய்யும் ஸாம்பார்தான். அருமை என்ற சொல்லுக்கு
   மனது ஸந்தோஷிக்கிரது. நன்றி. எல்லா ப்ளாகிற்கும் போய் படிக்க ஆசை. வயதாகி விட்டாலும் கடமை செய்வதில் காலம் போய்விடுகிறது. அது சில சமயம் பாதிக்கிரது. அதிக படிப்பில்லாமல் கணினி கையாள்வதில் சில ஸமயம் சிக்கல் ஏற்படுகிறது. எப்படியாவது ஸமாளிக்கிறேன். உங்கள் அன்பான பின்னூட்டத்திற்கு மிகவும் நன்றி. அன்புடன்

 7. செய்து பார்த்தேன் மிக அருமையான சாம்பார் கலைஞர் என்று உணர முடிந்தது! அவ்ளோ டேஸ்ட்! நன்றி!
  எனக்கு அவியல் செய்வது எப்படி என்று எனது மெயிலுக்கு அனுப்புங்கள்!
  .

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.