சர்டிஃபைடு ஃபைனான்ஷியல் பிளானர், சேமிப்பு, நிதி ஆலோசனை, பாதுகாப்பான முதலீடுகள், மியூச்சுவல் ஃபண்ட்

தங்கம், ரியல் எஸ்டேட்டைவிட அதிக வருமானம் தரும் மியூச்சுவல் ஃபண்ட்!

பி. பத்மநாபன்
பி. பத்மநாபன்

நமக்குத் தெரிந்தவரை சேமிப்பு என்றால் தங்கத்தை கிராம் கணக்கில் வாங்கி வைத்துக்கொள்வது அல்லது நிலத்தில் முதலீடு செய்வது இந்த இரண்டும்தான். ‘‘நமக்கிடையே இருக்கும் பொத்தாம் பொதுவான கருத்து இது. மேலோட்டமாகப் பார்த்தால் மிகவும் லாபகரமானதாகவும் பாதுகாப்பானதாகவும் தோன்றும். உண்மையில் இந்த இரண்டையும்விட பாதுகாப்பான முதலீடுகள் நிறைய உள்ளன’’ என்கிறார் சர்டிஃபைடு ஃபைனான்ஷியல் பிளானரான பி. பத்மநாபன்.
பல வணிக பத்திரிகைகளிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நிதி ஆலோசனை சொல்லிவரும் இவர், 4பெண்களில் தொடர் நிதி ஆலோசனைகள் சொல்ல இருக்கிறார்.

‘‘பங்குச் சந்தையில் முதலீடு செய்வது எல்லோராலும் முடியாத விஷயம். இதற்கு தினமும் தனியாக ஹோம் ஒர்க் செய்ய வேண்டும். ஆனால் பங்குச் சந்தையை அடிப்படையாகக் கொண்ட மியூச்சுவல் ஃபண்ட் அப்படியல்ல. இதற்கெனவே இருக்கும் ஃபண்ட் மேனேஜர்கள் எந்த எந்த ஷேரில் முதலீடு செய்தால் லாபம் ஈட்டால் என்பதை தீர்மானிப்பார்கள். குறிப்பிட்ட ஃபண்டை தீர்மானிக்கும்போது மட்டும் ,இந்த ஃபண்ட் இதுவரை எவ்வளவு லாபத்தை தந்திருக்கிறது என்று ஹோம் ஒர்க் செய்யுங்கள்’’ என்கிற பத்மநாபன். எந்த வகையில் மியூச்சுவல் ஃபண்ட் லாபகரமான முதலீடு என்பதை விவரிக்கிறார்…
‘‘உதாரணத்துக்கு ஏப்ரல் மாதம் 2001ல் ரூபாய் 1 லட்சத்தை HDFC ஈக்விட்டி ஃபண்டில் முதலீடு செய்திருந்தால் ஜனவரி 2013ல் அந்தத் தொகை ரூ. 16,98,940.94 ஆக (முழுதாக அறிய PDF HDFC Equity இணைப்பைப் பார்க்கவும்) வளர்ந்திருக்கும். கிட்டத்தட்ட 17 மடங்கு அதிகம்! தங்கத்தைப் போல பயந்து பயந்து பாதுகாக்க வேண்டிய தொல்லை இல்லை. நிலத்தில் முதலீடு செய்து அதை பராமரிப்பதற்காக ஆயிரக்கணக்கில் செலவழிக்கும் அநாவசியமும் இதில் இல்லை’’ என்கிறார்.
மியூச்சுவல் ஃபண்ட் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ள 4பெண்களோடு இணைந்திருங்கள்.

Advertisements

“தங்கம், ரியல் எஸ்டேட்டைவிட அதிக வருமானம் தரும் மியூச்சுவல் ஃபண்ட்!” இல் 8 கருத்துகள் உள்ளன

  1. மிகவும் தேவையான பகுதி. பல வீடுகளில் கணவன் மனைவி இருவரும் வேலையில் இருப்பார்கள். வரும் வருமானத்தை நல்ல முறையில் முதலீடு செய்வதால் நம் எதிர்காலத்தேவை, குழந்தைகளின் படிப்பு எல்லாவற்றையும் திறம்பட சமாளிக்கலாம்.

    திரு பத்மனாபன் தரும் யோசனைகளை பின்பற்ற தயாராக இருக்கிறோம்.
    நல்வரவு ஸார்!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.