இந்திய அம்மாக்கள், குழந்தை வளர்ப்பு, செல்வ களஞ்சியமே

செல்வ களஞ்சியமே! பகுதி-1

ரஞ்சனி
ரஞ்சனி

‘சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா செல்வ களஞ்சியமே!’
எனக்கு மிகவும் பிடித்த, என் குழந்தைகளுக்கும், என் பேரக் குழந்தைகளுக்கும் பாடிய, பாடப் போகும் பாடல் இது!
ஒரு திரைப்படப் பாடல் என்பதைத்தவிர இன்னும் நிறைய இருக்கிறது.
ஒரு குழந்தை என்னவெல்லாம் செய்யும்?
மழலைச் சொல்லாலே நம் துன்பங்கள் தீர்த்திடும்;
முல்லைச் சிரிப்பாலே நமது மூர்க்கத்தைத் தவிர்த்திடும்;
குழந்தையின் மூலம் நாம் பெறுவது, ஏடுகள் சொல்லாத இன்பக் கதைகள்!
தெய்வத்திற்கு இணையாக, அதற்கும் மேலான அன்பை நம் மேல் பொழியும் குழந்தை.

சரி, கற்பனையை விட்டுவிட்டு இப்போது நிஜ உலகிற்கு வருவோம்… சின்ன வயதிலிருந்தே எனக்குக் குழந்தைகள் என்றால் மிகவும் பிரியம். எனது திருமணத்திற்கு முன்பே என் அக்காவின் மகனை (அக்கா வேலைக்கு சென்று கொண்டிருந்ததால்) கொஞ்சி சீராட்டி, பாராட்டி, மையிட்டு, பொட்டிட்டு, விதவிதமாக அழகு செய்து பார்ப்பதில் அலாதி ஆசை எனக்கு.
எனக்குக் குழந்தை பிறந்தபின்தான் குழந்தை வளர்ப்பில் இருக்கும் கஷ்டங்கள் தெரிய வந்தன. அக்காவின் குழந்தையைத் தூக்கி கொஞ்சி விட்டு, அழுதால் அவளிடம் கொடுத்துவிடலாம். நம் குழந்தை என்றால், முழுப் பொறுப்பும் நம்முடையதாயிற்றே!

குழந்தை அழுது எனக்குக் கேட்காமல் போய்விட்டால் என்ன செய்வது என்று இரவு முழுவதும் தூங்காமல் குழந்தையையே பார்த்துக் கொண்டிருப்பேன். இன்றுபோல அப்போது டயபர்கள் கிடையாது. அடிக்கடி குழந்தையின் அடியில் போட்டிருக்கும் துணியை மாற்ற வேண்டும்.
என் மருத்துவர் என் பயங்களை இதமான வார்த்தைகளால் போக்கினார். “குழந்தைக்கு அசௌகரியமாக இருந்தால் அது கண்டிப்பாக அழும். உனக்கு கட்டாயம் காது கேட்கும். குழந்தை கொஞ்ச நேரம் அழுதால் ஒன்றும் ஆகிவிடாது. அனாவசிய பயங்களை மறந்து விட்டு தூங்கு. உனக்கு போதுமான ஓய்வு கிடைத்தால்தான் உன்னால் குழந்தை வளர்ப்பில் கவனம் செலுத்த முடியும்’’

புதுத் தாய்மார்கள் எல்லோருமே நினைவில் கொள்ளவேண்டிய ஒரு நல்ல அறிவுரை இது. குழந்தை வளர்ப்பு பற்றி மேலும் பார்க்கும்முன் செய்தித்தாளில் நான் படித்த ஒரு விஷயம் உங்களுடன்: தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு அளவுக்கதிகமான உணவை கொடுக்கிறார்கள் அல்லது குழந்தையின் வயிற்றில் உணவைத் திணிக்கிறார்கள்!
‘குழந்தை ரொம்பவும் இளைத்து விட்டாள்’
‘குழந்தை ரொம்பவும் ஒல்லியாக இருக்கிறான்’
‘சரியாகச் சாப்பிடுவதே இல்லை’
‘நான் கலந்து கொண்டு வரும் உணவில் பாதிதான் சாப்பிடுகிறாள்’
இப்படி இந்திய அம்மாக்கள் மட்டுமல்ல; மேலை நாட்டு அம்மாக்களும் சொல்லுகிறார்களாம்!
உண்மையில் அம்மாக்களால் தங்கள் குழந்தைகளின் எடையைப் பற்றிய நிஜமான கருத்தை அதாவது அவர்கள் நார்மல், அதிக எடை, அளவுக்கு அதிக எடை என்பதை சரியாகச் சொல்லவே முடியவில்லையாம். எல்லா அம்மாக்களும் தங்கள் குழந்தை ஒல்லியாகத்தான் இருக்கிறது என்று நினைத்துக் கொண்டு அதிகளவு உணவை ஊட்டுகிறார்கள்!

baby

ஒரு வயதிலிருந்து ஒன்றரை வயதுக்குள் இருந்த சுமார் 300 குழந்தைகளின் அம்மாக்களை இந்த ஆய்வுக்காக தேர்ந்தெடுத்தனர். குழந்தைகளின் எடையைப் பற்றி இவர்களிடம் கேட்டபோது 27% அம்மாக்கள் தங்கள் குழந்தை மிகவும் மெலிந்து இருப்பதாகச் சொன்னார்களாம். உண்மையில் ஒரு குழந்தைதான் எடை குறைவாக இருந்ததாம். 12 அம்மாக்கள் மட்டுமே தங்கள் குழந்தை அதிக எடையுடன் இருப்பதாகச் சொன்னார்களாம்.

இரண்டு வயதிற்குள் அதிக எடையுடன் இருக்கும் குழந்தைகள் பிற்காலத்தில் அதிகப் பருமன் (obesity) ஆவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். இதனால் அம்மாக்கள் தங்கள் குழந்தையின் வளர்ச்சியைப் பற்றி சரியாகத் தெரிந்து கொள்ள வேண்டும். குழந்தைகளின் எடை கூடுவது, குறைவது பற்றிய சரியான அறிவைப் பெற வேண்டியது இன்னும் முக்கியம். எல்லாவற்றையும் விட முக்கியம்: உணவை அதிகளவில் குழந்தைக்குக் கொடுக்காதீர்கள்!
குழந்தைகள் ‘கொழுக், மொழுக்’’ என்று இருந்தால் பார்க்க அழகாக இருக்கும் தான். அமுல் பேபிபோல தன் குழந்தையும் இருக்க வேண்டும் என்று ஒரு அம்மா ஆசைப்படுவதில் தப்பு இல்லை. ஆனால் அந்தக் ‘கொழுக், மொழுக்’’ எதிர்காலத்தில் அவர்களது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்றால் அம்மாக்கள் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். ‘கொழுக், மொழுக்’ குழந்தையைவிட பிற்காலத்தில் சரியான எடையுடன், ஆரோக்கியமான குழந்தைகளை உருவாக்குவதும் தாய்மார்களாகிய நம் கையில்தான் இருக்கிறது.
இந்தத் தொடரில் குழந்தை வளர்ப்பை அடிப்படையிலிருந்து பார்க்கலாம்.
இளம் குழந்தையை எப்படி தூக்குவது, நீராட்டுவது, பால் புகட்டுவது, தாய் பாலின் அவசியம், கெட்டி ஆகாரத்திற்கு எப்போது மாறுவது, என்னென்ன கொடுக்கலாம், எப்படிக் கொடுக்கலாம் என்று எல்லாவற்றையும் எனது அனுபவத்துடன் சொல்லவிருக்கிறேன்.

62-huggies-dry-diaper-400x400-imadaryq4f4suhsy

 

என் குழந்தைகளுக்கு அம்மாவாகவும் பேரக்குழந்தைகளுக்குப் பாட்டியாகவும் பலபல அனுபவங்கள். எனது அனுபவங்களும் இந்தத் தொடரில் சேருவதால் இது வெறும் ஏட்டு சுரைக்காயாக இல்லாமல் நடைமுறைக்கு ஒத்ததாகவே இருக்கும்.
உங்களது ஐயப்பாடுகளையும் கேள்விகளையும் பின்னூட்டம் மூலமாகக் கேட்கலாம். வாசகர்களும் பங்கு கொண்டு இந்தப் பகுதியை சிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகிறேன்.

(தொடரும்)

என்னைப் பற்றிய சிறு அறிமுகம்

நான் பிறந்தது ஸ்ரீரங்கத்தில் அம்மாவின் அம்மா வீடு அங்கிருந்ததால். மற்றபடி படித்தது, திருமணம் ஆகியது, குழந்தைகள் பிறந்தது எல்லாம் சென்னையில் – அப்போதைய மதராஸில்.

எழுதுவது எனக்குப் பிடித்தமான பொழுதுபோக்கு. பொழுது போக்காக மட்டுமில்லாமல், இதைப் பிறருக்குச் சொன்னால் பயன்படுமே என்று நான் படித்ததையும், அனுபவித்ததையும் எழுத்தின் மூலம் எல்லோருடனும் பகிர்ந்துகொள்வது இன்னும் பிடித்த விஷயம்.

பதிவுலகத்திற்கு வந்து ஒரு வருடம் ஆகிறது. என் எழுத்துக்களைப் படிப்பவர்கள் கொடுக்கும் உற்சாகம் எனக்கும் தொற்றிக் கொள்ளுகிறது; இன்னும் இன்னும் எழுதத் தோன்றுகிறது.

இணையம் மூலம் பலரையும் அறிமுகப்படுத்திக் கொண்டு என் உலகத்தை விரிவடைய வைப்பதை மிகப் பெரிய பேறாக நினைக்கிறேன்.

தொழில்நுட்பம் விரிவடையும்போது நான் பின்தங்கி விடாமல், இளைய சமுதாயத்துடன் கணணி உதவியுடன் பயணிப்பது மனதிற்குப் பிடித்திருக்கிறது.

இனி என் எழுத்துக்கள் உங்களுடன் பேசும்!

அன்புடன்,

ரஞ்சனி

Writers blog: http://ranjaninarayanan.wordpress.com/

“செல்வ களஞ்சியமே! பகுதி-1” இல் 42 கருத்துகள் உள்ளன

 1. உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.வேண்டியவர்களுக்கு உதவும்.தொடருங்கள்.

  “அக்காவின் குழந்தையைத் தூக்கி கொஞ்சி விட்டு,அழுதால் அவளிடம் கொடுத்துவிடலாம். நம் குழந்தை என்றால்,முழுப் பொறுப்பும் நம்முடையதாயிற்றே!”___மூன்று அக்காக்கள் என்பதால் இந்த அனுபவம் எனக்கும் உண்டு.

  1. வாருங்கள் சித்ரா!
   வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. கட்டுரையைப் படித்து, அதேபோல அனுபவங்கள் உங்களுக்கு இருந்தால் அதையும் பகிர்ந்து கொள்ளுங்கள். பலருக்கும் பயன்படும்.

   நீங்கள் கொடுக்கும் ஊக்கத்திற்கும், உற்சாகமான வார்த்தைகளுக்கும் நன்றி!

 2. ரொம்ப இல்லாவிட்டாலும், சித்த இளைச்சுதான் போய்ட்டே. அம்மா,கை சாப்பாடு சாப்பிடரவரை எப்படி இ ருந்தாள், அல்லது இருந்தான், இப்படிப்ட்ட
  வார்த்தைகள் தாயின் அலாதிப் பரிவின் வார்த்தைகள். முகமன்னுக்காக சொல்பவர்களும் உண்டு.
  குறைத்து சாப்பிட்டாலும் குழந்தை ஆக்டிவாக இருந்தால் விசாரப்படவேண்டாம் என்றுதான் டாக்டரும் சொல்லுகிரார். பொதுவாக
  பசங்களுக்கு ஆகாரத்தை திணிக்கக் கூடாது..இதுவும் ஸரி.
  நல்ல அனுபவம் எழுதுகிறாய். மேன்மேலும் எழுது. உபயோகமாயிருக்கும்.

  வரவேற்கிறேன். அன்புடன்

  1. உங்கள் மெயில் கிடைத்தவுடன் தான் இந்த பின்னூட்டத்தைப் பார்த்தேன்.
   வரவேற்புக்கும், அனுபவபூர்வமான வார்த்தைக்களுக்கும் நன்றி!

  1. ஆஹா! ராதா! வாருங்கள், வாருங்கள்!

   உங்கள் பின்னூட்டம் மிகுந்த உற்சாகத்தைக் கொடுக்கிறது. உங்கள் உதவி கட்டாயம் எனக்குத் தேவை. கருத்துக்களையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள் ப்ளீஸ்!

   நன்றி ராதா!

 3. அனுபவங்களும் இந்தத் தொடரில் சேருவதால் இது வெறும் ஏட்டு சுரைக்காயாக இல்லாமல் நடைமுறைக்கு ஒத்ததாகவே இருக்கும்.

  பயனுள்ள தலைப்பு ..பாராட்டுக்கள்.

 4. வணக்கம்
  அம்மா

  சின்னஞ்சிறு கிளியே என்ற தலைப்பில் குழந்தை வளர்ப்பு பற்றிய விவரனை மிக அருமையாக உள்ளது 4பெண்கள் என்ற வலைப்பூவை கிளிக் செய்தால் விவரம் அப்படியே வரகிறது
  வளர்ந்து தாயாகும் பெண்களும் தாயாக உள்ள பெண்களும் அறிய வேண்டிய நல்ல விடயத்தை அழகாக விரிவான தகவலாக கொடுத்த உங்களுக்கு பாராட்டுக்கள் அம்மா நீங்கள் வழங்கிய தகவலின் பிரகாரம் நானும் அறிந்துவைத்தள்ளேன் நேரம் காலம் வரும்போது பின்பற்றலாம் அம்மா

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

 5. வழக்கம் போல் உங்கள் பகிர்வு அருமையாக உள்ளது ஆனால் பேரன் பேத்திகளை அவர்கள் பெற்றோர் பாட்டி தாத்தாவை நம்பி இந்த நாட்களில் விட்டு விட்டு போகிறார்களா? நாம் அவர்களை பொறுப்பாக பார்த்துக் கொள்வதற்கு காப்பகத்தை நம்பும் அளவு அவர்கள் நம்மை நம்புவதில்லை என்று தான் எனக்குத் தோன்றுகிறது எப்படியாயினும் உங்கள் அறிவுரைகள் ரொம்ப அருமை

  1. வாருங்கள் விஜயா!
   நீங்கள் சொல்வது மிகவும் உண்மை. காலம் மாறுகிறது, இல்லையா? குழந்தைக்கு எட்டு மாதம் ஆகியவுடன் காப்பகத்தில் விட்டு விடுகிறார்கள். வேலைக்குப் போக வேண்டுமே!
   வருகைக்கும், உங்கள் அனுபவ பகிர்வுக்கும் நன்றி!

 6. madam, i am able to read from my email. thanks. its is very good. the ezuthu nadai romba nandraaga irukku. Enakku Ponmani vairamuthu madam (Mrs of Mr Vairamuthu) took tamil in my college. She talks in simple language as u have written and also show quotes from here and there. Thanks very much. I have pleasure to read your blog.
  Pl also tell us the diet food that can be followed easily by working women. You know working women system of maintaining cooking at home. So suggest accordingly.
  padma.

  1. வாருங்கள் பத்மா!
   திருமதி பொன்மணி வைரமுத்துவுடன் சேர்த்து பேசியிருப்பது மிகவும் சந்தோஷத்தைக் கொடுக்கிறது – அத்தனை தகுதி எனக்கு இல்லையென்றாலும்!

   உங்கள் வேண்டுகோளை நிச்சயம் நிறைவேற்றுகிறேன். இங்கு முடியவில்லை என்றாலும், எனது தளத்தில் எழுதுகிறேன்.
   நன்றி!

 7. ரஞ்சனி,

  இந்தத் தொடர் இப்பொழுது தாயாகியிருக்கும் பெண்களுக்கும் மிகவும்

  அவசியமே. இந்தக் காலத்தில் நிறைய பெண்கள் வீட்டில் பெரியவர்கள்

  யாருமின்றி தான் அவதிப்படுகிறார்கள்…. அதுவும் வெளிநாட்டில்

  மாட்டிக் கொண்ட இளம் தாய்மார்களின் நிலையைப் பற்றி சொல்லவே

  வேண்டாம். அவர்களுக்கு பேருதவியாக இருக்கும் .இந்தத் தொடர்.

  தொடருங்கள் வாழ்த்துக்கள்.

  ராஜி

  1. வாருங்கள் ராஜி!
   உங்களின் எதிர்பார்ப்பை நிச்சயம் பூர்த்தி செய்வேன் என்று நினைக்கிறேன். உங்களின் அனுபவத்தையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
   நன்றி!

 8. இன்றுபோல அப்போது டயபர்கள் கிடையாது. அடிக்கடி குழந்தையின் அடியில் போட்டிருக்கும் துணியை மாற்ற வேண்டும்.
  என் மருத்துவர் என் பயங்களை இதமான வார்த்தைகளால் போக்கினார். “குழந்தைக்கு அசௌகரியமாக இருந்தால் அது கண்டிப்பாக அழும். உனக்கு கட்டாயம் காது கேட்கும். குழந்தை கொஞ்ச நேரம் அழுதால் ஒன்றும் ஆகிவிடாது. அனாவசிய பயங்களை மறந்து விட்டு தூங்கு. உனக்கு போதுமான ஓய்வு கிடைத்தால்தான் உன்னால் குழந்தை வளர்ப்பில் கவனம் செலுத்த முடியும்’’//

  இதை இந்தக் கால தாய்மார்கள் தெரிந்துக் கொள்ளவேண்டு.ம்.
  குளிர் பிரதேசங்களில் குழந்தையின் தூக்கம் கெடும் என்பதால் டயபர்கள் கண்டு பிடித்து இருப்பார்கள். இங்கு நம் நாட்டுக்கு தேவையே இல்லை. நல்லபுடவை கட்டிக் கொண்டு வெளியே போகிறீர்கள், அல்லது பஸ் பயணம் என்றால் மாட்டி விடலாம் எப்போதும் இதை மாட்டி விட்டால் எவ்வளவு கஷ்டம் குழந்தைகளுக்கு.வெயில் காலத்தில் அவர்கள் மிகவும் துனபபடுகிறார்கள்..

  //இளம் குழந்தையை எப்படி தூக்குவது, நீராட்டுவது, பால் புகட்டுவது, தாய் பாலின் அவசியம், கெட்டி ஆகாரத்திற்கு எப்போது மாறுவது, என்னென்ன கொடுக்கலாம், எப்படிக் கொடுக்கலாம் என்று எல்லாவற்றையும் எனது அனுபவத்துடன் சொல்லவிருக்கிறேன்.//
  நன்றாக சொல்லுங்கள் வாழ்த்துக்கள்.
  உங்கள் அறிவுரைகள் இக்காலக் குழந்தைகளுக்கு மிகவும் பயன்படும்.

  1. வாருங்கள் கோமதி!
   டயபர் பற்றி நீங்கள் சொல்லி இருப்பதை அப்படியே வரிக்கு வரி வழி மொழிகிறேன்.

   உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

   தொடர்ந்து வருகை தாருங்கள்!

 9. கொழுக் மொழுக் என்று இருக்கும் குழந்தை தான் ஆரோக்கியமான குழந்தை என்று நினைத்து அதற்கு தேவைக்கும் அதிகமான உணவை புகட்டுவது தவறு! இது குழந்தை வளர்ப்பில் மிக முக்கியமாக குறிப்பிட பட வேண்டிய ஒன்று! இதை வலியுறுத்தி எழுதிய உங்களுக்கு எனது பாராட்டுக்கள் 🙂

 10. குழந்தை வளர்ப்பு பற்றி அழகாகவே சொல்ல ஆரம்பித்துள்ளீர்கள். பலருக்கும் பயன் படக்கூடும். குழந்தை அதிக குண்டாக இல்லாமல் ஆரோக்யமாக இருப்பது தான் நல்லது. மிகவும் பயனுள்ள பதிவு. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

  1. வாருங்கள் ராஜி! நிஜம்தான். அதற்காக உணவை திணிக்கக் கூடாது இல்லையா?

   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

   உங்கள் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்.

 11. இன்றைய இளம்பெண்களுக்கு உங்களைப்போன்ற அனுபவசாலிகள் சொல்லித்தர வேண்டியது நிறைய உள்ளது வாழ்த்துக்கள் அனால் காது கொடுத்து கேட்பார்களா என்றுதான் சந்தேகமாக உள்ளது .ஆனாலும் நான் பின் தங்கிவிடக்கூடாது என்று நீங்கள் நினைப்பது இளம் பெண்கள் புரிந்து கொள்ளட்டும்

  1. வாருங்கள் மின்னல் நாகராஜ்!
   நாம் சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட வேண்டியதுதான், இல்லையா? கொஞ்ச காலத்திற்குப் பிறகு நிச்சயம் புரிந்து கொள்வார்கள்.

   வருகைக்கும் கருத்துப் பரிமாற்றத்திற்கும் நன்றி!

 12. Howdy! This blog post could not be written much better!

  Reading through this post reminds me of my previous roommate!
  He continually kept talking about this. I will forward
  this information to him. Pretty sure he’s going to
  have a great read. Many thanks for sharing!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.