இந்த வார புத்தகங்கள், படிக்க... ரசிக்க

படிக்க… ரசிக்க… இந்த வார புத்தகங்கள்!

இனி ஒவ்வொரு வாரமும் சிறந்த புத்தகங்களை இந்தப் பகுதியில் அறிமுகப்படுத்த இருக்கிறோம். இவைதான் சிறந்த புத்தகங்கள் என்று புத்தகங்களின் மீது நாம் முத்திரையை போகிற போக்கில் குத்திவிட முடியாது. எல்லா வகையான புத்தகங்களும் வாசிக்கப்பட வேண்டியவைதான். அந்த வகையில் வெவ்வேறு தளங்களில், வெவ்வேறு பொருள்களில் எழுதப்பட்ட புத்தகங்களை இங்கே அறிமுகப் படுத்துகிறோம். உங்களுடைய கருத்துகளை பகிர்ந்துகொள்ளுங்கள்.

கிளாசிக் நாவலான தி. ஜானகிராமனின் ‘அம்மா வந்தாள்’ வாசித்துப் பாருங்கள். மனிதர்களின் ஆசாரங்களையும் விதிகளையும் உணர்வுகள் எப்படி சொல்கின்றன என்பதை கலையாக்கும் வித்தகர் தி. ஜானகிராமன். அவருடைய ‘அம்மா வந்தாள்’ வாசகர்களால் கொண்டாடப்படும் நாவல்.

புலம்பெயர்ந்த எழுத்தாளர்களில் பரவலான கவனத்தைப் பெற்றவர் அ. முத்துலிங்கம். அதிர்ச்சியான, ஆத்திரத்தை வரவைக்கும் விஷயத்தில்கூட இவர், நகைச்சுவையை புகுத்திவிடுவார். இவருடைய எழுத்து இலக்கியமென்றாலும், அதை சாமானியனும் படிக்கும்படி எளிமையாக எழுதுவார். அவருடைய அமெரிக்கக்காரியைப் படித்துப் பாருங்கள் அது தெரியும். இது அ. முத்துலிங்கத்தின் சிறுகதைத் தொகுப்பு.

ஒரு வாரப் பத்திரிகையில் தொடராக வெளிவந்த ஜெயமோகனின் ‘சங்கச் சித்திரங்கள்’ வாசகர் மத்தியில் இலக்கிய ஆர்வத்தை ஒரு அலையாக ஏற்படுத்தியது. இன்றைய சூழலில் இந்த புத்தகம் தமிழில் வெளிவந்த சிறந்த இலக்கிய அறிமுக நூல் என்று சொல்லலாம்.

தலைமுறைகள் கடந்து மீண்டும் மீண்டும் தமிழில் வாசிக்கப்படும் நாவல் கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’! சமீபத்தில் சென்னையில் நடந்த புத்தகக் காட்சியில் இந்த ஆண்டும் ‘பொன்னியின் செல்வன்’தான் பெஸ்ட் செல்லர். உங்கள் வீட்டு நூலகத்தில் இதுவரை ‘பொன்னியின் செல்வன்’ இல்லையென்றால், உடனே வாங்கி வையுங்கள். உங்கள் வருங்கால சந்ததியும் படித்து இன்புறுட்டும்.

தமிழில் அதிகம் வாசிக்கப்படும் கவிஞர், வைரமுத்து. அவருடைய சமீபத்திய படைப்பு மூன்றாம் உலகப் போர் மிகுந்த வரவேற்பைப் பெற்றிருக்கிறது. விவசாயிகளின் அருமைகளைத் தெரிந்து கொள்ள நாம் அவசியம் இந்த நாவலை படித்தாக வேண்டும்.

Advertisements

“படிக்க… ரசிக்க… இந்த வார புத்தகங்கள்!” இல் 6 கருத்துகள் உள்ளன

  1. நல்ல புத்தக விமர்சனம்.
    அம்மா வந்தாள் படித்து இருக்கிறேன்..
    பொன்னியின் செல்வன் வீட்டில் இருக்கிறது., என் அம்மா படித்து , என் குழந்தைகள் படித்து இப்போது பேரபிள்ளைகள் படிக்க பொக்கிஷமாக பாது காக்கிறேன்..

  2. பொன்னியின் செல்வன் பலமுறை படித்து, திரும்பப் படித்து, திரும்பத்திரும்ப படித்து, இன்னும் படித்துக் கொண்டே இருக்கும் புத்தகம்.

    திரு தி.ஜா. அவர்களின் அம்மா வந்தாள் படித்திருக்கிறேன்.
    மற்ற புத்தகங்கள் இனிமேல் படிக்க வேண்டும்.

    நல்ல அறிமுகம்!

  3. அருமையான புத்தகங்கள் அறிமுகத்திற்கு நன்றிகள்..
    கிளாசிக் நாவலான தி. ஜானகிராமனின் ‘அம்மா வந்தாள்’
    தலைமுறைகள் கடந்து மீண்டும் மீண்டும் தமிழில் வாசிக்கப்படும் நாவல் கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’!

    பலமுறை வாசித்தவை..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.