தங்கம், ரியல் எஸ்டேட்டைவிட அதிகம் லாபம் தரும் மியூச்சுவல் ஃபண்ட் பற்றி சென்ற வாரம் பைனான்ஷியல் பிளானர் பி. பத்மநாபன் சொல்லியிருந்தார். இந்த வாரம் மியூச்சுவல் ஃபண்டில் நாம் முதலீடு செய்ய வேண்டும் என்பது பற்றி சொல்விருக்கிறார்.

‘‘மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மேல்தட்டு, நடுத்தர மக்களுக்கானது என்று நம்மில் பலர் நிளைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் இது எல்லா மக்களுக்குமானது. வங்கி அல்லது போஸ்ட் ஆஃபிஸ் தொடர் வைப்புத் திட்டங்களில் (ரெக்கரிங் டெபாசிட்) ரூ. 100 அல்லது 200 ஐக்கூட சேமிக்க முடியும். வங்கி டெபாசிட் திட்டங்கள் எவ்வளவு பாதுகாப்பானதோ, அதுபோல மியூச்சுவல் ஃபண்ட்டில் முதலீடு செய்வது பாதுகாப்பானது, சட்ட திட்டங்களுக்கு உட்பட்டது.
மியூச்சுவல் ஃபண்ட் பற்றி பெரும்பாலானவர்கள் கேட்கும் இன்னொரு கேள்வி… வங்கிகளில் டெபாசிட் செய்தால் வங்கிகள் நிச்சயிக்கப்பட்ட வட்டியைத் தருகின்றன. ஆனால் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் சில சமயம் எதிர்பார்த்தததைவிட குறைவாக வருமானம் தருகிறது,. இதை நம்பி எப்படி முதலீடு செய்வது என்கிறார்கள். இது நல்ல கேள்வி. பொதுவாக வங்கி டெபாசிட்டுகளுக்கு 8 முதல் 10 சதவிகித வட்டி மட்டுமே தரப்படுகிறது. 10ஆண்டுகள் வரைக்கும் இந்த வட்டிவிகிதம்தான். ஆனால் கடந்த பத்து ஆண்டுகளில் சில மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் 15 முதல் 25 சதவிகிதம் வரை வருமானம் தந்திருக்கின்றன.


உதாரணத்துக்கு… நீங்கள் 3 வருடங்களுக்கு முன் ரூ. 1 லட்ச ரூபாயை 10 சதவிகித வட்டியில் ஒரு வங்கியில் உதாரணத்துக்கு ஸ்டேட் பாங்கில் டெபாசிட் செய்திருந்தால் இப்போது ரூ. 1 லட்சத்து 30 ஆயிரம் கிடைத்திருக்கும். ஆனால் 3 ஆண்டுகளுக்கு முன் அதே வங்கியின் ஓரு பங்கு 900 ரூபாய். இன்றைய மதிப்பு 2400 ரூபாய். முதலீடு ரெண்டு மடங்குக்கும் அதிகமாகியிருக்கும்.
நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்ய மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் மிகவும் ஏற்றவை. குறைந்தது 10 ஆண்டுகளாவது உங்களுடைய முதலீடு தொடர வேண்டும். அப்போதுதான் உங்களுடை முதலீட்டுக்கான முழு வருமானத்தையும் பெற முடியும்’’ என்கிற நிதி ஆலோசகர் பி. பத்மநாபன் நமக்காக சில மியூச்சுவல் ஃபண்டுகளை பரிந்துரைக்கிறார்…
நீண்ட கால முதலீட்டுக்கு டாப் பர்பாமென்ஸ் தரும் மியூச்சுவல் ஃபண்ட்டுகள்!
ஐசிஐசிஐ ப்ருடன்ஷியல் ஃபோகஸ் ப்ளுசிப் ஃபண்ட்
ஐடீஎஃப்சி ப்ரீமியர் ஈக்விட்டி ஃபண்ட்
ரிலையன்ஸ் ஈக்விட்டி ஆப்பர்சூனிடீஸ் ஃபண்ட்
யூடிஐ ஆப்பர்சூனிடீஸ் ஃபண்ட்
அடுத்த வாரம்…
மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டைத் தொடங்குவது எப்படி?
தொடர்புடைய பதிவு
தங்கம், ரியல் எஸ்டேட்டைவிட அதிக வருமானம் தரும் மியூச்சுவல் ஃபண்ட்!