
கிட்டத்தட்ட 70 வயதைத் தொட்ட இந்திராவின் அயராத உழைப்பும் ஆர்வமும் நம் எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தும். பல வகையான குரோஷா பின்னல்கள், விதவிதமான எம்பிராய்டரிகள், பெயிண்டிங், தையல் கலை என கைவேலைகளைச் செய்திலும் கற்றுத்தருவதிலும் கைத்தேர்ந்தவர் இந்திரா. அவர் செய்த சிலவற்றைதான் நீங்கள் இங்கே பார்க்கிறீர்கள். நமக்காக இவற்றை கற்றுத்தரவும் இருக்கிறார்.
கர்நாடகத்தை பூர்விகமாகக் கொண்டவர் இந்திரா. என்றாலும் தன் கணவருக்கு வேலை மாற்றலானதில் 30 வருடங்களாக சென்னை வாசியாக வாழ்ந்துவருகிறார். 6 வயதில் இருந்தே கைவேலைகளில் ஆர்வம் கொண்டதாகவும் தனக்கு கடவுள் கணேசாதான் இந்தக் கலைகளைக் கற்றுக்கொடுத்ததாகச் சொல்கிறார் இவர். கைவேலைகளில் நுணுக்கம் தெரிந்த இந்திரா, எல்லாவிதமான பின்னல் வேலைகளையும் செய்வார்.
புது டிசைன், புது பேட்டர்ன் உருவாக்குவதிலும் இவர் திறமை மிக்கவர். இவருடை கலைநுணுக்கத்துக்காக சில அஞ்கீகாரங்களும் தேடிவந்திருக்கின்றன. ஆனாலும் இவருடைய திறமைக்கு அது போதாது. 70 வயதைத் தொட்டிருந்தாலும் ஒரு சிறுமிக்கே உரிய உற்சாகத்துடன் வகுப்புகளை எடுக்கிறார்.
ஒரு நல்ல கைவினைக் கலைஞரைப் பற்றிய அறிய முடிந்ததில் மகிழ்ச்சி.
இவரது கைவேலைகளைப் பார்க்கும்போது எனக்கு என் பாட்டியின் நினைவு வந்தது. இந்த பின்னல் வேலைகளை மிக அழகாகச் செய்வார் என் பாட்டி.
இந்த வயதிலும் இவ்வளவு ஆர்வமா?
அதைவிட ஆச்சர்யம் அவர் ஆசையுடன் எல்லோருக்கும் சொல்லிக் கொடுப்பது தான்.
அவரைப் பற்றித் தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சியே.
நான் முதன் முறையாக உங்கள் பதிவைப் படிக்கிறேன். ரஞ்சனி அவர்களின் பதிவைப் படிப்பதுண்டு.
நான்கு பெண்கள் இந்த ப்ளாகின் owners.நான் யூகிப்பது கரெக்ட் தானே.
நன்றி பகிர்விற்கு,
ராஜி.
வீடியோ இணைப்பில் திருமதி இந்திரா அவர்களின் கைவேளைகளைப் பார்த்து அசந்து விட்டேன். அவரது கையை எடுத்துக் கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம் போல இருக்கிறது.
அவரது பதிவுகளை படிக்க ஆவலுடன் இருக்கிறேன்.
நான்கு பெண்களுக்கு பாராட்டுக்கள்!
நன்றி ரஞ்சனி மேடம்.
கைவினைக் கலைஞரா மந்திரவாதியா என்ன மாயாஜாலம் அந்த கைகளில் கற்றுக்கொள்ள நினைத்து செயலாக்க முடியாமலெ போய்விட்டது என் தங்கை மிக மிக அழகாக கைவேலைகள் செய்வாள்
கண் பார்த்தால் கை செய்யும் என்பார்களெ அந்த ரகம் நமக்கு ரசிக்க மட்டுமே தெரியும் பாராட்டுக்கள்
வருகைக்கு நன்றி விஜயகுமாரி மேடம். இப்போதும் கைவேலைகள் கற்கலாம்… 4பெண்கள் அதற்கு உதவுவார்கள்.
இந்தக் க்ரோஷா வேலைகளைப் பார்க்கும்போது பழைய ஞாபகங்கள் மனதில் வருகிரது. எவ்வளவு அழகான வேலைகள்,. உள்ப்பாவாடைக்கு
க்ரோஷாவில் லேஸ் பின்னி தைத்சுக் கொள்வது, வாசப்படிலேஸ், சால் என
எவ்வளவு வகைகள்!
நல்ல அறிமுகம். நல்ல பதிவு.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சொல்லுகிறேன்..
அன்புடையீர்,
உங்கள் தளத்தினை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகம் செய்திருக்கிறேன்.
http://blogintamil.blogspot.in/2014/01/blog-post_9.html
தங்கள் தகவலுக்காக!
நட்புடன்
ஆதி வெங்கட்
திருவரங்கம்
வணக்கம்
இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது… வாழ்த்துக்கள்…
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/01/blog-post_9.html) சென்று பார்க்கவும்… நன்றி…