அசைவ சமையல், கோழிக்கறி உணவுகள், சமையல், சித்த மருத்துவம், நாட்டுக் கோழி மிளகு சாறு, நீங்களும் செய்யலாம், பனிக் கால உணவு, முன் பனிகால சிறப்பு உணவுகள்

பனிக் கால உணவு- நாட்டுக் கோழி மிளகு சாறு

எடை கூடுவதற்காக ஹார்மோன் மருந்துகள் செலுத்தப்படும் பண்ணை கோழிகள் மூலமாக, நமக்கு உடல் எடை கூடுவதிலிருந்து மலட்டுத்தன்மை ஏற்படுவதுவரை ஏராளமான குறைபாடுகள் ஏற்படுகின்றன.

2

நாட்டுக் கோழிக் கறிக்கு இணையான சுவையும் சத்தும் பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழியில் இருப்பதில்லை. இதை எல்லோருமே ஒப்புக் கொண்டாலும் நாட்டுக் கோழி கிடைப்பதும் அரிது, விலையும் அதிகம் என்பதால் பண்ணைக்கோழியையே வாங்கி உண்கிறோம். சுவை, சத்து ஒருபுறம் இருந்தாலும் எடை கூடுவதற்காக ஹார்மோன் மருந்துகள் செலுத்தப்படும் பண்ணை கோழிகள் மூலமாக, நமக்கு உடல் எடை கூடுவதிலிருந்து மலட்டுத்தன்மை ஏற்படுவதுவரை ஏராளமான குறைபாடுகள் ஏற்படுகின்றன. இதை அறிவுறுத்தும் வகையிலேயே   ‘4 பெண்கள்’ தளத்தில் வெளியாகும் கோழிக்கறி உணவுகள் அனைத்தும் நாட்டுக்கோழியை மையப்படுத்தியே இருக்கும்.
கோழிக்கறி உடலுக்கு வெப்பத்தை உண்டாக்கக்கூடியது என்பதால் பனிக்கால உணவில் இதையும் சேர்த்துக் கொள்ளலாம். நம் பாரம்பரிய சித்த மருத்துவத்தில் மிளகு ஒரு முக்கியமான மருந்து. சளி, காய்ச்சல், தொண்டை கறகறப்பு உள்ளிட்ட குளிர் மற்றும் பனிக் கால பிரச்னைகளுக்கு சிறந்த தீர்வாகச் சொல்லப்படுகிறது. இவை இரண்டும் சேர்ந்த நாட்டுக் கோழி மிளகுச் சாறு எப்படி செய்வது என்பதைப் பார்க்க இருக்கிறோம்…

தேவையானவை
(3 நபர்களுக்கு)
எலும்புகளோடு கூடிய நாட்டுக் கோழி கறி- 1/4 கிலோ
சிறிய வெங்காயம் -8
மிளகு- 2 தேக்கரண்டி
சீரகம் -1 தேக்கரண்டி
இஞ்சி -சிறு துண்டு
பூண்டு- 6 பற்கள்
நாட்டுத் தக்காளி -1
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
கல் உப்பு – ருசிக்கேற்ப
கொத்தமல்லித் தழை – ஒரு கைப்பிடியளவு

செய்முறை
கறியை சுத்தமாக கழுவவும். சிறிய வெங்காயத்தை தோல் நீக்கி, நீரில் அலசி வையுங்கள். இஞ்சி, பூண்டு நசுக்கி வையுங்கள்.   தக்காளியை வெட்டிக் கொள்ளுங்கள். மிளகு, சீரகத்தை ஒன்றிரண்டாகப் பொடித்து வையுங்கள்.
ஒரு அகலமான பாத்திர(குக்கரில்)த்திரத்தில் 4 தம்ளர் நீர்விட்டு, கறி, வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, தக்காளி, பொடித்த மிளகு, சீரகம், மஞ்சள் தூள், கல் உப்பைப் போட்டு கிளறுங்கள்.
அடுப்பை மிதமான தீயில் வைத்து பாத்திரத்தை மேலே வையுங்கள். கறி வெந்து வரும் வரை (20லிருந்து 25 நிமிடங்கள் ஆகலாம்) வேகவிடுங்கள். கறியில் இருக்கும் கொழுப்பின் மணத்தோடு, மிளகின் மணமும் சேர்ந்து  புதுவித மணத்தை உண்டாக்கும். அந்த சமயம் கொத்தமல்லித்தழைத் தூவி பாத்திரத்தை இறக்குங்கள். குக்கரில் எனில் 4 விசில் வரை விட்டால் போதும்.

1a
மண்ணின் மணம் வீசும் நாட்டுக் கோழி மிளகு சாறு, நிச்சயம் உங்கள் எல்லோரையும் சுண்டி இழுக்கும்!

Advertisements

“பனிக் கால உணவு- நாட்டுக் கோழி மிளகு சாறு” இல் 8 கருத்துகள் உள்ளன

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.