சீட்டு, சேமிப்பு, நிதி நிர்வாகம், நீங்களும் செய்யலாம், பகுதி நேர வருமானம், வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம், வீட்டு பட்ஜெட்

நீங்களும் சீட்டு நடத்தலாம்!

நீங்கள் மாதாமாதம் வீட்டுக்கு பட்ஜெட் போட்டு செலவு செய்யும் பெண்ணா? பணத்தை சிக்கனமாகக் கையாண்டு, அதே சமயம் தேவையான செலவுகளைச் செய்து எவ்வளவு பணத்தை சேமிக்கிறீர்கள் என்கிற கணக்கு வழக்குகளை எழுதி வைக்கும் பழக்கம் உண்டா? இந்த ரெண்டு கேள்விகளுக்கும் உங்களிடமிருந்து ‘ஆம்’ என்று பதில் வந்தால் சீட்டு நடத்துவற்கான அடிப்படைத் திறமை உங்களிடம் இருக்கிறது, வாழ்த்துக்கள்!

பெண்கள் பணவிஷயத்தில் நாணயமானவர்கள் என்கிற பாஸிடிவ் விஷயத்தைப் பயன்படுத்தி நீங்களும் சீட்டு ஆரம்பிக்கலாம் அதற்கான வழிமுறைகளைப் பார்க்கப்போகிறோம்… சீட்டுப் பிடிப்பதற்கு ஒரு அடிப்படையான தகுதி, உங்களுக்கு நிதி நிர்வாகம் தெரிந்திருக்க வேண்டும் என்பதுதான். உங்களுக்கு நிதி நிர்வாகத் திறமை அதாவது பணத்தை கையாளும் திறமை இருக்கிறதா என்பதை எப்படி கண்டுபிடிப்பீர்கள்? ரொம்பவும் சிம்பிளான வழி இருக்கிறது… நீங்கள் மாதாமாதம் வீட்டுக்கு பட்ஜெட் போட்டு செலவு செய்யும் பெண்ணா? பணத்தை சிக்கனமாகக் கையாண்டு, அதே சமயம் தேவையான செலவுகளைச் செய்து எவ்வளவு பணத்தை சேமிக்கிறீர்கள் என்கிற கணக்கு வழக்குகளை எழுதி வைக்கும் பழக்கம் உண்டா? இந்த ரெண்டு கேள்விகளுக்கும் உங்களிடமிருந்து ‘ஆம்’ என்று பதில் வந்தால் சீட்டு நடத்துவற்கான அடிப்படைத் திறமை உங்களிடம் இருக்கிறது, வாழ்த்துக்கள்!

சரி… இனி அடுத்த கட்டத்துக்குப் போவோம். நீங்கள் சீட்டு ஆரம்பிக்க உங்களைப் பற்றி, உங்கள் பகுதியில் இருக்கும் பெண்களுக்கு நல்ல அறிமுகம் இருக்க வேண்டும். ஐந்தாண்டுகளுக்கு மேல் ஒரே பகுதியில் வசித்திருந்தால் மட்டுமே அக்கம்பக்கம் உள்ள பெண்களிடம் உங்களைப் பற்றி ஒரு அபிமானம் உருவாகியிருக்கும். ஒரு விஷயத்தை நினைவு வைத்துக்கொள்ளுங்கள்… தனிநபர்கள் நடத்தும் சீட்டு முழுக்க முழுக்க நம்பிக்கையின் பேரில் மட்டுமே நடத்தப்படுவது. பண விஷயம் என்பதால் நீங்கள் நாணயமாக நடந்துகொண்டால் உங்களுங்களுக்கு நல்ல பேரும் புகழும் தேடி வரும். இதை தவறவிடும் பட்சத்தில் அதற்கான எதிர்விளைவுகளையும் நீங்கள் சந்திக்க வேண்டிவரும். எனவே, ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வையுங்கள். ஆரம்பகட்டத்தில் இப்படி சீட்டு, சிறிய  அளவில் ஃபைனான்ஸ் என்று நாணயமாக நடந்துகொண்ட தனிநபர்களின் நல்ல பேரும் உழைப்பும்தான் பல பெரிய வங்கிகளை உருவாகியிருக்கின்றன. இப்போது தேசிய வங்கியாக உருவெடுத்திருக்கும் இந்தியன் வங்கிகூட அதற்கு ஒரு சிறந்த உதாரணம்தான்! ஸோ… மற்றவர்களின் நம்பிக்கையை பெறுவதில் எப்போதும் கவனமாக இருங்கள்.

அடுத்து… உங்களிடம் சீட்டில் சேர விரும்புபவர்களை எந்த அடிப்படையில் சேர்த்துக் கொள்வீர்கள்?

அடுத்த பதிவில் எழுதுகிறோம்…

“நீங்களும் சீட்டு நடத்தலாம்!” இல் 6 கருத்துகள் உள்ளன

 1. எனக்கு இந்தச் சீட்டு பற்றி அவ்வளவாக தெரியாது. ஆனால் பல பெண்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று மட்டும் தெரியும். உங்களது அடுத்த பதிவுக்குக் காத்திருக்கிறேன்.

  உங்கள் வலைத்தளத்தின் பெயர் நான்கு பெண்கள் – ஆ அல்லது For பெண்கள்- (பெண்களுக்காகவா?) சும்மா தெரிந்து கொள்ள ஒரு ஆவல் தான்!

  1. வருகைக்கு நன்றி ரஞ்சனி. நம்பிக்கையான முறையில் சீட்டு நடத்துவது பெண்களுக்கு பகுதிநேரமாகவோ,. வீட்டிலிருந்தபடியோ செய்ய ஏற்ற ஒரு தொழில். இதன் நுணுக்கங்களை எளிய முறையில் நாங்கள் தர இருக்கிறோம். தொடர்ந்து படியுங்கள்.
   4 பெண்கள் சேர்ந்து சமூகத்தையும் தங்களையும் மேம்படுத்தும் வகையில் என்னவெல்லாம் செய்யலாம் என்கிற முனைப்பில் தான் இந்த தளத்திற்கு ‘4 பெண்கள்’ என்று பெயர் வைத்தோம். இதில் உங்களைப் போன்றவர்களும் இணைய வேண்டும் என்பதே எங்களின் விருப்பம்.

 2. உங்களுடன் இணையத் தயார். என்னமாதிரியான பங்களிப்பு தேவை என்று சொல்லுங்கள். உதவத் தயார்.
  நான் நகைச்சுவைக்காக கேட்டேன். ‘நான்கு பெண்கள் – பெண்களுக்காக’ என்று புரிந்தது.
  விவரங்கள் தெரிவிக்கவும்.

 3. நான்கு பெண்கள் என்ற உங்கள் இணையப்பதிவைப் பார்த்தேன். மிக்க மகிழ்ச்சி. நான் பணியாற்றும் அலுவலகத்தில் கூட சீட் தொடர்பாக நிறைய பேசுவார்கள். ஆனால், அதுபற்றி எனக்கு ஒன்றுமே புரியாது. ஒரு குத்துமதிப்பாக இதுகுறித்து இணையத்தில் ஏதாவது இருக்கிறதா? எனத் தேடினேன். உங்கள் இணையத்தைப் பார்த்தேன். இதன் நுணுக்கங்களை தெரிந்துகொள்ள வேண்டும் என விரும்புகிறேன். அருள்கூர்ந்து போதிக்கவும். இன்றைக்கு பணம் என்பது ஏழைகளுக்கு எட்டாக்கனியாகவே உள்ளது. ஆனால், பரபரப்பான சூழல்களை பார்க்கும்போது ஏதோ வளம் நிறைய இருக்கிறது போலவும் அனைவரும் இன்பத்தில் திளைப்பது போலவும் இருக்கிறது. என்னைப் போன்ற ஏழைஎளியவர்களுக்கு சேமிப்பு, சீட்டு போன்றவைதான் ஓரளவிற்கு உயர்வைத் தரும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கையாக இருக்கிறது.

  1. நன்றி திரு. கிரிதரன். சீட்டு நல்ல சேமிப்பு முறைதான். ஆனால் மிகுந்த கவனத்துடன் சீட்டுப் பிடிக்கும் ஆட்களை தேர்வு செய்யவும்.இந்தப் பதிவையும் படிக்கவும்.

   நீங்களும் சீட்டு நடத்தலாம்! – 2

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.